பரபரப்பான நிலையில் இலங்கையில் இருந்து இன்று விமானம் மூலம் சென்ற முக்கியஸ்தர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சிக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.  இந்நிலையில் இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கிப் புறப்பட்ட N750GF விமானம், பிரித்தானிய கோடீஸ்வரரான ஜோர்ஜ் டேவிஸிற்க்குச் சொந்தமானது என செய்தி வெளியாகியுள்ளது. பசில் ராஜபக்ஷ கொழும்பில் இருந்து டுபாய்க்கு இந்த விமானத்தில் சென்றதாக வதந்திகள் பரவியிருந்தன. ஆனால் இந்த தனியார் விமானம் கடந்த மாதம் வெளிநாட்டு பிரஜைகளை ஏற்றிக் … Read more

கடும் அச்சத்தில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்றத்தின் பேருந்தில் “நாடாளுமன்றம்” என பதிவிடப்பட்டுள்ள செங்கோலுடனான பாரிய ஸ்டிக்கர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் நிலைமையின் கீழ் அந்த பேருந்துகளில் பயணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கருதி குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் மற்றும் நாடாளுனமன்ற ஊழியர்கள் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சிறிய ஸ்டிக்கர்கள் பாதுகாப்புக்காக நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் என பதிவிடப்பட்டுள்ள வாகனங்களுக்கு … Read more

இந்தியாவில் கொரோனா தொற்றின் 3ஆவது அலை, வீழ்ச்சிப்பாதையில்..

இந்தியாவில் கொரோனா தொற்றின் 3ஆவது அலை, அதன் வீழ்ச்சிப்பாதையில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை ;கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. . தினந்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 1,007, நேற்று 949 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 975 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 … Read more

இலங்கையை ஆபத்திலிருந்து மீட்கும் தீவிர நடவடிக்கையில் ரணில்

இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உலக வங்கியின் பிரதிநிதியுடன் கலந்துரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது, ​​நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்தும், நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. உலக வங்கி அதிகாரிகளுடன் அரசாங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னரே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நிதி நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வது இது முதல் தடவையல்ல என தெரிவிக்கப்படுகிறது. இந்த … Read more

மூன்று வாகன விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழப்பு

இன்று (16) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ,இடம்பெற்ற மூன்று வாகன விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த விபத்துக்கள் தொடுவாவ, எஹெலியகொட  மற்றும் பேராதெனிய ஆகிய இடங்களிலேயே இந்த வாகன விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை தெதுரு ஓய நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கொபெயிகனே பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொபெயிகனே பிரதேசத்தில் நீராடச் சென்ற 21 வயதுடைய இளைஞனை … Read more

பசில் நலமுடன் உள்ளார்: வெளியான புதிய தகவல்

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நலமுடன் இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசில் மற்றும் அவரது மனைவிக்கு நேற்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை போடவில்லை எனவும், அவரது மனைவிக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் … Read more

காலிமுகத்திடல் பகுதியில் பொலிஸ் வண்டிகள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் (Photos)

கொழும்பில் காலிமுகத்திடல் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் பகுதியில் பல பொலிஸ் வண்டிகள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான புகைப்படமொன்றும் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.  கொழும்பு, காலிமுகத்திடல் போராட்டமானது இன்று ஒன்பதாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையிலேயே பொலிஸ் வண்டிகள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  மேலும், காலிமுகத்திடல் பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த தொடர் போராட்டத்திற்கு இலங்கையின் பிரபலங்கள் பலரும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர் என்பதும் … Read more

பக் நோன்மதி தினம் இன்று

புத்தபெருமான் இலங்கைக்கு இரண்டாவது தடவையாக விஜயம் செய்த பக் முழு நோன்மதி தினம் இன்றாகும். உலகெங்கிலும் இந்துக்கள் இன்று சித்திரா பௌர்ணமியை அனுஷ்டிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பக் முழு நோன்மதி தினத்தை முன்னிட்டு ,இன்று (16) நாடுமுழுவதிலும் உள்ள பௌத்த விகாரைகளில் பல்வேறு வழி பாட்டு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இரண்டு நாக மன்னர்களுக்கு இடையில் ஏற்படவிருந்த மோசமான யுத்தத்தை நிறுத்துவதற்காக புத்தபெருமானாக பரிநிர்வாணம் அடைந்து, ஐந்தாவது வருடத்தில் இதேபோன்ற தினத்தில் அவர் நாகதீபத்திற்கு விஜயம் செய்தமையும் முக்கிய அம்சமாகும் … Read more

முன்மொழிவுளுக்கான கோரிக்கை – நிதியியல் ஆலோசகர் மற்றும் சட்ட மதியுரைஞர் (காலக்கெடு நீடிப்பு)

அரசாங்கத்தின் வெளிநாட்டுப் படுகடன் நிலைபெறுதன்மையினை முகாமைசெய்வதற்கான நிதியியல் ஆலோசகர்களையும் சட்ட மதியுரைஞர்களையும் நியமிப்பதற்காக ஆர்வமுடைய தரப்பினர்களிடமிருந்து/முகவராண்மைகளிடமிருந்து முன்மொழிவுக்கான கோரிக்கையினை நிதி அமைச்சின் ஊடாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. மற்றும் சட்ட மதியுரைஞர் (காலக்கெடு நீடிப்பு) நிதியியல் ஆலோசகர் (காலக்கெடு நீடிப்பு) முன்மொழிவுக்கான கோரிக்கை பற்றிய விபரங்களை கீழேயுள்ள இணைப்பின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். மற்றும் சட்ட மதியுரைஞர் (RfP) நிதியியல் ஆலோசகர் (RfP)

போராட்டத்தில் கலந்துகொண்ட ஆதிவாசிகள்

கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 8ஆவது நாளாகவும் தொடர்கிறது. நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும், காலிமுகத்திடல் பகுதியிலும் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது. இதில் தற்போது சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் கலந்து கொள்கின்றனர். நேற்று (15) இரவு போராட்டம் நடைபெற்று வரும் காலி முகத்திடலுக்கு ஆதிவாசிகள் குழுவொன்றும் வந்துள்ளது. நேற்றிரவு நடந்த போராட்டத்தில் மற்றுமொரு கலைஞர் குழுவினரும் கலந்து கொண்டனர். … Read more