வர்த்தமானியில் அறிவிக்கப்படாத மருந்துப் பொருட்களின் விலை கூடுதலாக அதிகரிக்காது

வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படாத மருந்து வகைகளின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிக்க ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் இந்த விலை மட்டம் கூடுதலாக அதிகரிக்காது என அதிகார சபையின் தலைவர் டொக்டர் ரசித விஜேவந்த தெரிவித்துள்ளார். மருந்து வகைகளின் விலைக் கட்டுப்பாட்டை நீக்குமாறு மருந்து இறக்குமதியாளர்களும் விநியோகஸ்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன்படி வர்த்தமானி மூலம் விலை கட்டுப்படுத்தப்படாத மருந்துகளின் விலைகளை மாத்திரம் திருத்தியமைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. டொலரின் விலை … Read more

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக களத்தில் இறங்கிய வெளிநாட்டவர்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   இந்த நிலையில், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் இன்றையதினம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.  அம்பலாங்கொட  பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   இலங்கையில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.   எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என சுற்றுலாப் பயணிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.   … Read more

விமான நிலைய ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

புத்தாண்டு கொடுப்பனவு கோரி விமான நிலையம் மற்றும் விமான சேவை ஊழியர்கள் இன்று காலை ஆரம்பித்த தொழிற்சங்கப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 30,000 ரூபா புத்தாண்டுக் கொடுப்பனவு வழங்கக் கோரி விமான நிலைய வளாகத்துக்குள் போராட்டத்தை ஆரம்பித்தனர். தொழிற்சங்கங்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து புத்தாண்டுக் கொடுப்பனவாக ரூபா 25,000 வழங்க இணக்கம் காணப்பட்டது.  Source link

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அணிசேரா நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிப்பு

அணிசேரா இயக்கத்தில் உள்ள நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஏப்ரல் 07 ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கத்தின் பதில்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தூதுவர்களிடம் விளக்கினார். இதில் அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்கள் குறித்த கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்திலான சீர்திருத்தம், அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்கான தயார் … Read more

ஆவேசத்தில் போராட்டக்காரர்கள்; அரசியல்வாதிகளை விரட்டும் இளைஞர்கள் – செய்திகளின் தொகுப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகக் கொழும்பு காலிமுகத்திடலில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்திற்குத் தான் சென்றாலும் மக்கள் தன்னை அங்கிருந்து வெளியேற்றி விடுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். மக்களின் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அரசியல் தோற்றத்தை ஏற்படுத்தக் கூட என்பதால், தான் அதில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் … Read more

ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டகாரர்கள் உருவாக்கியுள்ள கிராமம் (Photos)

ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் நடைபெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டகாரர்கள் நேற்றைய தினம் அந்த இடத்தில் பல தற்காலிக கூடாரங்களை அமைத்துள்ளனர். அவற்றில் ஓய்வெடுக்கும் கூடாரங்கள், மருத்துவ வசதி கூடாரம், உணவை பெற்றுக்கொள்ளும் கூடாரம் என்பன அடங்கும். ஆர்ப்பாட்டகாரர்கள் தற்காலிக கழிவறைகளையும் அமைத்துள்ளனர். அத்துடன் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு கோட்டா கோ கிராமம் என பெயரிட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு கோரி மக்கள் … Read more

புத்தாண்டு காலத்தில் மின்வெட்டு இல்லை

புத்தாண்டு காலத்தில் இவ்வாறு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது இதன்படி, எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது  என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.   மேலும், 16 மற்றும் 17ஆம் திகதிகளில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் 15 நிமிடங்கள் மாத்திரமே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்  எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   Source link