போராட்டத்தில் கலந்துகொண்ட ஆதிவாசிகள்

கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 8ஆவது நாளாகவும் தொடர்கிறது. நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும், காலிமுகத்திடல் பகுதியிலும் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது. இதில் தற்போது சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் கலந்து கொள்கின்றனர். நேற்று (15) இரவு போராட்டம் நடைபெற்று வரும் காலி முகத்திடலுக்கு ஆதிவாசிகள் குழுவொன்றும் வந்துள்ளது. நேற்றிரவு நடந்த போராட்டத்தில் மற்றுமொரு கலைஞர் குழுவினரும் கலந்து கொண்டனர். … Read more

இன்று சித்திரா பௌர்ணமி

இந்துக்கள் பின்பற்றும் பல பண்டிகைகளில் சித்ரா பௌர்ணமியும் ஒன்று. பொதுவாக பௌர்ணமி என்பது இந்து மதத்தில் கொண்டாட்டம் மற்றும் சடங்குகளுடன் தொடர்புடைய நாள். சித்ரா பௌர்ணமி பூஜையை பௌர்ணமி மாலை அல்லது அதிகாலையில் அனுசரிக்க வேண்டும். இந்த நாளில் விரதம் இருப்பது வழக்கம், இந்த விரதம் ‘சித்ரகுப்த நோம்பு’ அல்லது ‘சித்ரகுப்த விரதம்’ என்று அழைக்கப்படுகிறது. பக்தர்கள் சித்ரா பௌர்ணமியின் பகல் நேரத்தில் விரதம் இருக்க வேண்டும். ஆண் அல்லது பெண் குடும்ப உறுப்பினர்கள் சித்ரா பௌர்ணமி … Read more

மஹிந்தவின் பிரதமர் பதவி தொடர்பில் வெளியான தகவல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தோஷம் நீங்கி நல்லதொரு கிரக நிலை ஏற்பட்டுள்ளதாக பல ஜோதிடர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 15ஆம் திகதிக்குப் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தோஷம் நீங்கும் என ஆரூடம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இருந்த போதிலும், இந்த முடிவு மாற்றியமைக்கப்பட்டதாக அலரி மாளிகைக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனுராதபுரத்தைச் சேர்ந்த ஞானக்காவின் ஆலோசனை பெற மாட்டார் … Read more

இலங்கை அரசாங்கத்தின் உத்தரவாத பத்திரங்கள் "C" நிலைக்கு தரமிறக்கப்பட்டது!

அரசு நடத்தும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிடெட்டின் 175 மில்லியன் அமெரிக்க டொலர் அரசாங்க உத்தரவாதப் பத்திரங்கள் மீதான மதிப்பீட்டை, ஜூன் 2024 இல், ‘CC’ இலிருந்து ‘C’ ஆக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் குறைத்துள்ளது. இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்திரங்கள் மீதான மதிப்பீட்டு நடவடிக்கையானது, இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வழங்குனர் இயல்புநிலை மதிப்பீட்டை ‘CC’ இலிருந்து ‘C’ ஆகக் குறைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தைகளில் வெளியிடப்பட்ட … Read more

எரிபொருள் பவுசர் உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் பவுசர் உரிமையாளர்களுக்கும் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதால், எரிபொருள் விநியோக செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, குறிப்பிட்ட முனையங்கள் மற்றும் டிப்போக்களுக்கு தங்கள் பவுசர்களை உடனடியாக அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்திருந்தது. இந்த நடைமுறைக்கு அமைய உந்துருளிகளுக்கு 1,000, ரூபாவுக்கும், முச்சக்கர வாகனங்களுக்கு 1,500 ரூபாவுக்கும் சிற்றூந்துகள்,வேன்கள் … Read more

காலிமுகத்திடல் போராட்ட களத்தில் திடீரென மயங்கி விழுந்த சிறுமி

காலிமுகத்திடலில் போராட்டம் இடம்பெறும் பகுதியில் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்த மக்கள் மத்தியில் இருந்த சிறுமி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதன்போது 12 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு திடீரென மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து சிறுமி சிகிச்சைக்காக “கோடகோகம” என பெயரிடப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் … Read more

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் பசில் – வைரலாகும் புகைப்படம் (Photo)

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் முழு … Read more

போராட்டத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் – அரசாங்கத்திற்கு அவசர அறிவிப்பு

தற்போதைய சமூகப் போராட்டத்தை ஆளும் கட்சி குறைத்து மதிப்பிடுவதாக பெஃப்ரல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் தமது பொறுப்புகளையும் புறக்கணிப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் உருவாகும் சமூக அமைதியின்மை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்தால் நாட்டில் வன்முறைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக பெஃப்ரல் தெரிவித்துள்ளது. மனித உயிர்கள் பறிக்கப்பட்டால், அந்த பொறுப்பில் இருந்து நீங்கள் அனைவரும் தப்ப முடியாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே இத்தருணத்தில் ஜனாதிபதி … Read more

நாளை முதல் 2 ஆயிரத்து 100 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இ.போ. ச திட்டம்

தமிழ், சிங்களப் புத்தாண்டுக்காக சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், கொழும்பு உட்பட பிரதான நகரங்களுக்கு மீண்டும் திரும்புவதற்காக நாளை தொடக்கம் 2 ஆயிரத்து 100 பஸ் கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இந்த பஸ்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபை வழமையாக 1,500பஸ்களை மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினாலும் இம்முறை 600 பஸ்களை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

எரிபொருளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்று இலங்கைக்கு

எரிபொருளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்று இலங்கை வந்தடையவுள்ளன. 40, 000 மெட்ரிக் தொன் டீசலும் 37.000 மெட்ரிக் தொன் பெட்ரோலும் இவற்றில் இருப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்தது. எரிபொருள் விநியோக நடவடிக்கை இன்றும் இடம்பெறுவதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. விவசாய நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளின் பரிந்துரைகளின் கீழ் டீசல் வழங்கப்படுகிறது. போத்தல்கள் மற்றும் கலன்களில் எரிபொருளை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. கலன்களில் எரிபொருளைக் கொள்வனவு செய்து அவற்றை வெளியிடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றமை தொடர்பான … Read more