எரிபொருள், காஸ் விநியோகத்தின் முறைகேடு: முறைப்பாடு செய்வதற்கு தொலைபேசி இலக்கம்

எரிபொருள், சமையல் எரிவாயு விநியோகத்தின் போது இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம். செய்யப்பட்டுள்ளது. 071-1691-691 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொண்டு இது தொடர்பான முறைப்பாடுகளை நுகரவோரினால் முன்வைக்க முடியும்.

கோட்டபாய அரசுக்கு எதிராக தாயும் மகளும் தனித்து போராட்டம்

இலங்கையின் சமகால அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. தலைநகர் கொழும்பு மட்டுமன்றி நாட்டின் பல பகுதிகளில் #GoHomeGota போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் களுத்துறையில் நடந்த போராட்டம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. களுத்துறை பாலத்தில் தாயும் மகளும் மட்டும் போராட்டத்தை முன்னெடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கூட்டம் இல்லாத போதும் குறித்த இருவரும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக பிரதான வீதியில் நின்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை பலரின் … Read more

இலங்கையின் அதீத பாதுகாப்பு செலவீனங்களும் அதன் பொருளாதார நெருக்கடியும் (PHOTOS)

இலங்கையின் அதீத பாதுகாப்புச் செலவீனங்கள் அதன் பொருளாதார நெருக்கடியையும், தமிழ் மக்களின் கசப்புணர்வையும் மோசமாக்குகின்றது.   அதற்கமைய,போர் முடிந்த பின் அதிகரித்துள்ள பாதுகாப்புச் செலவு (US $14.92 -> US $17.28 பில்லியன் விரயமாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு செலவு US $34.7 -> US $200 பில்லியன், வெளிநாட்டுக் கடன் US $50.7 பில்லியன் ஆகும். யுத்தம் முடிந்த பின்னும் அதிகரிக்கும் இராணுவ ஆளணி (223.000 -> 317,000),பாதுகாப்புச் செலவிற்கான நடப்பு வருட ஒதுக்கீடு வரவு செலவுத் திட்டத்தின் 15% … Read more

கடனை திருப்பிச் செலுத்தும் அனைத்துத் திறனையும் இலங்கை இழந்துவிட்டது – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு

கடனை திருப்பிச் செலுத்தும் அனைத்துத் திறனையும் இலங்கை இழந்து விட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (12) தெரிவித்தார். அறிவிக்காமல் கடன்களை செலுத்தாமல் இருப்பது ஒரு நாட்டின் மிக மோசமான நிலைமைக்கு வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு நாம் வந்துவிட்டோம். நாட்டில் பெட்ரோல், டீசல், மருந்துகள், பால்மா மற்றும் வெளிநாட்டு உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு … Read more

டொலர் நெருக்கடிக்கு முறையற்ற கொடுக்கல் வாங்கல் முறைகளும் தாக்கம் செலுத்தியுள்ளன

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு முறையற்ற கொடுக்கல் வாங்கல் முறைகள் தாக்கம் செலுத்தியிருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ தெரிவித்துள்ளார். முறையான வழிகளில் மாத்திரம் அந்நியச் செலாவணியை அனுப்புமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ அறிவுறுத்தியுள்ளார். வங்கிகளின் ஊடாக மாத்திரம் டொலர்களை கொள்வனவு செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  

அலரிமாளிகையில் ராஜபக்ச, சுமந்திரன் சந்திப்பு : நாட்டின் தீர்வு குறித்து ஆலோசனை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைக் குறுகிய காலத்தில் ஒழிப்பதாகக் காலவரையறை குறிப்பிட்டு அறிவித்து, அதைச் செய்து, அதன் முடிவில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆளும் தரப்பு இப்போதே உடனடியாக முன்வந்து செய்யதால்தான் இப்போதைய அரசியல் நெருக்கடிகளைச் சுமுகமாகத் தீர்த்து நாடு மீண்டெழுவதற்கு ஒரே வாய்ப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேரடியாகச் சந்தித்து அவருக்கு ஆலோசனை வழங்கினார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்.  பிரதமர் மஹிந்த ராஜபக்ச தரப்பின் அழைப்புக்கிணங்க நேற்று(12) … Read more

மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிப்பு

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. ஆபத்தான பிரதேசங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அடைமழை நிலவுமாயின் ஆபத்தான பிரதேசங்களில் உள்ள மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென்று நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது..

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் இருந்து விலகிய சுதந்திரக் கட்சி

கமத்தொழில் ராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்க அந்த கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார். இதனடிப்படையில், சாந்த பண்டார கட்சியில் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்து நீக்க மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். அத்துடன் சாந்த பண்டாரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை ஜனாதிபதியுடன் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. … Read more

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ,கொழும்பு கோட்டையிலிருந்து சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நலன்கருதி விசேட ரெயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக கல்கிசையில் இருந்து காங்கேசந்துறை வரையிலாக கடுகதி ரயில் ஒன்று இன்றும் எதிர்வரும் 12 ஆம் திகதி மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்த ரயில் கல்கிசையில் இருந்து இரவு 10.00 மணிக்கு காங்கேசன்துறையை நோக்கி பயணிக்கும் இது காலை 5.54 க்கு காங்கேசன்துறையை சென்றடையும். இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரையில் 17 ஆம் … Read more