போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் புலனாய்வு பிரிவினரால் கைது (Video)

அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக இரத்தினபுரி சிறிபாகம-குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துகொண்டார். நாளை என் வேலை எனக்கு இல்லாமல் போகலாம், இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு இதை சொல்லியே ஆக வேண்டும் என காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் இன்று பொலிஸ் உத்தியோகத்தரொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் அவர் தற்பொழுது புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  தொடர்பிடைய செய்தி  … Read more

ஜனாதிபதி கோட்டாபயவை ஏமாற்றிய நம்பிக்கைக்குரியவர்கள்! அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்த விடயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிக நம்பிக்கை வைத்திருந்த சிலர் அவரை ஏமாற்றிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போதுள்ளதை விட மிகப் பெரிய வகிபாகம் ஒன்றை வகிக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கின்றேன். எனது மதிப்பீட்டின்படி பசில் ராஜபக்ச நிதி அமைச்சர் பதவியை எடுக்காமல் இருந்திருக்கலாம். பிரதமர் மகிந்தவே நிதியமைச்சராக இருந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ரணில் விக்ரமசிங்க … Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படங்கள் குப்பைத்தொட்டிகளில்: போராட்டக்காரர்கள் ஆவேசம்

20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டாகோகம’யில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் அவர்களின் புகைப்படத்தை ஒட்டி போராட்டக்காரர்கள் தமது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கோரி அரசுக்கு எதிராக நாடு பூராகவும் கடந்த வாரம் தொடக்கம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் காலிமுகத்திடலில் தொடர்ந்து ஆறு நாட்களாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிலும் புதுவருட தினமான இன்றும் சர்வமத மக்களும் ஒன்றிணைந்து அரசுக்கு எதிரான … Read more

'இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவுக்கு வரும்'

தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலை இந்தியாவுக்கும் ஏற்படும் என்று இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சார் ப. சிதம்பரம் எச்சரித்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார். ‘தவறான பொருளதாரக் கொள்கைகளை இந்திய அரசு தொடர்ந்து பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நமக்கு வரக்கூடிய அபாயம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

“உங்கள் விலைமதிப்பற்ற தியாகங்களை யாராலும் சிறுமைப்படுத்தவோ மறக்கவோ முடியாது” என்று இராணுவ தளபதி 'அபிமன்சல' போர் வீரர்களிடம் தெரிவிப்பு

ஜனநாயகத்தையும் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் போர்க்களத்தில் செய்த வீரம் மற்றும் உயர்ந்த தியாகங்கள் மற்றும் எவ்வாறு அவர்கள் தங்கள் உயிரையும், கால்களையும் பணயம் வைத்து எதிரிகளை எதிர்த்துப் போரிட்டார்கள் என்பதனையும் மறந்துவிடமுடியாது. பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா அவர்கள் ஏப்ரல் 13 பிற்பகல் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினம் பிறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர், கடுமையாக காயமடைந்த மற்றும் நிரந்தர அங்கவீனமுற்ற … Read more

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் சந்தை விலை இந்த வாரத்தில் 1.1 சதவீத வளர்ச்சியுடன் 1945 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளது.   இதேவேளை இலங்கையில் 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 173,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.  22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 159,100 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.  Source link

இந்தியாவில் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்று இடம்பெற்ற கொரோனா ஒப்பிடும்போது இன்று (14) கொரோனா பாதிப்பு சற்று குறைவாக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (14) காலை வெளியிட்டது. அதன்படிஇ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1 ஆயிரத்து 88-ஐ விட குறைவாகும். இதனால்இ நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 … Read more

திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த சில தினங்களில் திடீர் விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காணக்கூடியதாக இருப்பதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலை ,தாதி பயிற்சிப்பிரிவின் தாதி அதிகாரி புஸ்பா ரமனி டி சொய்சா தெரிவிக்கையில், பண்டிகைக்காலத்தில் ஏற்படக்கூடிய இவ்வாறான விபத்துக்களை குறைத்துக்கொள்வதில் அனைவலும் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். வீதியில் செல்லும் போது வீதி ஒழுங்குவிதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவதன் மூலம் விபத்துக்களை குறைத்துக்கொள்ள முடியும். மதுபாவனையினாலும் பாரிய அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன.திடீர் விபத்துக்களில் 85 வீதமானவை … Read more

எனக்கு வேலையும் இல்லாமல் போகலாம்! அரசாங்கத்திற்கு எதிராக கொதித்தெழுந்த பொலிஸ் உத்தியோகத்தர்

நாளை என் வேலை எனக்கு இல்லாமல் போகலாம், இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு இதை சொல்லியே ஆக வேண்டும் என காலிமுத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கும் என் மனைவிக்கும் எமக்கென்று ஒரு சொந்த வீடு கட்டவேண்டும் என ஒரு பெரிய ஆசை, கனவு இருந்தது! ஆனால் அந்த ஆசை, கனவை எல்லாம் இந்த அரசாங்கம் உடைத்துவிட்டது. இன்று சீமெந்து விலை, இரும்பு கம்பியின் விலை என … Read more

பொருளாதார கூட்டுறவு தொடர்பில் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

பொருளாதார கூட்டுறவு தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உயர் மட்டப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். புதுடெல்லியில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்போது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் கொள்வனவிற்கு இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்காக உயர்ஸ்தானிகர் மொரகொட, நன்றியைத் தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு எவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட முடியும் என்பது … Read more