மட்டக்களப்பு ,சியோன் தேவாலயத்தில் விசேட ஆராதனைகள்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளின் மூன்றாம் ஆண்டை நினைவுகூறும் முகமாக மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று (21) திகதி காலை 8.30 மணிக்கு விசேட தேவ ஆராதனைகள் இடம்பெற்றன. சியோன் தேவாலயத்தில் கடந்த 2019 ஆண்டு இதே நாளில் 31 உயிர்கள் சியோன் தேவாலயத்தில் பேர் உயிரிழந்ததை நினைவு கூறும் முகமாகவே இன்றைய தினம் சியோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தலைமையில் விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றன.

போராட்டங்களை தடுக்க நாடு முடக்கப்படுகிறதா..! வெளியானது அரசாங்கத்தின் அறிவிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வரும் போராட்டங்களை தடுக்கும் நோக்கில் முகக் கவச பயன்பாடு நீக்கப்படவில்லை புதிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். போராட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், முகக் கவசங்களை அணிவது கட்டாயமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது என்ற வகையில் சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். எனினும் இந்த செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கோவிட் தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக … Read more

மட்டக்களப்பில் டெங்குநோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குநோய் அதிகரித்து வருகின்றது. கடந்த ஏப்ரல் 09 ஆந் திகதி தொடக்கம் ஏப்ரல் 15 ஆந் திகதிவரையான காலப்பகுதியில் 36 பேர் டெங்குநோய் தாக்கத்திற் குள்ளாகியுள்ளனர். இந்தவாரம் டெங்குதாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 நோயாளர்களும்இ களுவாஞ்சிக்கடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 நோயாளர்களும்இ ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 நோயாளர்களும்இ செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 நோயாளர்களும்இ கோரளைப்பற்று மத்தி சுகாதார … Read more

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது கடமையைப் பொறுப்பேற்றார்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்  (பிள்ளையான்) நேற்று (20) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கை மக்களுக்கு இராணுவத் தளபதி சவேந்திர விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, நாட்டு மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  நாடளாவிய ரீதியில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு இராணுவத்தினருக்கு தமது ஒத்துழைப்பை வழங்குமாறு இராணுவத் தளபதி  மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்கு இராணுவத்தினர் உட்பட முப்படையினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.  Source link

ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கினால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது

ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கினால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்படமாட்டாது என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.    

முடிவடைந்தது கோட்டாபயவுக்கு கொடுத்த கால அவகாசம்…! இன்று மாலை வெளிவரவுள்ள வீடியோ ஆதாரம்: நடக்கப் போவது என்ன…!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக  சர்வதேசத்தின் பார்வை இலங்கை மீது திரும்பியுள்ளது.  இந்த நெருக்கடி நிலையால் பொதுமக்கள் கடும்  அதிருப்திக்கு உள்ளான நிலையில் இந்த அதிருப்தி நிலை அரசியலிலும் பாரியதொரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.   பொருட்கள் விலையேற்றம், பற்றாக்குறை, வரிசைகளில் காத்திருப்பதன் மூலம் ஏற்பட்ட மரணங்களும் அதனால் பொதுமக்கள் அடைந்த வெறுப்புக்களுமே இன்றைய இலங்கையின் மாறுதல்களுக்கு காரணம் என்பது நிதர்சனமான உண்மை.   இலங்கை வாழ் மக்கள் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை மாத்திரம் … Read more

மழையுடனான வானிலை அடுத்த இரு நாட்களில் அதிகரிக்கும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்22ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022ஏப்ரல் 21ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டில் தற்போது நிலவும்  என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல், சப்ரகமுவ மற்றும் … Read more

இன்று முதல் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது இன்று (21) முதல் மீண்டும் கட்டாயப்படுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை நீக்க கடந்த 18 ஆம் திகதி (2022.04.18) சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இருந்தபோதிலும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நாடாளாவிய ரீதியில் பெருமளவிலான மக்கள் ஒன்று கூடுவதன் காரணத்தினால் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயப்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் … Read more