அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்…ஜனாதிபதி தெரிவிப்பு

அமைச்சர் பதவி என்பது ஒரு வரப்பிரசாதம் அல்ல. அது ஒரு பாரிய பொறுப்பாகும். எந்தவொரு கூடுதல் சலுகைகளையும் பயன்படுத்தாமல் நேர்மையான, திறமையான மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்கு அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் புதிய அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டார். தங்களின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஊழலற்றதும் மக்கள் சேவைக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்களாகவும் மாற்றப்பட வேண்டும். பல நிறுவனங்கள் பாரிய நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், அதனை வேலை வாய்ப்பில் நிரப்பாமல், அவற்றை வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களாக … Read more

காலிமுகத்திடல் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ள இலங்கையின் முன்னணி ஊடக நிகழ்ச்சி தொகுப்பாளர் (Video)

காலிமுகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டம் களியாட்டமாக மாற்றமடைந்துள்ளதாக இலங்கையின் முன்னணி ஊடகமான அத தெரணவின் நிகழ்ச்சி தொகுப்பாளர் கூறும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.  குறித்த சர்ச்கைக்குரிய காணொளியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் மஹிஷ் ஜோனி, நாடு வங்குரோத்து அடைந்துள்ளது. பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதனையும் மறுப்பதற்கில்லை. நாட்டில் தற்பொழுது நிலவி வரும் பிரச்சினையானது விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறு. இந்த நாட்டை கொடிய பயங்கரவாதத்திலிருந்து மீட்டு யுத்தத்தை வென்றெடுத்த தலைவர் மகிந்த … Read more

நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

நாட்டின் இரண்டு பிரதேசங்களில், நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மரணங்களில் ஒன்று நேற்று (17) பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பண்டாரகம உயவத்த குளத்தில் நீராடச் சென்ற அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மற்றைய மரணமும் நேற்று (17) கந்தர தலல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தலல்ல பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கிய குழுவொன்றை காப்பாற்றச் சென்ற அதே பிரதேசத்தைச் சேர்ந்த … Read more

முன்னாள் மத்திய வங்கி ஆளுனருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு செல்வதற்கான தடை நீடிப்பு

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை, எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அந்த தினத்தில் அவரை நீதிமன்றத்தில் ஆஜார் ஆகுமாறு  கொழும்பு நீதிவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்துள்ளது.  இதற்கு முன்னர் அழைப்பாணை விடுக்கப்பட்டபோதிலும், அவர் ஆஜராகவில்லை.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் தேர்தல் ஆணைக்குழு முக்கிய கோரிக்கையொன்றை விடுத்துள்ளது. அதன்படி நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் அமைப்புகளும் முன்வந்து கலந்துரையாடி தீர்வுகாண வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கையில், நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையடி அவற்றுக்கான இணக்கமான தீர்வொன்றை எட்ட வேண்டும். அத்துடன் மக்களின் குரலை தொடர்ந்தும் புறக்கணிப்பது ஆபத்தானது என எச்சரிக்கை விடுத்துள்ளது. Source link

இன்று முதல் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்று (18) முதல் வழமைபோன்று இடம்பெறும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன், தற்போது நாட்டிற்கு தேவையான எரிபொருள் இருப்பில் இருப்பதாகவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பல பிரதேசங்களில் இடம்பெறும் எரிபொருள் பற்றாககுறை இன்று முதல் தீர்ந்துவிடும் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

17 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்…

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 17 பேர் இன்று, (18) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 01. திரு. தினேஷ் குணவர்தன                             – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்                           … Read more

ஜனாதிபதியின் உரை தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது. இதன்போது ஜனாதிபதி நிகழ்த்திய உரை இன்று இரவு 7.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், வானொலிகளிலும் ஒலிபரப்பப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.  இதேவேளை பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று காலை 17 பேர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  தொடர்புடைய செய்தி… பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 17 அமைச்சர்கள் நியமனம்: முழுமையான விபரம் வெளியானது … Read more

ஜனாதிபதியின் உரை இன்று இரவு 7.30 க்கு அனைத்து தொலைக்காட்சி வானொலிகளிலும் இடம்பெறவுள்ளது

புதிய அமைச்சவை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. இதன்போது ஜனாதிபதி நிகழ்த்திய உரை இன்று இரவு 7.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், வானொலிகளிலும் ஒலிபரப்பப்படவிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம்: பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் நவீட் நவாஸ் இரண்டு வருட காலத்திற்கு உதவிப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் பங்களாதேஷ் 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்டார். இலங்கை அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக கிறிஸ் சில்வர்வூட் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக சமிந்தவாஸ் செயற்படவுள்ளார். சுழல் பந்து பயிற்றுவிப்பாளராக பியல் விஜேதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக மனோஜ் அபேவிக்ரம … Read more