கப்ராலுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த பயணத்தடையானது எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. அத்துடன் மே இரண்டாம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாரும் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. ஏற்கனவே அஜித் நிவாட் கப்ராலுக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இன்று வரை தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   தொடர்புடைய செய்தி… மத்திய வங்கியின் … Read more

இன்று பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் விற்பனை விலை

அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.  அதன்படி பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலையானது 340 ரூபாவாக பதிவாகியுள்ளது.  இதேவேளை அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு விலையானது 330 ரூபாவாக பதிவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.  Source link

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் குழப்பம்: ஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் கடும் மோதல்

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் நேற்று (17) இரவு இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் காரசாரமாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய முகங்கள் பலரைக் கொண்ட அமைச்சரவையொன்றை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான யோசனையை இந்தக் கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல சிரேஷ்ட அமைச்சர்கள் ஜனாதிபதியின் யோசனை நிறைவேற்றப்பட்டால் எதிர்க்கட்சியில் அமரப்போவதாக ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். புதிய நியமனங்களை வழங்குவதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட நான்கு … Read more

சிறுபோக பயிர்ச்செய்கைக்கு இரசாயன உரம்

சிறுபோக பயிர்ச்செய்கைக்கான தேவையான இரசாயன உரத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளை தனியார் துறை இறக்குமதியாளர்கள் முன்னெடுத்துள்ளனர். இது பற்றிய முதல்கட்டப் பேச்சுவார்த்தை இன்று விவசாய அமைச்சில் நடைபெறும். விவசாய உர இறக்குமதிக்காக வழங்கப்படவிருக்கும் நிவாரணம் பற்றி இந்தப் பேச்சுவார்;த்தையின் போது கவனம் செலுத்தப்படும். இதன் காரணமாக விவசாயிகளுக்கு சிறுபோகத்தில் நிவாரண விலையில் உரத்தை வழங்க முடியும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மக்கள் விரும்பினால் நாட்டை பொறுப்பேற்க தயார்! ரணில் அதிரடி அறிவிப்பு

மக்கள் விரும்பினால் காபந்து அரசாங்கத்தின் தலைவராகி நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்க்கும் திறமை தனக்கு இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.   போக்குவரத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே முன்னாள் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இளைஞர் சமூகத்தினரின் கோரிக்கைகளுக்கு இணங்கி அனைவரும் வெளியேற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மக்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் குறுகிய காலத்திற்கு காபந்து அரசாங்கத்தை தலைமை தாங்குவதற்கு தயார் என ரணில் தெரிவித்துள்ளார். தற்போதைய … Read more

நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை: வெளியானது அறிவிப்பு (PHOTO)

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதற்கமைய, சகல விதமான பெட்ரோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. மேலும்,சகல விதமான டீசல் வகைகளின் விலைகள் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பெட்ரோல் 92 – 338 ரூபாவாகும், பெட்ரோல் 95 – 367 ரூபாவாகும்,பெட்ரோல் யூரோ 3 – 347 ரூபாவாகும்,ஓட்டோ டீசல்- 289 ரூபாவாகும், சூப்பர் டீசல் – 327 ரூபாவாகவும் … Read more

அலரி மாளிகையில் 700 பேரை அழைத்து அவசர கூட்டம் நடாத்தும் நாமல்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, சுமார் 700 பேரை அழைத்து அவசரக் கூட்டமொன்றை நடாத்த உள்ளார். நாளைய தினம் மாலை அலரி மாளிகையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. அமைச்சர்கள், உறுப்பினர்கள், மாநகரசபை மற்றும் நகரசபையின் நகரபிதாக்கள், பிரதி நகரபிதாக்கள் மேயர்கள், பிரதி மேயர்கள், பிரதேச சபையின் தவிசாளர்கள் மற்றும் துணைத் தவிசாளர்கள் உள்ளிட்டவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சிக் காரியாயலத்தின் ஊடாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதிலும் அரசாங்கத்திற்குச் சார்பான … Read more

அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் வெளிநாடு செல்வதனை தடுக்க நடவடிக்கை

அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் வெளிநாடு செல்வதனை தடுக்கும் வகையில் வழக்குத் தொடரப்பட உள்ளது. அரசாங்கத்தின் நான்கு மிக முக்கியஸ்தர்களுக்கு எதிராக நாளைய தினம் வழக்குத் தொடரப்பட உள்ளதாக தெற்கு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. குறித்த தலைவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வழக்குத் தொடரப்பட உள்ளது. இந்த முக்கியஸ்தர்கள் வெளிநாடு செல்வதனை தடுக்கும் வகையில் தடையுத்தரவு ஒன்றையும் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட உள்ளது. சட்டத்தரணிகள் குழுவொன்றினால் இவ்வாறு வழக்குத் தொடரப்பட உள்ளது.   Source … Read more

பொலிஸ் அகற்றிய கூடாரங்களை மீண்டும் நிர்மாணித்த போராட்டகாரர்கள்:குவியும் மக்கள்

பொலிஸார் உடைத்து அகற்றிய கோட்டா கோ கிராமத்தின் காலி கிளையை போராட்டகாரர்கள் மீண்டும் நிர்மாணித்துள்ளனர். கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி காலியில் மக்கள் போராட்டத்தை நடத்தி வந்ததுடன் அந்த இடத்திற்கு கோட்டா கோ கிராம கிளை என பெயரிட்டிருந்தனர். காலி பொலிஸார் அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை இன்று காலை உடைத்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அந்த இடத்தில் மிக நேர்த்தியான … Read more

நன்கொடையளிக்கும் நாடுகளுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் விளக்கமளிப்பு

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், நிதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் 2022 ஏப்ரல் 12ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற மாநாட்டில் வைத்து நன்கொடையளிக்கும் நாடுகளுக்கு அறிவித்தனர். அடுத்த வாரம் இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திர சமூகத்திற்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது. … Read more