ரஷ்யா ,இந்தியாவிடமிருந்து மருத்து உபகரணங்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம்

இந்தியாவிடமிருந்து மருத்து உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு ரஷ்யா தீர்மானித்துள்ளது. இந்தியாவில் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் ரஷ்ய அதிகாரிகள் இது பற்றி எதிர்வரும் 22 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதனால் அந்த நாட்டின் வணிகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் சீனாவிலிருந்து மருத்துவ உபகரணங்களின் இறக்குமதியும் ரஷ்யாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியாவிடமிருந்து மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு ரஷ்யா தீர்மானித்துள்ளது. இதேவேளை,மீதான தாக்குதலை தொடங்கிய … Read more

பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ய உத்தரவிட்ட அமைச்சர் – எம்.பி வெளியிட்ட முக்கிய தகவல்

பொருளாதார நெருக்கடி எதிராக போராடியவர்களுக்கு எதிராக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் ஒருவர் உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரம்புக்கனையில் நேற்று முன்தினம் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்திரத்னவின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதென தெரியவந்துள்ளது. அதற்கான பிரதான அனுமதியை கண்டி மாவட்டத்தை சேர்ந்த புதிய போக்குவரத்து அமைச்சரே வழங்கியுள்ளதாக காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கீர்த்தி ரத்ன என்பவர் மேலதிக பொலிஸ் மா … Read more

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்: இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று, இன்றுடன் மூன்றுஇ வருடங்கள் பூர்த்தி ஆகிறது. உயிர்த்த ஞாயிறு தினம் என்பது கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமான தினமாகும். கடந்த 2019ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில் ,கிறிஸ்தவ கத்தோலிக்க தேவாலயங்கயில் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் 250இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 500இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சில முக்கிய ஹோட்டல்களுக்கும் பயங்கரவாத தாக்குல் நடத்தப்பட்டது. . இந்த புனித நாளில் கிறிஸ்தவ … Read more

ரம்புக்கனயில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு நீக்கம்

 ரம்புக்கன பகுதியில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. ரம்புக்கன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 19ம் திகதி மாலை முதல் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இவ்வாறு அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை ஏற்றத்தினை கண்டித்து ரம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்தமை … Read more

வீசா கட்டணத்தில் திருத்தம் – அமெரிக்க தூதுகரம் விசேட அறிவிப்பு

டொலருக்கு நிகரான தற்போதைய ரூபாயின் ஏற்ற இறக்கம் காரணமாக வீசா கட்டணத்தை திருத்த தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. ரூபாவில் விசா மற்றும் ஏசிஎஸ் சேவைக் கட்டணங்கள் திங்கள்கிழமை (25) முதல் திருத்தப்படும் என தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ஹிக்கடுவை பிரதான வீதியை மறித்து டயர்களை எரித்து போராட்டம் (VIDEO)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டின் பல பாகங்களில் இன்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்த வகையில்,ஹிக்கடுவை பிரதான வீதியை போராட்டக்காரர்கள் மறித்து டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது குறித்த வீதியின் ஊடாக பயணித்த சுற்றுலா பயணிகளின் பேருந்தினையும் இடைமறித்து வேறு வழிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதேவேளை, பொருளாதார நெருடிக்கடி காரணமாக நேற்றைய தினம் எரிபொருள் விலை மீளவும் அதிகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து … Read more

மலேரியாவை ஒழித்த நாடு என்ற வெற்றியை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும்

மலேரியா நோயை இல்லாதொழித்த நாடாக இலங்கை பெற்றுள்ள வெற்றியை தொடர்ந்தும் நிலை நிறுத்த வேண்டும் என்று பொது சுகாதார பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் எஸ். எம். ஆர்னோல்ட் தெரிவித்தார். உலக மலேரியா தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்… உலக மலேரியா தினம் ஏப்ரல் 25ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. … Read more

ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென தீர்மானம் – பல கட்சிகளின் தலைவர்கள் முடிவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு பல கட்சிகளின் தலைவர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இதேவேளை, அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரினால் ஜனாதிபதி பதவி விலகத் தயார் என சபாநாயகர் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் இன்று தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையிலேயே, ஜனாதிபதிக்கு … Read more

பிரியந்த குமார தியவதனகே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு

பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராகப் பணியாற்றிய இலங்கைப் பிரஜை பிரியந்த குமார தியவதனகே கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு 2022 ஏப்ரல் 18ஆந் திகதி பாகிஸ்தானின் குஜ்ரன்வலாவில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வரவேற்கின்றது.   நாற்பத்தி ஒன்பது வயதான பிரியந்த குமார தியவதனகே மிகவும் சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் மத நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2021 டிசம்பர் … Read more