கோட்டாபய வழங்கிய அமைச்சு பதவிகள் – முன்னாள் அமைச்சர்கள் பலரும் கடும் அதிருப்தி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தற்போது அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது எழுந்த சர்ச்சையே இதற்குக் காரணம் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இளைஞர்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்படும் என கூறப்பட்ட போதிலும், முன்னாள் அமைச்சர்கள் குழுவிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சமூகத்தின் பார்வையில் திறமையற்றவர்களாகவும், ஊழல்வாதிகளாகவும் அறியப்பட்டதாக பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். புதிய அமைச்சரவையின் போது ஜனாதிபதி … Read more

மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மூன்று அறிவித்தல்கள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் ஆகியவற்றுக்கு பாராளுமன்றம் இன்று ஒப்புதல்

பாராளுமன்றம் இன்று மு.ப 10.00 மணிக்கு கூடி சில நிமிடங்களில் இடைநிறுத்தப்பட்டு கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்களுடனான கூட்டம் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. இதில் தினப்பணிகளின் கீழ் குறிப்பிட்ட வர்த்தமானிகளை விவாதத்துக்கு உட்படுத்தாது ஒப்புதல் வழங்க இணக்கம் காணப்பட்டது. இன்றையதினத்துக்கான வாய்மூல விடைக்கான கேள்விகள் பிறிதொரு தினத்துக்கு ஆற்றுப்படுத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார். தினப்பணிகளின் கீழ், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்ட … Read more

கோட்டாபய பதவி விலக வேண்டும் – சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் தேரர்

ரத்துபஸ்வெலயில் நீருக்கான போராட்டத்தை வழிநடத்திய தெரிபெஹே சிறிதம்ம தேரர் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இதேவேளை, ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபரை நினைவுகூர்ந்து காலிமுகத்திடலில் போராட்டமொன்று இடம்பெற்றது. அத்துடன், உயிரிழந்த நபருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். காலி முகத்திடல் மக்கள் போராட்டம் இன்று 12வது நாளாக நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் … Read more

உலக வங்கியின் தென்னாசிய பிராந்தியத்திற்கான உபதலைவருக்கும், இலங்கை குழுவினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை.

நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்ஹ, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன ஆகியோருக்கும் உலக வங்கியின் தென்னாசிய பிராந்திய நாடுகளுக்கான உபதலைவரான ஹாட்ரிவிங் ஷாபருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் பொருளாதார ஸ்திரத் தன்மையை ஏற்படுத்துவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நிலையான தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு உலக வங்கி ஒத்துழைப்பு வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களைத் தொடர்புபடுத்தி கணினி கட்டமைப்பை உருவாக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவும்

மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் இறைவரித் திணைக்களம் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து மதுவரி வருவாயைக் கணக்கிடும் செயல்முறையை ஒழுங்குபடுத்தும் கணினி கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) மதுவரித் திணைக்களத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளது. மதுவரித் திணைக்களம் தொடர்பான 2020ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயற்திறன் குறித்து ஆராயும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாண தலைமையில் அரசாங்கக் கணக்குகள் … Read more

அரசாங்கத்துக்கு எதிராக நாடெங்கும் தொடரும் போராட்டங்கள்: ரம்புக்கனை அராஜகத்துக்கு கண்டனம் (Photos)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டின் பல பாகங்களில் இன்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கும் கடும் கண்டனக்கணைகள் தொடுக்கப்பட்டன. அரச பயங்கரவாதம் மூலம் போராட்டத்தை ஒடுக்க முடியாது என மக்கள் கோஷங்களை எழுப்பினர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் 12 ஆவது நாளாகவும் இன்று போராட்டம் தொடர்கின்றது. … Read more

கோவாவில் நடைபெறும் NATPOLREX-VIII பயிற்சிகளில் இலங்கை கரையோரக் காவல் படையின் சுரக்‌ஷா பங்கேற்பு

தேசிய மட்டத்திலான மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தயாராகும் வகையில் இந்திய கரையோர காவல் படையால் 2022 ஏப்ரல் 19 முதல் 27 ஆம் திகதி வரை கோவாவில் NATPOLREX-VIII பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிராந்தியத்திலுள்ள பல்வேறு நாடுகளின் கப்பல்களும் பிரதிநிதிகளும் இந்த பயிற்சியில் கலந்து கொள்கின்றனர். 2.    சமுத்திர சூழலை பாதுகாப்பதற்கும் அதன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான ஒன்றிணைந்த முயற்சிகளை வலுவாக்கும் இலக்குடன் பன்முகப்படுத்தப்பட்ட ஈடுபாட்டின் ஊடாக பிராந்திய ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதற்காக இலங்கை கரையோர காவல் … Read more

இலங்கையில் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்: நிலைமை மேலும் மோசமடையலாம்! ரணில் அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென முன்னாள் பிரதமர்  ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ​​ ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நாட்டில் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என அவர் எச்சரித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் … Read more