இன்றைய நாணய மாற்று விகிதம்! டொலரின் பெறுமதி தொடர்ந்து உயர்கிறது

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 20 சதமாகவும், விற்பனை பெறுமதி 329 ரூபா 99 சதமாக  பதிவாகியுள்ளது. இதேவேளை, ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 416 ரூபா 29 சதம். விற்பனை பெறுமதி 431 ரூபா 27 சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 350 ரூபா 05 சதம் விற்பனை பெறுமதி 361 ரூபா 83 சதமாகவும், சுவிஸ் … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கை – நிதியமைச்சின் அதிரடி நடவடிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக நிலுவையில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட சாதாரண வெளிநாட்டு கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவித்தலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் பொருளாதார சீரமைப்பு திட்டத்திற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார  நெருக்கடி காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் நாடியுள்ளது. அதற்கான நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Source … Read more

சர்வதேச ஊடகத்திடம் கோபமடைந்து தகாத வார்த்தைகளை பயன்படுத்திய ரணில்

சர்வதேச ஊடக நிறுவத்தின் செய்தி தொகுப்பாளர் எழுப்பிய கேள்வி காரணமாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடும் கோபமடைந்த நிலையில் காரசாரமான பதில்களை வழங்கியள்ளார். CNBC செய்தி சேவையின் மூத்த செய்தி தொகுப்பாளர் எழுப்பிய கேள்வியின் போதே ரயில் கடும் கோபமடைந்துள்ளார். ராஜபக்ஷ சகோதரர்கள் அனைவரையும் பதவி விலகுமாறு மக்கள் கூறுகின்றார்கள். ராஜபக்ஷர்களுக்கு எதிராக நாட்டு மக்கள் செயற்பட ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் நாட்டிற்கு புதிய தலைமைத்துவங்கள் தேவைடுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியில் 30 ஆண்டுகால தலைமைத்துவத்தில் … Read more

இன்று முதல் 14 ஆம் திகதி வரையில் பீப்பாய்கள், கான்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இன்று முதல் 14 ஆம் திகதி வரையில், பீப்பாக்கள் மற்றும் கான்களில் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள் விவசாய உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் அனுமதியுடன் வழங்கப்படும். எரிபொருள் இன்றி பயணத்தை தொடர முடியாமல் இடைநடுவில் நிற்கும் வாகனங்களுக்காக கான்களில் எரிபொருள் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் ,இவ்வாறான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் நடை முறை ஏற்கனவே நடைமுறையில் … Read more

பாதுகாப்பு செயலாளரினால் 2022 ஏப்ரல் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட விஷேட அறிக்கை

மிரிஹானையில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறி சில ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, அத்தகைய எந்தவொரு கூட்டமும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு சபை மற்றும் அதன் முக்கியத்துவத்தை விளக்கிய பாதுகாப்புச் செயலாளர், இந்தக் கூட்டங்களுக்கு அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நபர்கள் கலந்துகொள்ளும் வழிமுறை இல்லை என்பதையும் வலியுறுத்தினார். தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் … Read more

எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும்! இலங்கையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு

தமது கடமை நேர உத்தியோகபூர்வ தொலைபேசிகளை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள முடியும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு இலங்கையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவை பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்ன பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது.  அதன்படி அனைத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகளும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் (உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் முதல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வரை) தமது கடமை நேர உத்தியோகபூர்வ தொலைபேசிகளை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள முடியுமானவாறு செயலில் … Read more

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு…

  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார அவர்கள், சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்தல், நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழிநுட்பம், கமத்தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவர் நேற்று, (11) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். … Read more

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு – பல நகரங்களில் பொலிஸார் குவிப்பு

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அனைத்து முக்கிய நகரங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மக்கள் நகரத்திற்கு வந்தால் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை தடுக்கும் வகையில் விசேட பொலிஸ் குழுக்களை வீதி கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிக வேகமாக மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கு … Read more

புதிய பிரதமர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும் – உதய கம்மன்பில

நாட்டின் புதிய பிரதமர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் நபராக இருக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்வை வழங்க முடியாத இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் முழு நாடும் ஒன்றிணைந்துள்ளது எனவும் கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போதைய நிலை நீடித்தால் நாம் வாழ்வதற்கு ஒரு நாடு இருக்காது என்றார். மதகுருமார்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சி … Read more

அரசுக்கு எதிராக கட்சிகளை அணிதிரட்டும் சந்திரிக்கா!

கடந்த தேசிய அரசாங்கத்தை ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய அரசியல் நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து ஆலோசிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் இன்று சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் … Read more