சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் திரும்ப விசேட போக்குவரத்து வசதி

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச்சென்ற மக்கள் ,மீண்டும் பிரதான நகரங்களுக்குத் திரும்புவதற்காக மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இன்று (15) முதல் இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க ஸ்வர்ணஹங்ச தெரிவித்தார். மேலதிக பஸ்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தூரப் பிரதேசங்களில் இருந்து கொழும்பு வருவதற்கான தேவையான பஸ் சேவைகளை இன்று தொடக்கம் மேற்கொள்ளுமாறு பிராந்திய முகாமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் … Read more

மக்களின் அழுத்தங்களுக்கு அடி பணிய மாட்டோம்: எச்சரிக்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் எவ்வித அழுத்தங்களும் அடிப்பணியாமல் அவசியமான நபர்கள் அடங்கிய அமைச்சரவை ஒன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை நியமியத்து அரசாங்கத்தை தொடர்ந்து நடத்தி செல்வதற்காக ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான தாமரை மொட்டு கட்சியின் பிரதான அரசியல்வாதிகள் தீர்மானித்துள்ளனர். புதுவருடம் நிறைவடைந்தவுடன் உடனடியாக புதிய அமைச்சரவையை நியமித்து பணிகளை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சரவையை பெயரிடும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சில முன்னாள் அமைச்சர்களுக்கு மட்டும் அமைச்சுக்கள் வழங்கப்பட மாட்டாது … Read more

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் பிரித்தானியா

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்த பிரித்தானியா முடிவு செய்துள்ளது. இதற்கமைய, 4,000 மைல்கள் தொலைவிலுள்ள ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பிலான ஒப்பந்தத்தை முதல் முறையாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுடன் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவோரின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் நிலையில், அவர்கள் ருவாண்டாவில் தங்க வைப்பது தொடர்பான ஐந்தாண்டு  ஒப்பந்தத்தில் பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் கையெழுத்திடவுள்ளார். இவை ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளுக்கு இந்த ஒப்பந்தம் … Read more

இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் நடக்க வாய்ப்பு இல்லை – அர்ஜூன ரணதுங்க

பொருளாதார நெருக்கடியால் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடக்க வாய்ப்பு இல்லை என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் ஆசிய கோப்பை போட்டி நடைபெறுமா என்பது உறுதி இல்லை.மற்ற நாடுகளை நம்பி இருக்க வேண்டி உள்ளது. மக்களின் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிராக இருக்கிறது. கிரிக்கெட்டுக்கு எதிராக அவர்களது மனநிலை இல்லை. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலே இலங்கையில் இருந்து … Read more

புத்தாண்டு தின அருள்மிகு ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த் திருவிழா (Photos)

புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்திருவிழா வழிபாட்டிலும் ஈடுபட்டுள்ளனர்.  வவுனியாவில் உள்ள முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகிய வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் திருக்கோவிலின் மகோற்சவப் பெருவிழா கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. மகோற்சவப் பெருவிழாவின் 9 ஆம் நாளான இன்று (14.04) தேர்த் திருவிழா மகோற்சவ பிரதம குரு சிவசிறி மயூரக் குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. … Read more

கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் உக்ரைனின் தாக்குதலுக்கு உள்ளான ரஸ்ய ஏவுகணை கப்பல்(Video)

 உக்ரைனின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் மொஸ்க்வா என்ற ரஸ்யாவின் ஏவுகணை கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதாக உக்ரைன் இராணுவம் கூறுகிறது எனினும் மொஸ்க்வா இன்னும் மிதக்கும் நிலையில் உள்ளது என்று ரஸ்ய இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். உக்ரைன் படையினரின் நெப்டியூன் ஏவுகணைகளால் தாக்கப்பட்ட பின்னர் ரஸ்ய கப்பல் மூழ்கத் தொடங்கியதாக உக்ரைனிய இராணுவம் கூறுகிறது. உக்ரைன் தெற்கு இராணுவக் கட்டளையின் தகவல்படி, கப்பலுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டதாகவும் தாக்குதலின் பின்னர் கப்பல் தீப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் மொஸ்க்வா கப்பலில் ஏற்பட்ட … Read more

மாமியார் வீட்டுக்கு போன தாமரை….யாரை சந்தித்துள்ளார் பாருங்க! தீயாய் பரவும் புகைப்படம்

பிக்பாஸ் அல்டிமேட்டுக்கு பிறகு தாமரை மாமியார் வீட்டுக்கு சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. 5வது சீசனில் தாமரை வெற்றிபெறவில்லை. அல்டிமேட் நிகழ்ச்சியில் அவர் ஜெயிக்கும் வாய்ப்பு இருப்பதாக மக்கள் நினைத்தார்கள். ஆனால் அவரை விட கடுமையாக விளையாடி பாலாஜி அல்டிமேட் நிகழ்ச்சி பட்டத்தை வென்றுவிட்டார். மாமியாரை சந்தித்த மருமகள் ஆனால் இறுதிக்கட்டம் வரை போராடிய தாமரைக்கு மக்களின் ஆதரவு பெறுகியுள்ளது. பிக்பாஸ் பிறகு தாமரை தனது மாமியாரை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார். அவர் … Read more

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பி நந்தலால் வீரசிங்க, வெளிநாட்டில் வதிகின்ற இலங்கையர்களுக்கு விடுக்கும் செய்தி

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் நீடித்து நிலைக்கின்ற தாக்கம், உலக அரசியல் சமமின்மைகள் அத்துடன் நாட்டின் பேரண்டப் பொருளாதார சமமின்மைகள் காரணமாக தற்போது இலங்கை சமூகப் பொருளாதார மற்றும் நிதியியல் இடர்பாடுகளை எதிர்கொண்டு,ள்ளமை நாட்டு மக்களுக்கு இன்னல்களைத் தோற்றுவித்துள்ளது. நாட்டின் மேற்குறித்த நிலைமையினை கையாள்வதற்கு, நாட்டின் படுகடன் கடப்பாடுகளை முனைப்பாக முகாமைசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், ஏனைய நாடுகளிடமிருந்து உடனடி நிதி உதவியினை நாடுதல் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நிகழ்ச்சித்திட்டமொன்றுக்காக பன்னாட்டு நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தல் உள்ளடங்கலாக பல … Read more

அமெரிக்க ஜனாதிபதி பைடனை கேலிக்குள்ளாக்கும் சவூதியின் நிகழ்ச்சி! உறவில் விரிசல் அச்சம்!(Video)

அமெரிக்க ஜனாதிபதி பைடனின் அழைப்பை, சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் புறக்கணித்தமையும், பைடனை கேலிக்குள்ளாக்கி சவூதி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பட்ட அரசியல் கேலிச்சித்திர நிகழ்ச்சியும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தலாம் என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. உக்ரைன் மீது ரஸ்யா மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் காரணமாக மசகு எண்ணெய்யின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் அது குறித்து பேசுவதற்கான கோரிக்கையை அமெரிக்கா, சவூதி இளவரசருக்கு விடுத்திருந்தது. எனினும் அவர் அதனை நிராகரித்து விட்டார். … Read more