எரிபொருளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்று இலங்கைக்கு

எரிபொருளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்று இலங்கை வந்தடையவுள்ளன. 40, 000 மெட்ரிக் தொன் டீசலும் 37.000 மெட்ரிக் தொன் பெட்ரோலும் இவற்றில் இருப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்தது. எரிபொருள் விநியோக நடவடிக்கை இன்றும் இடம்பெறுவதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. விவசாய நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளின் பரிந்துரைகளின் கீழ் டீசல் வழங்கப்படுகிறது. போத்தல்கள் மற்றும் கலன்களில் எரிபொருளை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. கலன்களில் எரிபொருளைக் கொள்வனவு செய்து அவற்றை வெளியிடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றமை தொடர்பான … Read more

பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ள லிற்றோ எரிவாயு நிறுவன தலைவர்

லிற்றோ நிறுவன தலைவர் தெசேரா ஜெயசிங்க தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். இந்த கடிதம் இன்று கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிற்றோ எரிவாயு கொள்கலன்களில் வெடிப்புகள் ஏற்பட்ட வேளையில் அவர் பதவி விலக்கப்பட்டு  அவரின் பதவிக்காக புதிய ஒருவரும் நியமிக்கப்பட்டார்.. எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரையே மீண்டும் லிற்றோ தலைவராக நியமித்தார்.  Source link

தென் ஆப்பிரிக்காவில் கனமழை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 341 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்கா டர்பன் மாகாணத்தில் கடந்த 11ம் திகதி முதல் கனமழை பெய்துவருகிறது. இதனால் அந்த மாகாணத்தின் குவாஹுலு-நடாலா நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள நிலையில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 341 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம்இ நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்தன. வீதிகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில்இ டர்பனில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் … Read more

தென்னிலங்கை அமைச்சரை கண்ணீர் விட்டு கதற வைத்த பொது மக்கள்

இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார வீடு இன்று பொது மக்களால் முற்றுகையிடப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சிக்கு மத்தியில் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றவரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என கூறி பொது மக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் தனது வீட்டை சுற்றி போராட்டம் நடத்த வேண்டாம் என என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார பொது மக்களிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். “எனது வீட்டை முற்றுகையிடாதீர்கள். எனக்கு ஒரு … Read more

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாடு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை வரையறுத்துள்ளது. இதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு ஆயிரம் ரூபாவுக்கும் ,முச்சக்கரவண்டிகளுக்கு ஆயிரத்து 500 ரூபாவுக்கும் மாத்திரமே ஒரு தடவையில் எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை நிரப்ப முடியும். அத்துடன் கார், ஜீப் வண்டிகளுக்கு ஐயாயிரம் ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (15) பி.ப. 1.00 மணி முதல் எதிர்வரும் 2 வாரங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எனினும் பஸ்கள், பாரவூர்த்திகள் … Read more

குற்றச்சாட்டை நான் ஏற்றுக் கொள்கிறேன்! நாமல் பகிரங்கமாக தெரிவிப்பு

எங்கள் மீது முன்வைக்கப்படும் பெரும் குற்றச்சாட்டு என்னவென்றால் எங்கள் திட்டங்களை நாங்கள் மக்களுக்கு தெரிவிக்கவில்லை என்பதே, அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியும், அரசாங்கமும் தங்கள் திட்டங்கள் குறித்து மக்களுடன் அதிக வெளிப்படை தன்மையுடன் இருந்திருக்க வேண்டும். மக்களிற்கு அவற்றை அதிகளவிற்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். எங்கள் மீது முன்வைக்கப்படும் பெரும் குற்றச்சாட்டு … Read more

திருகோணமலையில் இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள்

திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பொது இடத்தில், மதுபானம் அருந்திவிட்டு மோதலில் ஈடுபட்ட நான்கு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவ வீரர்கள் நால்வர் பொது இடத்தில் மது அருந்திவிட்டு அநாகரிகமான முறையில் செயற்படுவதாகவும், சண்டையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் … Read more

புதிய சுபீட்சமான நாடு உருவாகுமென எதிர்பார்க்கிறோம்: உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தம்மிக்க பிரசாத் தெரிவிப்பு

மிக விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்குமென நம்புவதாகவும், ஒரு புதிய சுபீட்சமான நாடு உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இவர் தனது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உண்மையாகவே நான் இதில் கலந்து கொள்ள தீர்மானித்ததற்கான காரணம், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் அமைதியான … Read more

காலி முகத்திடலில் சற்று முன்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் (Video)

இரண்டாம் இணைப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை காலிமுகத்திடலில் சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளார். முதல் இணைப்பு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் நாளை (15) கொழும்பு காலி முகத்திடலில் 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார். நாளை காலை காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுடன் இணைந்து ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கும் நீதி வழங்குமாறு இந்த நாட்டின் தலைவர்களை வலியுறுத்தி … Read more