இலங்கையில் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்: நிலைமை மேலும் மோசமடையலாம்! ரணில் அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென முன்னாள் பிரதமர்  ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ​​ ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நாட்டில் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என அவர் எச்சரித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் … Read more

நிலக்கரி கப்பல்களுக்கு டொலர் செலுத்தப்பட்டது – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு

நுரைச்சோலை கடற்கரையினை வந்தடைந்த இரண்டு கப்பல்களுக்கான கொடுப்பனவுகளை எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு செலுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் (ஊநுடீநுரு) இன்று (20) தெரிவித்துள்ளது. ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக்தொன் நிலக்கரியுடன் வந்துள்ள இரண்டு கப்பல்களுக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  

தீவிரமடையும் நிலை: களமிறக்கப்படும் படையினர்

தேவை ஏற்படின் எரிபொருள் புகையிரதங்களுக்கு இலங்கை விமானப்படை பாதுகாப்பு வழங்கும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் எரிபொருள் பவுஸர்களுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக சமூக மற்றும் அரசியல் பரப்பில் பாரிய அதிர்வலைகள் ஏற்பட்டுள்ள நிலையில்  இலங்கையின் நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.  தினமும் நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில் நேற்றையதினம் ரம்புக்கனை பிரதேசத்தில் எரிபொருள் தாங்கிய … Read more

பொலிசார் தமக்குள்ள அதிகாரத்துக்கும் அப்பால் செயற்பட்டார்களா கண்டறிவதற்கு மூவர் அடங்கிய குழு

றம்புக்கணையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் தமக்குள்ள அதிகாரத்துக்கும் அப்பால் செயற்பட்டார்களா என்பது குறித்து கண்டறிவதற்கு மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார். இந்த குழுவில் இராஜாங்க அமைச்சின் செயலாளர், அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து பொது மக்களும் ,அமைதியை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறும் வன்முறையை தவிர்க்குமாறும், … Read more

எடையை குறைத்து நடிகையாக மாறிய தொகுப்பாளினி பிரியங்கா….ஹீரோ யாரு தெரியுமா?

தொகுப்பாளினி பிரியங்கா தற்போது விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கும் தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. தொலைக்காட்சியில் எக்கச்சக்கமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. மேலும் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது….என்ன குழந்தை தெரியுமா? தீயாய் பரவும் தகவல் அது மட்டும் இன்றி, பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்து கொண்டு 100 … Read more

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது குறித்து சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது குறித்து சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்… திறந்தவெளிகளில் மக்கள் நடமாடும்போது, முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை. அத்துடன், வெளியாட்களுடன் சம்பந்தப்பட்ட வைபவங்கள், விழாக்கள், வியாபார நிலையங்கள் மற்றும் பொதுப்போக்குவரத்துக்களைப் பயன்படுத்தும்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். மேலும், முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று குறிப்பிடுவது, முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற … Read more

ரம்புக்கனை கலவரம்: சிசிடிவி காட்சிகளை வெளியிடுமாறு சபாநாயகரிடம் நாமல் தெரிவிப்பு

எந்தவொரு தாக்குதலையும் அரசாங்கம் மன்னிப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.   நாடாளுமன்றத்தில் இன்னைறயதினம் கருத்து வெளியிடும்போதே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  நேற்றையதினம் ரம்புக்கனை நகரில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு இதன்போது நாமல் ராஜபக்ச வருத்தம் வெளியிட்டுள்ளார்.  நேற்றைய சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணைக்கு மேலதிகமாக, முச்சக்கர வண்டிக்கு பொலிஸார் தீ வைப்பது மற்றும் எரிபொருள் பவுசரை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களைக் காட்டுவது உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவும் சம்பவம் தொடர்பான காணொளிகள் பகுப்பாய்வு செய்யப்பட … Read more

இன்றைய மின் துண்டிப்பு நேரம்

நாடளாவிய ரீதியில் இன்றும் (20) 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள்; மின் துண்டிப்பை மேற்கொள்ள மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இரண்டு முக்கிய வலயங்களில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டின் அனைத்து வலயங்களிலும் (A, B, C, D, E, F, G, H, I, J, K, L,P, Q, R, S, T, U, V … Read more

இலங்கை வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை

மயக்க மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அரசாங்க வைத்தியசாலைகளில் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம்  வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக புற்றுநோய் மற்றும் விபத்துக்கள் தொடர்பான சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக அவர் … Read more