சித்திரைப் புத்தாண்டு தினமான இன்றும் காலி முகத்திடல் பகுதியில் போராட்டம் முன்னெடுப்பு

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று 6ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி முதல் ஜனாதிபதி செயலகம் முன்பாக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் இன்றைய தினம் புத்தாண்டு கொண்டாட்டத்துடன், போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  Source link

சவால்களை வெற்றிகொள்ளும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய  பிரார்த்திக்கின்றேன் 

மலர்ந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, நிலவுகின்ற சவால்களை வெற்றிகொள்ளும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய  பிரார்த்திக்கின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விடுத்துள்ள தமிழ் சிங்கள் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.   புத்தாண்டு வாழ்த்துச் செய்தி தற்போது நிலவுகின்ற பொருளாதார மற்றும் உலகளாவிய நெருக்கடியான நிலையில், வரலாற்றில் மிகப் பெரிய சவாலை இலங்கையர்களாகிய நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒற்றுமையுடனும், சரியான புரிந்துணர்வுடனும் நாம் அதனை வெற்றிகொள்ள வேண்டும். சவால்களுக்கு முகங்கொடுப்பதில் நீங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் … Read more

சபாநாயகரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

சபாநாயகரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி இலங்கையர்களாகிய சிங்கள, தமிழர்களாகிய நம் அனைவருக்கும் தற்போது பிறந்திருப்பது வருடத்தின் மகிமையான பண்டிகையான சிங்கள-தமிழ் புத்தாண்டாகும். இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு மேலான நீண்ட வரலாற்று காலத்தில் நாம் இந்த மாபெரும் கலாசார விழாவை எமது தேசிய பாரம்பரியமாகக் கருதி அதனை எதிர்கால சந்ததியினரும் உணர்ந்துகொள்ளும் வகையில் உயர்வாகக் கொண்டாடி வருகின்றோம். கடந்த காலங்களில் நாம் முகங்கொடுத்த சிக்கலான, சவால் மிக்க காலப் பகுதியிலும் இவ்வாறான நிகழ்வைக் கொண்டாட நாம் தவறவில்லை. எமது … Read more

இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர் கடனுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக தகவல்

இலங்கைக்கு மேலும் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  உணவு மற்றும் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கும் தொடர்ச்சியாக உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.  சுதந்திரத்தின் பின்னர் இலங்கை எதிர்நோக்கும் மிகப்பாரிய பொருளாதார நெருக்கடி நிலைமை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு கூடுதல் எண்ணிக்கையில் உதவிகளை வழங்க அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்தியா இலங்கைக்கு சுமார் 1.9 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவும் இலங்கைக்கு … Read more

வடக்கு,கிழக்கு ,வடமத்திய, ஊவா மாகாணங்களில் 75 மி.மீ மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்14ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 14ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

கடற்பகுதிகளில், இடியுடன் கூடிய மழை பலமான காற்று

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 14ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 … Read more

திண்டாட்டத்தில் மக்கள் – லிட்டில் லண்டனில் மகிழ்ச்சியில் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

நாட்டில் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், தென்னிலங்கை அரசியல்வாதிகள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தினால் நுவரெலியாவில் நடத்தப்பட்ட வரும் பங்களாவில் தங்குவதற்கான அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். அனைத்து வசதிகளையும் கொண்ட பங்களாவில் 19 அறைகள் உள்ளன. அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு நேரத்தில் 3 அறைகளை 3 நாட்களுக்காக ஒதுக்கிக் கொள்ள முடியும். இதேவேளை, சில உறுப்பினர்கள் இந்த பங்களாவில் தங்கள் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கும் அறைகளை … Read more

அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர்

நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையை கடந்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமரின் தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி இலங்கையர்களின் தொன்மைமிகு பாரம்பரியமான தமிழ்-சிங்கள புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். துன்பத்தை வென்று மகிழ்ச்சியை அடையும் எதிர்பார்ப்பை குறிக்கும் தமிழ்-சிங்கள புத்தாண்டானது நம் அனைவரதும் மாபெரும் கலாசார பெருவிழாவாகும். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று சமூக-கலாசார … Read more

அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்ள பல நாடுகளுடன் கலந்துரையாடல்

இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பல நாடுகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பங்களிப்பும் பெறப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். சிங்கப்பூர், இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேஷியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் விலைவாசி உயர்வு

அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சில்லறை விலைவாசி உயர்வு விகிதம் மார்ச் மாதத்தில் 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பல ஆண்டுகளாகவே விலைவாசி உயர்வு விகிதம் மிக குறைவான அளவில் காணப்பட்டதுடன், கடந்த 2020 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் விலைவாசி உயர்வு விகிதம் 2% அளவில் காணப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்புகளில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்க வட்டி விகிதத்தை 0.25% ஆக அமெரிக்க ரிசர்வ் வங்கி … Read more