ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டகாரர்கள் உருவாக்கியுள்ள கிராமம் (Photos)

ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் நடைபெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டகாரர்கள் நேற்றைய தினம் அந்த இடத்தில் பல தற்காலிக கூடாரங்களை அமைத்துள்ளனர். அவற்றில் ஓய்வெடுக்கும் கூடாரங்கள், மருத்துவ வசதி கூடாரம், உணவை பெற்றுக்கொள்ளும் கூடாரம் என்பன அடங்கும். ஆர்ப்பாட்டகாரர்கள் தற்காலிக கழிவறைகளையும் அமைத்துள்ளனர். அத்துடன் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு கோட்டா கோ கிராமம் என பெயரிட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு கோரி மக்கள் … Read more

புத்தாண்டு காலத்தில் மின்வெட்டு இல்லை

புத்தாண்டு காலத்தில் இவ்வாறு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது இதன்படி, எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது  என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.   மேலும், 16 மற்றும் 17ஆம் திகதிகளில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் 15 நிமிடங்கள் மாத்திரமே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்  எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   Source link

மழையுடனான வானிலை மேலும் தொடரும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்11ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் தொடர்ந்து காணப்படுகின்றது. எனவே தற்போது நிலவும்மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், … Read more

யாழில் தாயின் கண்முன்னே பிரிந்த மகனின் உயிர்! லொறி மீது தாக்குதல் நடத்திய மக்கள் (Photo)

யாழ்ப்பாணம், சத்திர சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.  மோட்டார்சைக்கிள் மீது லொறியொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.  விபத்து நேர்ந்த போது மோட்டார்சைக்கிளில் தாயும், மகனும் பயணித்துள்ளனர்.  இதன்போது லொறியின் சில் சிறுவனின் தலையில் ஏறிய நிலையில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அங்கு ஒன்று கூடியவர்கள் லொறியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்தில் யாழ்ப்பாணம் தாவடி பகுதியை சேர்ந்த அஜித்தன் அபிநயன் (வயது 10) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப … Read more

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகளின் தரவுகள் திரட்டல்

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றியீட்டிய விளையாட்டு வீர, வீராங்கனைகளின் தரவுகளை ஆவணப்படுத்துவதற்கான விண்ணப்பங்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் கோரப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரனின் ஆலோசனைக்கு அமைவாக விளையாட்டு வீர, வீராங்கனைகளின் விபரங்கள் கீழ் வரும் பிரிவுகளின் அடிப்படையில் ஆவணப்படுத்தும் நோக்கில கோரப்படுகின்றது. 1. 1990ம் ஆண்டிலிருந்து சர்வதேச மட்டத்தில் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் (Under Ministry) அனுமதியுடன் பங்கு பற்றிய போட்டிகள் அல்லது இலங்கை தேசிய … Read more

கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்க வேண்டாம் என அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சந்தன தென்னகோன் கடிதமொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிடப்பட்டுள்ளார். அரச சேவையை அவதூறு செய்யும் வகையிலும், அரசின் கொள்கைகளை விமர்சிக்கவும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டாம் என கண்டி மாவட்ட செயலகத்தின் கடிதத் தலைப்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.ஜெயசிங்கவிற்கு “எச்சரிக்கை விடுத்தல்” எனும் தலைப்பில் கடிதம் ஒன்றை அவர் அனுப்பி வைத்துள்ளார். … Read more

மட்டக்களப்பில் எரிபொருளை சீரான முறையில் வழங்குவதற்கு 6 தீர்மானங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருளை சீரான முறையில் வழங்குவதற்கு 6 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருளை பதுக்கி வைப்பதற்கு தடை எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுதல் ,அனைவருக்கும் எரிபொருள் சீரான முறையில் வழங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பபட்டு அதற்கான 6 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை கண்காணித்தல் தொடர்பாக மட்டக்களப்பு … Read more

கடற்பகுதி: அவ்வப்போது பலமான காற்று ,கொந்தளிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில்உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் … Read more

ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டலுக்கு தீவிர பாதுகாப்பு – பொலிஸார் குவிப்பு

அநுராதபுரத்தில் ஆலயம் ஒன்றை நடத்தி வரும் ஞானக்கா என்ற பெண்ணின் வீடு மற்றும் அவரது ஹோட்டலுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அநுராதபுரத்தில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது. இதனால் ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பபட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. கடந்த 5ஆம் திகதி ஞானக்காவின் வீட்டை பொது மக்கள் சுற்றிவளைக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அதனை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். அத்துடன் … Read more

மண் சரிவு அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் – தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

கடும் மழையுடனான காலநிலை தொடரும் பட்சத்தில் மண் சரிவு, பாறைகள் புரளுதல் முதலான அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. இதனால் பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் மண் சரிவு ஏற்படக் கூடிய பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் செயல்படமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 8 … Read more