மிகவும் கீழ்த்தரமான விடயம்: பசிலுக்கு அறிவுரை கூறிய சஜித் (Photo)

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பசில் ராஜபக்ஸவிற்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏலத்தில் விற்க முடியாது எனவும், அவ்வாறு பணம் கொடுத்து நாடாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டு அதிகாரத்தை தக்கவைக்க முயற்சிப்பது கீழ்த்தரமான விடயம் எனவும் அவர் ட்விட்டர் பதிவினூடாக தெரிவித்துள்ளார். Cheap power is when you have to buy it. @RealBRajapaksa stop trying to buy MPs. … Read more

பல மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை (Photos)

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட ஏ- 32 வீதியின் முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் வெளிமாவட்ட பேருந்துகளும் உள்ளுர் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளும் குறித்த பேருந்து நிலையத்தில் தரித்து செல்வது இல்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏ- 32 வீதியின் முழங்காவில் பகுதியில் பல மில்லியன் ரூபா செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ள போதும் இவ் வீதி ஊடாக பயணிக்கும் பேருந்துகள் உணவகங்கள் மற்றும் வீதியோரங்களில் தரித்துச் செல்வதாகவும் இதனால் பயணிகள் … Read more

பசிலால் பதுக்கப்பட்ட பணத்தால் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்ற முயற்சிக்கலாம்: அம்பலப்படுத்தும் முக்கியஸ்தர்

அரசாங்கம் மீண்டும் பழைய வழமையான பயணத்தை முன்னெடுக்க முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது, இதற்கு உரிய தீர்வுகளை வழங்க அரசாங்கம் முயற்சிக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்றிரவு ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், வழமையான பாதையில் பயணிக்க முடியாது என்பதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கத்திற்கு முன்னோக்கிச் செல்ல முடியாது. மக்கள் அதற்கு இடமளிக்க மாட்டார்கள். … Read more

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை, சதொச நிறுவன வலைப்பின்னல் ஊடாக பொது மக்களுக்கு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை சதொச நிறுவன வலைப்பின்னல் ஊடாக பொது மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெலிசறை, இரத்மலானை ஆகிய பிரதான மத்திய நிலையங்களில் இந்த அரிசி பகிர்ந்தளிக்கப்படுவதாக சதொச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான விஷ்வ லொக்குகமகே தெரிவித்தார். இதற்கமைவாக ,சதொச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சம்பா அரிசி 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். சகல சதொச விற்பனை நிலையங்களும் எதிர்வரும் 16ம் திகதி மீண்டும் திறக்கப்படுமென்றும் அவர் கூறினார்.

நாளை புதுவருடம்: இருமடங்காக அதிகரித்த உணவுப் பொருட்களின் விலை

நாளைய தினம் தமிழ் சிங்கள புதுவருடம் பிறக்கவுள்ள நிலையில் திண்பண்டங்களின் விலைகள் இருமடங்காக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.   பயற்றம் பலகாரம், கொண்டை பலகாரம், அதிரசம் போன்ற 70 ரூபா தொடக்கம் 80 வரை விற்பனை செய்யப்படுகின்றன.  ஒரு கொக்கிஸ் 30 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.   இதேவேளை, ஒரு கிலோ பட்டர் கேக்கின் விலை ஆயிரம் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.  தேங்காய் எண்ணெய், சீனி, அரிசி மா மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பும் பற்றாக்குறையும்  காணப்படுவதால் இவ்வாறான நிலை … Read more

எரிபொருள் தொடர்பில் நேற்று 68 சுற்றிவளைப்பு

சட்டவிரோதமாக எரிபொருளை சேகரித்தமை, களஞ்சியப்படுத்தியமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் நேற்றைய (13) தினம் 63 சுற்றிவளைப்புக்களை பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்டனர். இதன்போது, ஐயாயிரத்து 690 லீற்றர் பெற்றோலும், ஐயாயிரத்து 620 லீற்றர் மண்ணெண்ணெயும், பத்தாயிரத்து 115 லீற்றர் டீசலும் கைப்பற்றப்பட்டன. சட்டவிரோதமாக எரிபொருள் சேகரித்தல் மற்றும் களஞ்சியப்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  

இன்றும், நாளையும் விசேட போக்குவரத்து சேவை

தமிழ் மற்றும் சிங்கள  புதுவருட பண்டிகைக்கு அமைவாக, இன்றும், நாளையும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க ஸ்வர்னஹங்ச தெரிவித்துள்ளார். இந்த பஸ்களுக்கு தேவையான எரிபொருள் சபையிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த 8ஆம் திகதி தொடக்கம் 24 மணித்தியாலமும் விசேட பஸ்கள் சேவைகள் இடம்பெற்றுவருகின்றன.  

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கிடைத்த வெற்றி: மஹிந்த தேசப்பிரிய வெளியிட்ட தகவல்

அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளமையானது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் அவர் பதிவொன்றையும் இட்டுள்ளார்.  பேச்சுவார்த்தை என்பது ஒரு முக்கிய உத்தி என்பதால் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அதை நிராகரிக்க கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   Source link

விபத்துக்களைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு பொதுமக்களுக்க அறிவுறுத்தல்

புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பட்டாசுகளால் ஏற்படும் விபத்துக்கள் அதிகளவில் பதிவாவதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின், பயிற்றுவிப்பு தாதி உத்தியோகத்தர் புஷ்பா ரம்யாணி டி சொய்ஸா தெரிவித்துள்ளார். வீடுகளில் தற்போது பெற்றோல் சேமித்து வைக்கப்படுகின்ற நிலையில், விபத்துகள் ஏற்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனிடையே, பண்டிகைக் காலத்தில் சுற்றுலாவை மேற்கொள்வோர் நீர்நிலைகளில் நீராடுவது குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதேநேரம், மதுபோதையுடன் வாகனம் செலுத்துவதையும் தவிர்க்குமாறும் … Read more

மைலடியில் ,முன்னாள் போராளிகளுக்காக தளபதியின் புதிய வீட்மைப்புத் திட்டம்

யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு இயன்றளவு வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், 2021 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி யாழ்ப்பாணம் மயிலடியைச் சேர்ந்த திரு ராசவல்லன் தபோரூபனின் ஏழ்மை நிலையை தளபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து அவருக்குப் புதிய வீட்டினை நிர்மானிக்கும் திட்டமானது பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, மற்றும், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் … Read more