இலங்கை பொலிஸார் வெட்கப்பட வேண்டும்: ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் சீற்றமடைந்த மஹேல

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸார் வெட்கப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன  தெரிவித்துள்ளார்.  ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தினை கடுமையாக சாடியுள்ள மஹேல  இதுதான் ஜனநாயகமா என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.  மக்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் சொத்துக்களை சேதப்படுத்தினால் அவர்களை கைது செய்யலாம், ஆனால் அவர்களை சுடுவதற்கு எந்த காரணமும் இல்லை. இது ஜனநாயகமா? இதுதான் நாட்டின் … Read more

இறம்புக்கணை பொலிஸ் எல்லைப் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஊரடங்கு

இறம்புக்கணை பொலிஸ் எல்லைப் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இறம்புக்கணை பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் வாகனங்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்த வேண்டும். இந்தப் பிரதேசத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.    

கொவிட் பாதிப்பு இலங்கையில் தொடருகிறது: பெற்றோர் பிள்ளைகள் தொடர்பில் கூடுதல் கவனம் தேவை

சமூகத்தில் பரவும் கொவிட் – 19 இன் பாதிப்பு இலங்கையில் தொடர்ச்சியாக இருந்து வருவதனால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களையும், குழந்தைகளையும் பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பிரச்சாரங்களில் பங்கேற்க அழைத்துச் செல்ல வேண்டாம் என்று குழந்தைகள் நல மருத்துவ ஆலோசகர், வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ‘கொவிட்  வைரசு தொற்று  பரவுவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து காணப்படுவதால், பெற்றோர் அவதானத்துடன் செயல்பட வேண்டும். பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்’ … Read more

இலங்கையில் ஒரு நபர் வாழ போதுமான தொகை: வெளியான தகவல் (Photo)

இலங்கையில் நபர் ஒருவர் வாழ்வதற்கு மாதம் 5972 ரூபா போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.  மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.  அவர்களின் அண்மைய அறிக்கை ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 5972 ரூபா  போதுமானது என்று கூறுகிறது.  Source link

போக்குவரத்து அமைச்சருக்கும், பஸ் உரிமையாளர சங்கங்களுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை

போக்குவரத்து அமைச்சருக்கும், தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று தற்சமயம் இடம்பெறுகிறது. பஸ் உரிமையாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடி, இணக்கப்பாட்டிற்கு வருவதே நோக்கம் என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மொன்டி ரணதுங்க தெரிவித்துள்ளார். இதனிடையே பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளதனால், நாடளாவிய ரீதியில் பஸ் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை உற்பத்திகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு எதிர்பார்ப்பு

சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டாக்டர். டி வெங்கடேஸ்வரன் கடந்த மார்ச் 29 முதல் ஏப்ரல் 1 வரை புதுடெல்லிக்கு விஜயம் செய்து, இந்திய அரச அதிகாரிகள் மற்றும் வணிகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். இதன் போது இவர், வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மற்றும் இணைச் செயலாளருமான அரிந்தம் பாக்சியை செய்தித் தொடர்பாளர் அலுவலகத்தில் சந்தித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சுமுகமான உறவுகள் குறித்தும், இலங்கைக்கான இந்திய முதலீடுகளை ஊக்குவிப்பது குறித்தும் ,இலங்கையிலிருந்து இந்தியாவுக்கான … Read more

இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் இந்தியா முக்கிய நகர்வு

இலங்கைக்கான நிதி உதவிகளை துரிதமாக வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவுடன் இன்று செவ்வாய்கிழமை வொஷிங்டனில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு இலங்கைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதேவேளை இலங்கை எதிர்கொண்டுள்ள கடினமான பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்தியா வழங்கி வரும் உதவிகள் குறித்தும் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவிற்கு , நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். நிர்மலா சீதாராமன் … Read more

தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

வார இறுதியில் கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 70 ஆக இருந்தது. சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 40 ஐ விட குறைவடைந்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிக்கையின்படி நேற்று முன் தினம்(17) மேற்கொள்ளப்பட்ட ஆயிரத்து 5 பேருக்கான பிசிஆர் பரிசோதனையில் 37 பேருக்கும், நேற்றய முன்தினம்(16) 622 அன்டிஜென் பரிசோதனையில் 33 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வரை மொத்தம் 6 இலட்சத்து 62 ஆயிரத்து 864 பேருக்கு கொவிட் பரி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. … Read more

இறக்குமதி செய்யப்படும் அரிசி போன்ற பொருட்களின் மீதான வரிக் குறைப்பு பொதுமக்களுக்கு நன்மையளிக்கிறதா

சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2022 சனவரி 11 ஆம் திகதிய 2262/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு 05.04.2022 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது. மேற்படி தீர்மானத்தை கருத்தில் கொண்டு, இறக்குமதி செய்யப்படும் அரிசி போன்ற பொருட்களின் மீதான வரிக் குறைப்பு உண்மையில் பொதுமக்களுக்கு நன்மையளிக்கிறதா என்பதை ஆராய்வதில் நிதியமைச்சு … Read more

முற்றாக முடங்கியது மாவனெல்ல நகரம்: வீதியெங்கும் பற்றி எரியும் டயர்கள்

மாவனெல்ல நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் காரணமாக நகர் பகுதி முற்றாக முடங்கியுள்ளது.   வீதிகளில் டயர்கள் போன்றவற்றை பொதுமக்கள் எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வரும் நிலையில் வீதியெங்கும் டயர்கள் பற்றி எரியும் காட்சிகளையே காண முடிகின்றது.  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் கொதித்தெழுந்து அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.  அதிகரித்த விலைவாசி, பற்றாக்குறை என மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில்  பொறுத்துப் போக முடியாத பொதுமக்கள் … Read more