இந்திய உதவி திட்டத்தின் கீழ் ,இலங்கைக்கு 11,000 மெட்ரிக் தொன் அரிசி

இந்திய உதவி திட்டத்தின் கீழ் ,இலங்கைக்கு வழங்கப்பட்ட 11,000 மெட்ரிக் தொன் அரிசி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதனை, கொழும்பு துறைமுகத்தில்வைத்து இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளால் ,இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. Supply of 11,000 MT of rice to Sri Lanka           A consignment of 11,000 MT rice, which arrived in Sri Lanka today under the concessional Indian Credit Facility of USD … Read more

ஆடையை களைந்து பெண்களை சித்திரவதைக்கும் ரஷ்ய துருப்புகள்! துணை பிரதமர் வேதனை

 ரஷ்ய துருப்புகள், பொதுமக்கள் மற்றும் உக்ரேனிய வீரர்கள் என சுமார் 1700 பேரை சிறைப்பிடித்துள்ளதாக உக்ரைன் துணை பிரதமர் Iryna Vereshchuk தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து 48வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்ய, இனி பேச்சுவார்ததைக்காக படையெடுப்பை நிறுத்தப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனில் 1700 பேரை ரஷ்ய துருப்புகள் சிறைப்பிடித்துள்ளதாகவும், அவர்களில் 500 பேர் பெண்கள் என துணை பிரதமர் Iryna Vereshchuk தகவல் தெரிவித்துள்ளார். சிறைபிடித்துள்ள உக்ரேனியர்களை உட்கார விடாமல் நிற்க … Read more

அரச தலைவர் செயலகத்திற்கு அருகில் மோதல் வெடிக்கும் அபாயம்: செய்திகளின் தொகுப்பு

கொழும்பு தாமரை தடாகம் அரங்கத்திற்கு அருகிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பேரணி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணி பௌத்த பிக்குகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், போலியான போராட்டங்கள் என்ற போர்வையில் சிங்கள பௌத்த மக்களின் நிலைப்பாட்டில் கை வைக்க வேண்டாம் என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரச தலைவர் மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவாகப் பிக்குகள் தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படுகிறது. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது … Read more

இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன அவர்களுக்கு கௌரவ பிரதமரினால் ,பிரதேச அபிவிருத்தி குழு தலைவருக்கான நியமனம் வழங்கிவைப்பு

புத்தளம் மாவட்டத்தின் ஆணைமடு தேர்தல் தொகுதியின் ஆணைமடு, நவகத்தேகம, பல்லம மற்றும் கருவலகஸ்வௌ பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவிக்கு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன அவர்களுக்கு நேற்று (11) அலரி மாளிகையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது. குறித்த சந்தர்ப்பத்தில் கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி … Read more

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிக்கான காரணத்தை வெளியிட்ட உலக புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்

இலங்கை மக்களின் வாழ்க்கைச் செலவு எவ்வாறு தாங்கமுடியாத அளவு அதிகரித்துள்ளது என்பதை உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியருமான ஸ்டீவ் ஹெங்க் விளக்கியுள்ளார். இலங்கையில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதாகவும், உணவு இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டிலிருந்து பொருட்களின் விலைகள் எவ்வாறு உயர்ந்துள்ளது என்பதற்கான விளக்கப்படம் ஒன்றையும் … Read more

அரச ஆதரவு குழு நுழையலாம்..! காலிமுகத்திடல் பகுதியில் வழங்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல் (Video)

அரசாங்கத்திற்கு ஆதரவான ஏதேனும் குழுவொன்று காலிமுகத்திடல் பகுதிக்குள் நுழைந்து அங்கிருக்கும் நிலைமையை சீர்குலைக்க முயற்சிக்கலாம் என அப்பகுதியில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அனைவரும் இது தொடர்பில் அவதானமாக செயற்படுவதுடன், ஒற்றுமையாக விழிப்புணர்வுடன் தொடர்ச்சியாக தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்றைய தினம் கொழும்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த குழு காலிமுகத்திடல் நோக்கி படையெடுக்க தீர்மானித்திருந்ததாக கூறப்படும் நிலையில் இறுதியில் அந்த தீர்மானம் … Read more