உகாண்டா கரன்சியுடன் இலங்கையில் இருந்து சென்ற விமானங்கள் – பின்னணி என்ன

Courtesy: BBC Tamil இலங்கையில் இருந்து பெரும் தொகை மதிப்புள்ள நோட்டுகள் உகண்டா நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் வெளிவரும் இரு வித தகவல்களால் நாட்டில் சர்ச்சை நிலவி வருகிறது. அங்கு ஆளும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், சமூக ஊடக பக்கங்களில் இது பற்றிய தங்களுடைய சந்தேகங்களை பகிர்ந்து வருகின்றனர். இலங்கையில் ஆளும் ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 3 … Read more

இலங்கை திவாலானது எப்படி? (Video)

இலங்கை முன்னெப்போதும் இல்லாதவகையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளது. தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை குறைந்தது 30 வீதம் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் பாரிய பிரச்சினைகள் உருவாகியுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக … Read more

தற்போது நிலவுகின்ற விடயங்கள் குறித்து பல கலந்துரையாடல்கள்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் இன்று, (16) முற்பகல் தற்போது நிலவுகின்ற விடயங்கள் குறித்து பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அதன் முதற் கட்ட கலந்துரையாடலில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர். நிதி, வலுசக்தி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் … Read more

அமைதியான போராட்டத்தை சீர்குலைக்க வேண்டாம் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் எச்சரிக்கை

நாட்டு மக்களின் அமைதியான போராட்டம் எதுவாக இருந்தாலும் அதனை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு – காலி முகத்திடல் பகுதியில் பெரும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய அந்த பகுதியில் பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டன. இது குறித்த தகவல்கள் சமூக ஊடகங்கள் வெளியாகி, அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, பொலிஸ் வாகனங்கள் அங்கிருந்து வெளியேறின. இந்நிலையிலேயே, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இவ்வாறு … Read more

தவறான மற்றும் தீங்கிழைக்கும் ஊடக அறிக்கைகளால் ஏமாற வேண்டாம் என்று இராணுவம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது

சில தரப்பினரின் தவறான வழிநடத்தல் மற்றும் தவரான விளக்கங்களினால், படையினர் தொடர்பாக மேற்கொள்ளப்படும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் முயற்சிகளை பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து நாடு முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் இராணுவத்தை களங்கப்படுத்தும் முயற்சிகள், இராணுவத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, பல்வேறு குழுக்களும், தங்களது சொந்த நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப, இராணுவம் வன்முறையைத் தூண்டுவதற்குத் தயாராகி வருவதாகவும், தாக்குதலுக்கு முன் பயிற்சி பெறுவதாகவும் முற்றிலும் பொய்யான அடிப்படையற்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது … Read more

ஜனாதிபதியுடான சந்திப்பு நிறைவடைந்தது – மிக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது

முன்னாள் அமைச்சர்களுடன் ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி நாளை மாலை புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அரசாங்கத்தை தொடர்ந்தும் கொண்டு செல்லும் நோக்கில் அமைச்சு பொறுப்புகளை ஏற்காதிருப்பதற்கு முன்னாள் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளனர். எவ்வாறாயினும், புதிய அமைச்சரவையில் ராஜபக்சர்கள் எவரும் அமைச்சு பொறுப்புகளை ஏற்காதிருப்பதற்கு தீர்மானம் எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  … Read more

பந்து சமரசிங்க மிலானிற்கான துணைத் தூதுவராக நியமிக்கப்படவில்லை

மிலானிற்கான துணைத் தூதுவராக திரு. பந்து சமரசிங்க நியமிக்கப்படமாட்டார் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கொழும்பு  2022 ஏப்ரல் 16

ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் (Photos)

ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் மோஹாத் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் அவரை வரவேற்றதுடன், மாநகரசபையின் வாகன பகுதியையும் பார்வையிட்டனர். 2003ஆம் காலப்பகுதியில் ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் மோஹாத் ஜேர்மனியின் முனீச் மாநகர முதல்வராகவிருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி பணிகள் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாநகரசபைக்கும் ஜேர்மன் முனிச் மாநகரசபைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படியின் கீழ் பெருமளவான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கிழக்கு … Read more

வெளிநாடு செல்ல வேண்டாம் …! எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை

ஆளும் கட்சியைப் போன்றே எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிநாடுகளுக்கான பயணங்களை தவிர்க்குமாறு அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் கோரியுள்ளனர். எதிர்வரும் சில வாரங்களுக்கு நாட்டிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்றிருந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து அவசரமாக நாடு திரும்பியுள்ளனர். நாட்டில் நிலவி வரும் அரசியல் ஸ்திரமற்றத் தன்மை காரணமாக அடிக்கடி சந்திப்புக்கள் பேச்சுவார்த்தைகள் நடாத்துவதற்காக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றையும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையையும் … Read more