போராட்டத்தை திசைத் திருப்ப அரசாங்கம் மேற்கொள்ளும் சதி

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் பாதையை மாற்றுவதற்காக அரசாங்கம் இனவாதத்தை பயன்படுத்த முயல்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை  செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துளு்ளார்.   மக்களின் போராட்டங்களை அரசாங்கம் திசைமாற்றவும், ஆர்ப்பாட்டங்களின் நோக்கங்களை குறைப்பதற்கும் அரசாங்கம்  கடுமையான முயற்சிகளை  மேற்கொள்கின்றது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.   இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,  நியாயப்படுத்தக்கூடிய நோக்கங்களிற்காக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களின் இயல்பை மாற்றுவதற்காக அரசாங்கம் அரசியல் மத காய்நகர்த்தல்களை முன்னெடுக்கின்றது. எனினும் தங்கள் முயற்சிகளை முன்னெடுப்பதற்கான தனிநபர்கள் அரசாங்கத்திற்கு கிடைக்காததால் அரசாங்கத்தின் நோக்கம் … Read more

ராஜபக்ஷர்களின் மோசடியை அம்பலப்படுத்திய தென்னிலங்கை அரசியல்வாதி

புதிய அமைச்சரவையில் ராஜபக்‌ஷ குடும்பத்தில் எவருக்கும் இடமில்லை என முன்னாள் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர எனத் தெரிவித்துள்ளார்.  நாளை அமைக்கவுள்ள அமைச்சரவையில் திருடர்களுக்கு இடமில்லை, திருடர்களுடன் நாம் உட்கார மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சி என்ற வகையில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு சபையினூடாக பிரதமரை தெரிவு செய்ய முற்பட்டோம். வீதி அமைப்பதில் கொள்ளையடித்த பணத்தை கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ராஜபக்ஷர்கள் ஈடுபடுகின்றனர். இந்த பழைய விளையாட்டுக்களை மீண்டும் இங்கே … Read more

சுபகிருது வருடம் நாளை பிறக்கிறது

தமிழரது 60 வருட சக்கரத்தில் 36ஆவது ஆண்டான சுபகிருது வருடம் நாளை பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, நாளைக் காலை 7.50 இற்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம் காலை 8.41இற்கும் சுபகிருது வருஷம் பிறப்பதாக சோதிடர்கள் அறிவித்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், சிவப்பு அல்லது மஞ்சள் நிறப் பட்டாடையோ, சிவப்புக் கரை அமைந்த பட்டாடையோ அணிதல் சிறப்பு. மஞ்சள் நிறப் பட்டு அல்லது மஞ்சள் கரை கொண்ட வெள்ளை வஸ்திரத்தை அணிவது நல்லதென திருக்கணித பஞ்சாங்கம் கூறுகிறது. … Read more

மிகவும் கீழ்த்தரமான விடயம்: பசிலுக்கு அறிவுரை கூறிய சஜித் (Photo)

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பசில் ராஜபக்ஸவிற்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏலத்தில் விற்க முடியாது எனவும், அவ்வாறு பணம் கொடுத்து நாடாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டு அதிகாரத்தை தக்கவைக்க முயற்சிப்பது கீழ்த்தரமான விடயம் எனவும் அவர் ட்விட்டர் பதிவினூடாக தெரிவித்துள்ளார். Cheap power is when you have to buy it. @RealBRajapaksa stop trying to buy MPs. … Read more

புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம்

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவிக்கையில், நடமாடும் ரோந்துப் பணிகள், புலனாய்வு மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் காணாமல் போன, மூவரில் யுவதியொருவரின் சடலம் மீட்பு

நுவரெலியா இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில் யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது. காணாமற் போயுள்ள ஏனைய யுவதி மற்றும் இளைஞனின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. வவுனியா மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேரூந்து ஒன்றில், புத்தாண்டை முன்னிட்டு,  நுவரெலியாவுக்கு நேற்று (12) சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தனர் இறம்பொடையில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பஸ்ஸை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியையும், அதனை … Read more

இவ்வருட புத்தாண்டு அவ்வளவு தான்! மக்கள் ஆதங்கம்

இவ்வருடத்திற்கான புத்தாண்டை கொண்டாட முடியாத நிலையில் உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதுடன், எரிபொருள், எரிவாயு, பால்மா உள்ளிட்ட சில பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் நாளைய தினம் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாட உள்ள மக்கள் பலரும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.    இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே புத்தாண்டு கொண்டாட முடியாத நிலையில் உள்ள தமது ஆதங்கத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.  … Read more

367 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதிக்கான வரையறையை நீடிக்கும் வர்த்தமானி

அத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதிக்கான வரையறையை நீடிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சரால், 11 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் வௌியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் https://cdn.newsfirst.lk/tamil-uploads/2022/04/43b1fe84-2274-42_t.pdf

இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார கடமைகளை பொறுப்பேற்றார்

இராஜாங்க அமைச்சராக சாந்த பண்டார அவரது அமைச்சில் நேற்று (12) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத்தொடர்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ,தமது அமைச்சின் விடயதானத்திற்கு உட்பட்டவகையில் மோசடி அல்லது ஊழல்கள் இடம் பெறாதவகையில் பொறுப்புடன் செயல்படுவதாக தெரிவித்த அவர்,  கட்சிகள் முன்வைத்த இடைக்கால அரசாங்கம் சாத்தியமற்றது என்ற காரணத்தினாலேயே தாம் இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதாக கூறினார். சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல்இ நெல்இ தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், … Read more