அரசுக்கு எதிராக கட்சிகளை அணிதிரட்டும் சந்திரிக்கா!

கடந்த தேசிய அரசாங்கத்தை ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய அரசியல் நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து ஆலோசிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் இன்று சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் … Read more

பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை! (Photo)

உரிய அதிகாரியின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உன பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் தேவையில்லாமல் எரிபொருளை சேகரித்து அதனை மோசடியாக பயன்படுத்துவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் 68 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு 8,025 லீற்றர் பெற்றோல் மற்றும் 726 லீற்றர் டீசல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அனுமதியின்றி மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள் விற்பனை நிலையங்களை சோதனையிட்டதன் பின்னர் … Read more

மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க கூடாது – குமார் சங்கக்கார

இலங்கையில் மீண்டும் ஊழல், உறவுமுறை மற்றும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்கக் கூடாது என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “அதிக விழிப்புணர்வோடும் துணிச்சலோடும் ஒரு தலைமுறையினரால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இத்தருணத்தில், இலங்கையர்கள் ஒன்றிணைந்து இந்த நெருக்கடியிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள். இனவாத அல்லது மதப் பிளவுகள் சமூகத்திலோ அல்லது அரசியலிலோ மீண்டும் பிரவேசிக்க இடமளிக்காது என நான் நம்புகிறேன். அத்துடன் ஊழல், உறவுமுறை அல்லது … Read more

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கௌரவ பிரதமர் அவர்களின் விசேட உரை

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கௌரவ பிரதமர் அவர்களின் விசேட உரை நண்பர்களே! எங்கள் நாடு மிகவும் இக்காட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த தருணத்தில் உங்கள் மத்தியில் உரையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு காலத்துக்கும் மேலான எனது அரசியல் வாழக்கையில் மிகவும் தீர்மானம் மிக்க அரசியல் மைல்கற்களை கடந்து வந்துள்ளேன் என்பதை குறிப்பிட வேண்டும். கொரோனா தொற்றுநோய்க்கு பின்னர் நாம் எதிர்கொள்ள வேண்டி நேரிட்ட பொருளாதார பிரச்சினைகளை நம் நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் … Read more

ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வாழ முடியாத நிலைமை ஏற்படும்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் வாழ கூட முடியாத நிலைமை ஏற்படும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர், யுவதிகளின் பிரச்சினைகள் சிலவற்றுக்கு பதிலளித்து ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு ரணில் விக்ரமசிங்கவின் உரை அடங்கிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. இளைஞர்களின் போராட்டமானது இலங்கையின் தற்போதைய அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய அரசியல் புரட்சி. கூடிய கூட்டத்தை பாருங்கள் பாரியளவில் கூடியுள்ளனர். அரசியல் கட்சிகள் அதிகளவில் மக்களை அழைத்து … Read more

பாதுகாப்பு அமைச்சினால் 2022 ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, சட்டபூர்வமான சேவை நீடிப்பின்றி அந்த நியமனத்தில் சேவையாற்றுவதக சமூக ஊடக தளங்களில் பொது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் போலியாக புனையப்பட்டு பரப்பப்பட்டு வரும் தகவலை பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கான சேவை நீடிப்பு 2021ஆம் டிசம்பர் மாதம் 31 முதல் அமுலுக்கு வந்தது. வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்னும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மண்சரிவு அனர்த்த பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மண்சரிவு அனர்த்தம் பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. சிவப்பு எச்சரிக்கையை பின்பற்றுமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.  

மூன்றாவது இரவிலும் கொட்டும் மழையில் தொடரும் மக்கள் போராட்டம் (Video)

காலிமுகத்திடலில் மூன்றாவது நாள் இரவுப்பொழுதிலும் கொட்டும் மழையில் “கோட்டா வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் மக்களின் மாபெரும் போராட்டம் தொடர்கின்றது. ஏராளமான மக்களின் பங்குபற்றுதலுடன் மழைக்கு மத்தியிலும் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கோட்டாபய வீட்டுக்குப் போகும் வரை நாங்கள் வீட்டுக்குப் போகமாட்டோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ள நிலையில் இவ்வாறு போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக இரண்டு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு, குடிதண்ணீர் மற்றும் குடி பானங்களை வழங்கி வருகின்றனர். அரசின் … Read more

வர்த்தமானியில் அறிவிக்கப்படாத மருந்துப் பொருட்களின் விலை கூடுதலாக அதிகரிக்காது

வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படாத மருந்து வகைகளின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிக்க ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் இந்த விலை மட்டம் கூடுதலாக அதிகரிக்காது என அதிகார சபையின் தலைவர் டொக்டர் ரசித விஜேவந்த தெரிவித்துள்ளார். மருந்து வகைகளின் விலைக் கட்டுப்பாட்டை நீக்குமாறு மருந்து இறக்குமதியாளர்களும் விநியோகஸ்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன்படி வர்த்தமானி மூலம் விலை கட்டுப்படுத்தப்படாத மருந்துகளின் விலைகளை மாத்திரம் திருத்தியமைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. டொலரின் விலை … Read more