அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆளும்கட்சியின் முதற்கோலாசானாகக் பதவியில் கடமைகளை பொறுப்பேற்றார்

சுற்றுலா மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆளும்கட்சியின் முதற்கோலாசான் பதவியில் இன்று (19) காலை பாராளுமன்றத்தில் உள்ள ஆளும்கட்சியின் முதற்கோலாசான் காரியாலயத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.  இதன்போது, அரசாங்க சேவைகள், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் சபை முதல்வருமான கௌரவ தினேஷ் குணவர்தன, கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் கௌரவ ரமேஷ் பத்திரன, ஊடக அமைச்சர் கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ இந்திக அனுருத்த, கௌரவ பியல் … Read more

புதிய வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி கொடஹேவா கடமைகளை பொறுப்பேற்றார்

வெகுசன ஊடக அமைச்சராக நேற்று (18) பதவியேற்றுக் கொண்ட கலாநிதி நாலக கொடஹேவா இன்று (19) மாலை தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சின் பணியாளர்கள் புதிய அமைச்சரை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வின் நிமித்தம் எவ்வித விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை.  

ஜனாதிபதி மாளிகைக்கு முன் குவிக்கப்படும் இராணுவத்தினர் (Video)

கொழும்பின் பல இடங்களிலும் பாதுகாப்புப் பணிகளுக்காக அதிகளவான படையினர் பேருந்துகளின் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெறும் அரசாங்கத்துக்கு எதிரான பல்வேறு ஆர்ப்பாட்டங்களை அடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேவிபியின் எதிர்ப்பு பேரணி, இன்று மொரட்டுவையில் இருந்து கொழும்பை வந்தடையவுள்ளது. இதேவேளை காலிமுகத்திடலில் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் இன்று 9வது நாளாக இடம்பெறுகிறது. அதேநேரம் நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று … Read more

பஸ் கட்டணம் அதிகரிப்பு – ரயில் கட்டண அதிகரிப்பு இல்லை

பஸ் கட்டணம் 35 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக  போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இன்று (19) நள்ளிரவு முதல் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறினார்.. இன்று அமைச்சில் நடைபெற்ற தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கும் போக்குவரத்து அமைச்சிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில் கட்டணங்களில் எந்தவித அதிகரிப்பும் தற்போது மேற்கொள்ளப்படமாட்டாது என்றும் அமைச்சர்  எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.    

தென்னாபிரிக்காவில் அனர்த்த அவசரகால நிலை பிரகடனம்

தென்னாபிரிக்காவில் அனர்த்த அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குவாஜுலு-நேட்டல் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 443 பேர் பலியாகியுள்ளனர். இதனால், அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீதிகள், வீடுகள், பாடசாலைகள் உள்ளிட்ட கட்டடங்களும், மின்; கம்பங்களும் சேதமடைந்துள்ளன. வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி அனர்த்த அவசரகாலநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

நாட்டின் நெருக்கடி நிலை குறித்து பிரதமர் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை

நாட்டின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக இஸ்திர நிலையை ஏற்படுத்துவதன் ஆரம்ப நடவடிக்கையாக 19 ஆவது அரசியல் யாப்பு சட்ட திருத்தத்தின் தேவையை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இன்று (19) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றம் இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமானது. இதன்போது விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் உரையாற்றினார். 19 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு குறுகிய காலத்தில் மேற்கொள்ளக்கூடிய காலத்திற்கு ஏற்ற நடவடிக்கையாகும் என்றும் பிரதமர் … Read more

இன்று கொழும்பு நோக்கி படையெடுத்துள்ள பெருந்திரளான மக்கள் (Video)

கொழும்பின் நகர மண்டபத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இன்றைய தினம் படையெடுத்துள்ளனர்.  மக்களை துன்புறுத்தும் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் பேரணியே இவ்வாறு கொழும்பை நோக்கி வருகிறது. மொறட்டுவையிலிருந்து கொழும்பு நகர மண்டபம் வரை இந்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போது காணப்படும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கத்தை விரட்டியடித்து, மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவோம் என்ற அடிப்படிடையில் இந்த பேரணி முன்னெடுக்கப்படுகின்றது. Source link

நிதி அமைச்சர் தலைமையிலான இலங்கை குழு சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை

நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலிசப்ரி தலைமையிலான இலங்கை குழு சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது நாளாக இன்றும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த ஸ்ரீவர்த்தன இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை நிதி அமைச்சர் தலைமையிலான இந்த குழுவினர் சர்வதேச நாணய நிதியத்துடன் நேற்று ஆரம்பித்த பேச்சுவார்த்தை சாதகமான முறையில் இடம்பெற்றிருப்பதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வொpங்டனில் … Read more