ஒரு வார காலத்திற்கு இலங்கை முடங்கலாம்

இலங்கையில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை தொடக்கம் இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டிக்கவுள்ளதாக 300இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன  அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.   அதன்படி, நாளை முதல் இம்மாதம் 28ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  Source link

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் இன்று இடம்பெறும். முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை இதுவரை நிறைவு பெறாத பாடசாலைகளில் மாத்திரம் தரம் ஒன்றுக்கான மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை தாமதம் அடையலாம் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை தாமதம் அடைந்தது. நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் இந்த ஆண்டுக்கான முதலாம் தவணை நேற்று ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது..

கோட்டாகோகம போராட்டக்காரர்கள் தொடர்பில் பீ அறிக்கை தயாரிக்குமாறு உத்தரவு

கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்படும் சம்பவம் தொடர்பில் பி அறிக்கை ஊடாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறுகள் அல்லது கலவரம் ஏற்படுத்தினால் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு பி அறிக்கை ஊடாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல நேற்று கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிட்டார். கோட்டை பொலிஸார் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்ட நீதவான் நீதிமன்றம் இந்த … Read more

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது பாராளுமன்றம் 22ஆம் திகதி வரை நடைபெறற பாராளுமன்ஃற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்துள்ளார்

இலங்கையின் உயர்மட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளது – அமெரிக்கா குற்றச்சாட்டு

இலங்கையின் உயர்மட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் இராணுவ அதிகாரிகளை விடுதலை செய்தல், உயர் பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல சம்பவங்களுக்கு இலங்கை மீது அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கைக்கு … Read more

இலங்கை அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை

அரசியல்வாதிகள் தற்போது  ஒரு பொது நிகழ்விலும் கலந்து கொள்ள முடியாத இக்கட்டான நிலை காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார். இளைஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கப் பிரதிநிதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கண்டியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த கால அரசாங்கங்கள் சமூக ஊடகங்களின் உதவியின் மூலம் இளைஞர்கள் தங்கள் கோரிக்கைகளில் முக்கிய இடத்தைப் பிடித்த நிகழ்வுகளை அனுபவித்ததாகவும் … Read more

இலங்கையின் கடன் மதிப்பீட்டை குறைத்தது மூடிஸ் நிறுவனம்

மூடிஸ் நிறுவனம் இலங்கையின் கடன் மதிப்பீட்டை “Ca2” இலிருந்து “Ca” ஆகக் குறைத்துள்ளது. கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து மூடிஸ் நிறுவனம் இலங்கையின் இறையாண்மை மதிப்பீட்டை குறைத்துள்ளது. தன்னுடைய கடன்களை உரிய காலத்தில் செலுத்த முடியாது என இலங்கை அண்மையில் அறிவித்திருந்தது. இவ்வாறு கடன் தவணை தவறுவது, ‘ஒரு நாடு திவாலான நிலைமை’ என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். பொருளாதார வீழ்ச்சியால் இலங்கை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. விலைவாசி உயர்ந்திருக்கிறது. அரசுக்கு எதிரான … Read more

திடீரென உயர்த்தப்பட்ட பெட்றோல் விலை – வெள்ளவத்தை பகுதியில் பதற்றம் (Video)

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதாக இலங்கை பெட்றோலிய கூட்டுத்தாபம் அறிவித்திருந்த நிலையில், கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஒக்டேன் (92) பெட்ரோல் லிட்டர் 338 ரூபாவாகவும், ஒக்டேன் (95) லிட்டருக்கு 373 ரூபாவாகவும், ஒட்டோ டீசல் லிட்டர் 289 ரூபாவாகவும், சூப்பர் டீசல் லிட்டர் 329 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், வெள்ளவத்த மெரைன்டரைவ் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் … Read more

இலங்கையில் திடீரென மீளவும் எரிபொருள் விலை உயர்வு

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் அதன் விலையை உயர்த்தியுள்ளது. இதன்படி, ஒக்டேன் (92) பெட்ரோல் லிட்டர் 338 ரூபாவாகவும், ஒக்டேன் (95) லிட்டருக்கு 373 ரூபாவாகவும், ஒட்டோ டீசல் லிட்டர் 289 ரூபாவாகவும், சூப்பர் டீசல் லிட்டர் 329 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. லங்கா IOC நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையை அதிகரித்திருந்த பின்னணியிலேயே, பெற்றோலிய கூட்டுதாபனமும் பெற்றோலின் விலையை அதிகரித்துள்ளது. Source link