இலங்கை வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை

மயக்க மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அரசாங்க வைத்தியசாலைகளில் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம்  வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக புற்றுநோய் மற்றும் விபத்துக்கள் தொடர்பான சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக அவர் … Read more

எரிபொருள் பவுசர் தீயிடப்படுவதை தடுப்பதற்காக குறைந்த அதிகாரம் பயன்படுத்தப்பட்டது – பொலிஸ் மா அதிபர்

றம்புக்கணை ஆர்ப்பாட்டக்காரர் மத்தியில் 30,000 லீற்றர் எரிபொருளுடனான பவுசர் ஒன்றை தீயிடுவதற்கு சிலர் மேற்கொண்ட முயற்சியை தடுப்பதற்கும் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தத்தை தடுப்பதற்கும் பொலிசார் ஆகக்குறைந்த அதிகாரத்தை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். றம்புக்கணை பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று இந்த விடயங்களை பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். இதேவேளை ,றம்புக்கணை ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் தங்களது அதிகாரத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினார்களா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு … Read more

றம்புக்கணை சம்பவம் – பாராளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

றம்புக்கணையில் நேற்று (19) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (20) காலை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை விடுத்து உரையாற்றினார். இதன்போது றம்புக்கணை சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோர் சார்பில் அரசாங்கம் கவலை தெரிவிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையூறு  ஏற்படுத்தினார்கள். எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று இதன்போது  அமைச்சர் குறிப்பிட்டார். இந்த சந்தர்ப்பத்தில் சபையில் கூச்சல் நிலை ஏற்பட்டது.இதனால் சபை நடவடிக்கைகள் 10 … Read more

பதவி விலக தயாராகும் ஜனாதிபதி கோட்டாபய – நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்ட தகவல்

அனைத்துக் கட்சித் தலைவர்களும் தன்னை பதவி விலகுமாறு கோரினால் அதற்குத் தயார் என சபாநாயகரிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.  அனைத்துக் கட்சித் தலைவர்களும் தன்னை பதவி விலகுமாறு கோரினால் அதற்குத் தயார் என சபாநாயகரிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே சஜித் இன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் சென்று … Read more

றம்புக்கணை பொலிஸ் பிரதேசத்தில் ஊரடங்கு நீடிப்பு

றம்புக்கணை பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக நேற்று இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது ஈடுபட்டோரை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பதற்ற நிலை ஏற்பட்டது. இதன்போது ஒருவர் உயரிழந்ததுடன் 13 பொதுமக்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயங்களுக்கு உள்ளான 15 பொலிசார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி மஹிரி பிரியங்கனி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அமைதி நிலையை நிலைநாட்டுவதற்காக மீண்டும் அறிவிக்கும் வரையில் றம்புக்கணை பொலிஸ் எல்லைப் … Read more

பொது மக்களுக்கு பொலிசார் விசேட வேண்டுகோள்

எரிபொருளை எடுத்துச்செல்லும் பவுசர்களுக்கு இடையூறு செய்வதை அல்லது அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவிக்கையில், எரிபொருள் விநியோகத்தை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக அதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் எரிபொருளை எடுத்து செல்லும் பவுசர்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம்  எனவும் … Read more

ரம்புக்கனை தாக்குதல் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார். எரிபொருள் கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர், ரம்புக்கனையில் இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து தாம் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  நாட்டிற்கு எப்போதும் மிகுந்த மரியாதையுடன் சேவையாற்றும் இலங்கை பொலிஸாரால் பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தான் நம்புவதாக அவர் … Read more

இன்று தேசிய எதிர்ப்பு தின போராட்டம்: முடங்கப்போகிறதா இலங்கை…!

இலங்கையில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்றைய தினம் தேசிய எதிர்ப்பு தின போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்றைய தினத்தை அதாவது ஏப்ரல் 20ஆம் திகதியை தேசிய போராட்ட நாளாக அறிவித்து அனைத்து பணியிடங்களிலும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனைத்து தொழிற்சங்கங்களும் முடிவு செய்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுகளினால் நாடு பாரிய … Read more

மருந்துத் தட்டுப்பாட்டினால் எவரும் உயிரிழக்கவில்லை –  சுகாதார அமைச்சர் 

மருந்துத் தட்டுப்பாட்டினால் இதுவரை எந்தவொரு மரணமும் இடம்பெறவில்லை; என்று  சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (19)  இடம்பெற்ற மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகளும் விளையாட்டின் போது ஊக்கமருந்துகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர்  ,நாட்டிற்குத் தேவையான மருந்து வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியும், செஞ்சிலுவைச் சங்கமும் இலங்கைக்கு உதவுகின்றன. இந்தியாவின் கடனுதவியின் கீழ் தேவையான மருந்து வகைகளை இறக்குமதி செய்யவும் … Read more

சர்வதேசத்தின் தலைப்பாக மாறிய இலங்கை – பாரிய நெருக்கடியில் கோட்டாபய

றம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற கலவரத்துடன், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மற்றும் அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசத்தின் கவனம் தீவிரமடைந்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு பிரபல சர்வதேச ஊடகங்கள் தலைப்பு செய்திகளாக செய்தி வெளியிட்டுள்ளன. எரிபொருள் பவுஸரிற்கு தீ வைக்க முயற்சித்த போது ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் குறைந்த பட்ச அதிகாரத்தை பயன்படுத்தி கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். … Read more