இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை ,கடல் நிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 21ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை … Read more

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு

எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையைில், சீமெந்தின் விலைகளை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். 50 கிலோ எடை கொண்ட ஒரு சீமெந்து பொதி தற்போது சந்தையில் 2 ஆயிரத்து 300 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 350 ரூபாய் வரையான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், சீமெந்தின் புதிய விலையானது 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் கூறியுள்ளனர். சீமெந்து விலைகள் அதிகரிக்கப்பட்டமை காரணமாக … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட காப்புறுதி தொடர்பான செயலமர்வு

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் ,மட்டக்களப்பு மாவட்ட செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு தடைசெய்யப்பட்ட காப்புறுதித் திட்டங்கள் தொடர்பான  செயலமர்வொன்று இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் கே.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை கிளை முகாமையாளர் எஸ்.பிரசாந்த் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான ரீ.சஞ்சீவன், கே.தர்மேந்திரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு விளக்கமளித்தனர். செயலமர்வில் வெளிக்கள உத்தியோகத்தர்கள் 100 பேர் … Read more

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்  

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரணை  செய்வதற்காக அந்நிறுவனம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப் குழு) அழைக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் (பேராசிரியர்) சரித ஹேரத் தெரிவித்தார். இதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆஜராகுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 21 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஏலத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை கோப் குழு முன்னிலையில் அழைக்கவுள்ளதாக கோப் … Read more

நாடாளுமன்றத்திற்கு வந்தார் பசில் (Photo)

முன்னாள் நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் காணப்பட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டார். முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. எனினும், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் தரப்பில் இருந்து உறுதி செய்யப்படவில்லை. பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. பல்வேறு செய்திகளுக்கு … Read more

வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான நான்கு கட்டளைகளுக்கு சபை அனுமதி

வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்ட நான்கு கட்டளைகளுக்குப் பாராளுமன்றம் இன்று (21)  அனுமதி வழங்கியது. இதற்கமைய, 2021.11.23 திகதிய 2255/8 ஆம் இலக்க, 2021.12.21ஆம் திகதிய 2259/9 ஆம் இலக்க, 2021.12.31ஆம் திகதிய 2260/72 ஆம் இலக்க, 2022 சனவரி 11 ஆம் திகதிய 2262/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட கட்டளைகள் விவாதம் இன்றி சபையில் அங்கீகரிக்கப்பட்டன.   கீழ்வரும் இணைப்புக்களில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்களைப் … Read more

அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களிடம் சவேந்திர சில்வாவின் விசேட கோரிக்கை

வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாது போக்குவரத்துகளை தடையின்றி மேற்கொள்ள உதவுமாறு இலங்கை இராணுவம் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.  பொலிஸ் மா அதிபரின் (IGP) வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை இராணுவம் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடையின்றி செல்வதற்கு இராணுவ மற்றும் பிற படைகளை அனுப்பியுள்ளதாக  இராணுவத் தளபதி  ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில், இலங்கையின் … Read more

மட்டக்களப்பு ,சியோன் தேவாலயத்தில் விசேட ஆராதனைகள்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளின் மூன்றாம் ஆண்டை நினைவுகூறும் முகமாக மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று (21) திகதி காலை 8.30 மணிக்கு விசேட தேவ ஆராதனைகள் இடம்பெற்றன. சியோன் தேவாலயத்தில் கடந்த 2019 ஆண்டு இதே நாளில் 31 உயிர்கள் சியோன் தேவாலயத்தில் பேர் உயிரிழந்ததை நினைவு கூறும் முகமாகவே இன்றைய தினம் சியோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தலைமையில் விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றன.