பதவி விலகும் மகிந்த:இளம் அரசியல்வாதிக்கு பிரதமர் பதவி

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலக தயாராகி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் எதிர்ப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் நிலைமைகளை கவனத்தில் கொண்டு இளம் அரசியல்வாதி ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்காக பிரதமர் பதவியில் இருந்து விலகுவார் என கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினால், பெரும்பாலும் அந்த பதவி அவரது புதல்வர் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்படலாம் எனவும் ரமேஷ் பத்திரன மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோரின் … Read more

கோட்டாபயவை நாட்டை விட்டு வெளியேறுமாறு கைகூப்பி கோரிக்கை விடுத்துள்ள குழந்தைகள் (Video)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரி குழந்தைகள் போராட்டம் முன்னெடுத்துள்ள காணொளி தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.  குறித்த காணொளியில் குழந்தைகள், கோட்டாபய சேர் எங்களுடைய வீட்டில் நாங்கள் இரண்டு நேரம் மட்டுமே சாப்பிடுகிறோம். எங்களுடைய அம்மா தோட்டத்திலே தான் வேலை செய்கிறார். உரமுமில்லை கொழுந்துமில்லை. ரொம்ப கஷ்டமாயிருக்கு. இந்த நாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள் என கைகூப்பி கோரிக்கை விடுத்துள்ளனர்.  Source link

இலங்கை இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு – செய்திகளின் தொகுப்பு

இலங்கை இராணுவம் வன்முறையை ஏற்படுத்தத் தயாராகி வருவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் மக்களை அடக்குவதற்குத் திட்டமிடுவதாகவும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நபர்கள் சுமத்தும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும், பொய்யான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் இராணுவம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சில ஆர்வமுள்ள தரப்பினர் தவறாக வழிநடத்தும் மற்றும் புனையப்பட்ட விளக்கங்களை அளித்து, ஆதாரமற்ற, மற்றும் ஆத்திரமூட்டும் குற்றச்சாட்டுகளைப் பிரச்சாரம் செய்வதன் மூலம் தீவு முழுவதும் பணியாற்றும் இராணுவத்தையும் அதன் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்களையும் … Read more

அமைதியான போராட்டங்கள் மீது இராணுவ அதிகாரம் பயன்படுத்தப்படாது: பாதுகாப்பு அமைச்சு

அமைதியான போராட்டங்கள் மீது இராணுவ அதிகாரம் பயன்படுத்தப்படாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை இலக்கு வைத்து எந்தவிதமான இராணுவ அதிகாரங்களையும் பயன்படுத்தப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டங்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்கும் இராணுவத்தை ஈடுபடுத்தப் போவதில்லை என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை இலங்கை இராணுவம் வன்முறையை ஏற்படுத்த தயாராகி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் மக்களை அடக்குவதற்கு திட்டமிடுவதாகவும் … Read more

ராஜபக்ச அரசாங்கத்தின் கட்டளை: சவேந்திர சில்வா, கமல் குணரத்னவுக்கு முன்னாள் இராணுவத் தளபதியின் அறிவுரை

பொதுமக்களால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தில் குழப்பத்தைத் தோற்றுவிக்கும் வகையிலான சட்டவிரோதக் கட்டளைகளை ராஜபக்ச அரசாங்கம் பிறப்பிக்குமேயானால், அவற்றை நிறைவேற்றுவதற்கு முன்னர் நூறுமுறை சிந்தித்துப்பாருங்கள் என்று பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன மற்றும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரிடம் முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து  அவர் மேலும் குறிப்பிடுகையில்,  அதில் மேலும் கூறியிருப்பதாவது: பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன மற்றும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகிய நீங்கள் இருவரும் தீவிரவாதத்தைத் … Read more

தனியார் ஜெட் விமானத்தில் முக்கியஸ்தரொருவர் நாட்டை விட்டு வெளியேறிய செய்தி! உறுதிப்படுத்தப்பட்டுள்ள முக்கிய விடயம்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கோவிட் தொற்றுக்கு இலக்கான நிலையில் அவர் இலங்கையிலேயே இருப்பதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் இயக்குனர் செஹான் சுமனசேகர ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி கட்டுநாயக்க, மத்தள மற்றும் இரத்மலான விமான நிலையங்களில் எந்தவொரு விமான நிலையத்தின் ஊடாகவும் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறவில்லை என செஹான் சுமனசேகர தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், … Read more

இலங்கையில் மீண்டும் 8 மணித்தியால மின்வெட்டு

இலங்கையில் மீண்டும் நாளொன்றுக்கு ஆறு முதல் எட்டு மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளது என இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர். நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி விநியோகம் நீடிக்கப்படாவிட்டால், இந்த நிலைமை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி காரணமாக அவசியமாக நிலக்கரி பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் ஒகஸ்ட் மாதத்திற்குப் பிறகு நிலக்கரி ஆலையை இயக்க முடியாத நிலை ஏற்படும். மேலும் ஆறு முதல் எட்டு மணி நேர … Read more

மகிழ்ச்சியான , ஆசிர்வதிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு பண்டிகையாக அமைய பிரார்த்திக்கின்றேன்- ஜனாதிபதி

அமைதி, தைரியம் மற்றும் நம்பிக்கை ஆகிய ஆன்மீக பரிசுகளால் அனைவரின் வாழ்க்கையையும் வளப்படுத்தும் மகிழ்ச்சியான மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு பண்டிகையாக அமைய பிரார்த்திக்கின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வெளியிட்டுள்ளார் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: வாழ்த்துச் செய்தி இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்துக் கொண்டாடப்படும் உயிர்த்த ஞாயிறு பண்டிகை, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு … Read more

நாட்டின் சுகாதார அமைப்பு வீழ்ச்சியடைந்துள்ளது – உபுல் ரோஹன

தற்போதைய நெருக்கடி காரணமாக நாட்டின் சுகாதார அமைப்பு வீழ்ச்சியடையக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொற்று நோய்கள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்ந்தும் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். பொது சுகாதார பரிசோதகர்களின் வாகனங்கள் கடமை தொடர்பான விடயங்களுக்கு பயணிக்க தேவையான எரிபொருளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சுகாதாரத்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். … Read more

இலங்கையை வாங்கி சிலோன் மஸ்க் என பெயரிடுங்கள் – எலோன் மஸ்க்கிடம் பரிந்துரை

டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதை விட பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையை வாங்கலாம் என ஸ்னாப்டீல் தலைமை நிர்வாக அதிகாரி குணால் பாஹ்ல், டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க்கிடம் பரிந்துரைத்துள்ளார். எலோன் மஸ்க் 43 பில்லியன் டொலர்களுக்கு டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்கும் முயற்சியைத் தொடங்கியுள்ள நிலையில், ஸ்னாப்டீல் தலைமை நிர்வாக அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்த அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “டுவிட்டரின் பெறுமதி 43 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், இலங்கையின் … Read more