அவுஸ்திரேலியாவில் கோட்டாபய மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் (Photos)

இலங்கையின் நடைபெற்று வரும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உலக முழுவதும் வாழும் இலங்கையர்கள், அரசாங்கம் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக தாம் வாழும் நாடுகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் சிட்டினி நகரில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். அதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி, கொழும்பு காலிமுகத் திடலில் தொடர்ந்தும் 9வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தமது கோரிக்கைக்கு தீர்வு … Read more

2022 பாடசாலை முதலாம் தவணை நாளை ஆரம்பம் – நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் நீடிப்பது இடைநிறுத்தம்

2022 பாடசாலை முதலாம் தவணை, நாளை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இருப்பினும் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் நீடிப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். நாட்டில் ,தற்போது நிலவும் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாவும் அவர் கூறினார் . இருப்பினும் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் நீடிப்பது தொடர்பில் மீண்டும் கவனத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

2022ம் ஆண்டு அரசபாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை

2022ம் ஆண்டுக்காக அரசபாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை நாளை மறுதினம் தொடக்கம் இடம்பெறவுள்ளது. மேன்முறையீட்டுப் பட்டியல் தொடர்பில் பிரச்சினை உள்ள பாடசாலைகளில்மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டா கோ கம: இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் படிக்காத ஒரு முட்டாள் தீவில் ஒரு புதிய கிராமம்

Courtesy: கட்டுரையாசிரியர் – நிலாந்தன் தோன்றிய அன்றே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஊடகங்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த ஒரு கிராமம் என்றால் அது காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் “கோட்டா கோ கம” கிராமம் தான். உலகில் அதிகம் பேர் உற்றுக் கவனிக்கும் ஒரு கிராமமாக அது மாறிவருகிறது. இலங்கைத்தீவில் அதுதான் மிகப் பிரசித்தமான ஒரு ட்ரெண்ட். இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் முள்ளிவாய்க்கால் என்ற கிராமத்தின் பெயர் அதிகம் உச்சரிக்கப்பட்டது. இப்பொழுது கோட்டா கோகம என்ற கிராமம் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. … Read more

நாட்டிலுள்ள நிலைமையை ஒரேநாளில் மாற்றி மீளக்கட்டியெழுப்புவது கடினமான விடயம்

தற்போது நாட்டிலுள்ள நிலைமையை ஒரேநாளில் மாற்றி மீளக்கட்டியெழுப்புவது கடினமான விடயம் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கம் தெரிவித்தார். நாடு ஸ்திரநிலையில் இல்லாவிட்டால் பொருளாதார சவால்களை வெற்றி கொள்வது கடினம் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். இந்நேரத்தில் கட்சி அரசியல் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தாது, நாடு என்ற எண்ணத்தை வளர்த்து நாட்டை மீள கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. டொலர் இருப்பை மேம்படுத்துவதே முதலில் செய்ய வேண்டிய காரியமாகும். … Read more

காலி முகத்திடலை நசுக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

ராஜபக்ச ஆட்சியை இராஜினாமா செய்யக் கோரி காலி முகத்திடல் மைதானத்தில் ஒரு வாரமாக நடைபெற்று வரும் போராட்டத்தை அடக்குவதற்கு அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராகத் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைய வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம் இவ்வாறு அமைந்துள்ளது. “காலி முகத்திடல் மைதானத்தில் இளைஞர்கள் 7 நாட்களாக நடத்தி வரும் அமைதியான அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள … Read more

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இ.தொ.கா கலந்து கொள்ளாது

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இ.தொ.கா கலந்து கொள்ளாது. இதுகுறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்ட தீர்மானம் பற்றி கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சரருமான ஜீவன் தொண்டமான் விளக்கம் அளித்துள்ளார். தாம் அமைச்சுப் பதவியை ஏற்கப் போவதாக வெளியான கருத்துக்களை நிராகரிப்பதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார். சமகால பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வரையில், எதுவித அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்கப் போவதில்லையென ஆளுங்கட்சிக்கு தாம் அறிவித்துள்ளதாக அவர் ட்விற்றர் பதிவில் கூறியுள்ளார். … Read more

“இலங்கையில் கொடுப்பனவுப் பணிகளுக்கான ஒரு வழிகாட்டல்” – இலங்கையில் கொடுப்பனவு சாதனங்கள் ,உட்கட்டமைப்பு தொடர்பான நூல்

இலங்கையின் கொடுப்பனவுத் தொழிற்துறைக்கு புதிய கொடுப்பனவுச் சாதனங்கள், முறைகள் மற்றும் செயன்முறைகள் என்பன அறிமுகப்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக இத்தொழிற்துறை தற்பொழுது விரைவாக மாற்றங்களுக்கு உட்பட்டுவருகிறது. பாரம்பரிய கொடுப்பனவு முறைமைகளுடன் சேர்ந்து இப்புதிய இக்கொடுப்பனவுச் செயன்முறைகள் வாடிக்கையாளர் அனுபவத்திற்கு புதிய வரைவிலக்கணம் தருவதுடன் வியாபாரங்களும் வாடிக்கையாளர்களும் அவர்களது நிதியியல் கொடுக்கல்வாங்கல்களைப் பாதுகாப்பாகவும் வினைத்திறனுடனும் மேற்கொள்வதனையும் இயலுமைப்படுத்தும். இப்பின்னணியில், பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்காக கொடுப்பனவுப் பணிகள் தொடர்பாக உள்ளூர் வெளியீட்டின் அவசியத்தினை இனங்கண்டு இலங்கை மத்திய வங்கி, இலங்கையில் கொடுப்பனவு சாதனங்கள்/முறைகள் … Read more

போராட்ட களத்திற்கான விநியோகத்தை தடுத்த நிறுத்த திட்டம்:புரியாணி விநியோகித்தவரை தேடும் சீ.ஐ.டி

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தப்படும் இடத்திற்கு உணவு உட்பட அத்தியவசிய பொருட்களை பெருமளவில் விநியோகிக்கும் நபர்களை கண்டறிய குற்றவியல் விசாரணை திணைக்களம் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில் அண்மையில் போராட்டகாரர்களுக்கு புரியாணியை விநியோகித்ததாக கூறப்படும் கனேடிய கடவுச்சீட்டை கொண்டுள்ள அரவிந்தன் ராசநாயகம் என்பவரை குற்றவியல் விசாரணை திணைக்களம் தேடி வருவதாக கூறப்படுகிறது. தனது துணைவியின் வழியாக அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளதாகவும் 2019 … Read more