2006ம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக இலாபத்தை பதிவு செய்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டில் 1.7 மில்லியன் டொலர் லாபத்தைப் பதிவு செய்துள்ளது. கொரோனா தொற்றுநோய் பாதிப்பிலும் இவ்வளவு லாபத்தைப் பதிவு செய்திருப்பது சிறப்பு என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இலாபம் ஈட்டியது இதுவே முதல் தடவையாகும். 2021-22 நிதியாண்டில் ஊழியர்களின் செலவுகள் மற்றும் மேல்நிலைகளைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்த நிதித் திருப்பத்தை … Read more

அரசியலமைப்பு குறித்த புரிந்துணர்வு இன்றிய எதிர்ப்புகள் காரணமாக நாட்டிற்கு ஏற்படும் பாதகமான விளைவு குறித்து சட்டத்தரணிகள் கௌரவ பிரதமருக்கு விளக்கம்

அரசாங்கத்திற்கு ஆதரவான சட்டத்தரணிகளுக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (18) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. நாட்டில் இதுவரையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதக நிலைமைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதியை நீக்குவதானது ஆர்;ப்பாட்டக்காரர்கள் கூறுவது போன்று செய்வதற்கு முடியாததொரு விடயமாகும் என்றும் அரசியலமைப்பு தொடர்பில் தெளிவான புரிதல் இன்றி, தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாக … Read more

இராஜாங்க அமைச்சர்கள் 24 பேர் ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம்.

மூன்று புதிய இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 24 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டு;ளளார். உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் பதவி ரோஹண திஸாநாயக்கவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ ஆவார். நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை,  வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக தாரக பாலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஆவார். நீர்வழங்கல் … Read more

தொழிநுட்ப ரீதியாக புதிய நெருக்கடி! வெளிநாட்டு கடன் பெறுவதில் இலங்கைக்கு ஆபத்து (Video)

தற்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி  நிச்சயமாக அதனைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி,  பொருளாதார நெருக்கடியின் காரணமாக  ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வினால் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த காத்திருப்பே தற்போதைய அரசியல் நெருக்கடியை கொண்டு வந்தது என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் பாலகிருஷ்ணன்(பாலா மாஸ்டர்) தெரிவித்துள்ளார்.   எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து  வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   தொடர்ந்தும் தெரிவிக்கையில்,   Source link

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் ஆற்றிய உரை.(2022-04-18)

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் ஆற்றிய உரை.(2022-04-18) இலங்கையின் வரலாற்றில் மிகவும் கடினமான அதே போன்று, சவாலான பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக நாடு தீர்மானமிக்கதொரு தருணத்தை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்திலேயே இன்று நான் உங்களிடம் உரையாற்றுகிறேன். இன்று சிரேஷ்ட நிலை பாராமல் புதிய அமைச்சர்களை நியமித்துள்ளேன். அமைச்சர் பதவி என்பது ஒரு வரப்பிரசாதம் அல்ல. அது ஒரு பாரிய பொறுப்பு ஆகும். அமைச்சர் என்ற … Read more

அரசியலமைப்பை திருத்துவதற்கான கௌரவ பிரதமரின் முன்மொழிவு

மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு, அது தொடர்பில் கௌரவ பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்க சபை போன்றே நீதித்துறையின் சாத்தியமான கருத்துக்களை உள்ளடக்கிய அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எதிர்பார்த்துள்ளார். அத்திருத்தப்பட்ட அரசியலமைப்பினூடாக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்பது கௌரவ பிரதமரின் எதிர்பார்ப்பாகும்.   பிரதமர் ஊடக பிரிவு

நியமனம் பெற்ற அமைச்சர்கள் வரும் வீதியில் இரு இளைஞர்கள் எதிர்ப்பு போராட்டம் (Video)

கொழும்பு – சத்தம் வீதியில்  இரு இளைஞர்கள் பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதியிலிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.  இந்த வீதி வழியே இன்று பதவியேற்ற அமைச்சர்கள் வரவிருக்கும் நிலையில், அங்கு அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிற்கின்றனர். அப்பகுதியில் பொலிஸார் தடை விதித்தபோதும் அவர்கள் வீதியின் ஓரமாக நின்று தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். Source link

“புதிய அமைச்சரவையின் நோக்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதுமாகும்.” நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத்

நெடுஞ்சாலைகள் அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்ற புதிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத், நாட்டில் இது போன்ற ஒரு முக்கியமான தருணத்தில் நெடுஞ்சாலைகள் போன்ற பாரிய அமைச்சுப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தமைக்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார். . இன்று (04/18) பத்தரமுல்லை, கொஸ்வத்தையில் அமைந்துள்ள மக நெகும மஹமெதுர வளாகத்தில் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் ஊழியர்களிடம் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, “எமது வரலாற்றில் … Read more

சைகை மொழியால் நாட்டுக்காக போராட முடியும்: நிரூபித்துள்ள மாற்றுத்திறனாளிகள்

சைகை மொழியால் நாட்டுக்காகப் போராட முடியும் என போராட்ட களத்தில் இணைந்து கொண்டுள்ள மாற்றுத்திறனாளிகள் நிரூபித்துள்ளனர். கொழும்பு – காலிமுகத்திடலில் அரசாங்கத்தைப் பதவிவிலகுமாறு வலியுறுத்தி ஆரம்பமான போராட்டம் பத்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது. மழை, வெயில் பாராது இளைஞர், யுவதிகள் தற்காலிக கூடாரங்களை அமைத்து அந்த பகுதிக்கு ‘கோட்டா கோ கம’ எனப் பெயரிட்டு இன்றுடன் பத்தாவது நாளாகப் போராடி வருகின்றனர். நாடு முழுவதிலுமுள்ள மக்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்றையதினம் இப்போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் … Read more

மின் துண்டிப்பு ஒரு மணித்தியாலத்தில் குறைப்பு

இன்று (18) இடம்பெறவிருந்த, மின் துண்டிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தில்  குறைக்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அத்துடன், இன்று நான்கு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் துண்டிப்பு .இடம்பெறவுள்ளது. அதன்படி A முதல்  L வரையிலான 12 வலயங்களுக்கும், P முதல் W வரையிலான 8 வலயங்களுக்கும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதிக்குள் மூன்று மணித்தியாலங்களும், மாலை 6 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் 1 … Read more