மண் சரிவு அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் – தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

கடும் மழையுடனான காலநிலை தொடரும் பட்சத்தில் மண் சரிவு, பாறைகள் புரளுதல் முதலான அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. இதனால் பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் மண் சரிவு ஏற்படக் கூடிய பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் செயல்படமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 8 … Read more

நாட்டில் எரிபொருளை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

நாட்டில் எரிபொருளை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பண்டிகை காலத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேவையான அளவு எரிபொருள் நாட்டிற்கு கிடைக்கிறது. 2 லட்சத்து 65 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை இந்த மாதத்தில் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே தேவையற்ற வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடிநிற்க வேண்டாம். அத்துடன் கொள்கலன்களில் எரிபொருள் … Read more

அனைத்து மதுபானசாலைகளும் 13 , 14ஆம் திகதிகளில் மூடப்படும்

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் முடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து மதுபானசாலைகள் உரிமையாளர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிவு

ஜனாதிபதி மற்றும் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இறுதி இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது. குறித்த சந்திப்பின் போது இடைக்கால அரசாங்கம் தொடர்பில் உறுதியான கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு … Read more

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாமலுக்கு முக்கிய பொறுப்பு

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னெடுத்து செல்லும் பொறுப்பை ஏற்க உள்ளதாக தெரியவருகிறது. இதன் முதல் கட்டமாக நாமல் ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார். இதன் பின்னர் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச இதுவரை செய்து வந்த கட்சியின் விரிவாக்கல் பணிகளை நாமல் ராஜபக்ச மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த ஆண்டு வியத் மக அமைப்பினர் பணிகளில் நாமல் ராஜபக்சவை ஈடுபடுத்தி இருந்தார். நாட்டின் … Read more

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு மதுவரித்திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டே இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் முடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அனைத்து மதுபானசாலைகளின் உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. Source link

லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு! நீங்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யலாம்

லிட்ரோ நிறுவனத்தினால் இதுவரையில் எரிவாயு விலை அதிகரிக்கப்படாத நிலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் பொலிஸாரிடம்  முறைப்பாடளிக்குமாறு அந்த நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் அவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் 1311 என்ற இலக்கத்தை அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, 3,900 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று மாலைத்தீவில் இருந்து நேற்றிரவு நாட்டை வந்தடைந்தது. அதிலுள்ள எரிவாயுவை தரையிறக்கும் செயற்பாடுகள் … Read more

2022 IPL சென்னை சுப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில்

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் சுற்றுத்தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில,; கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணி 6 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. 6 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாமிடத்திலும் 6 புள்ளிகளுடன் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணி மூன்றாமிடத்திலும் உள்ளது. லக்னவ் சுப்பர் ஜெயன்ஸ்ட் அணி 6 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 4 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. 4 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறாவது இடத்திலும் டெல்லி கெப்பிட்டல் … Read more

கோட்டாபயவிற்கு எதிராக சூனியம் வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் (Video)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால்  பொது மக்கள் கடும் இக்கட்டான சூழ்நிலைக்கு முகம்கொடுத்துள்ள  நிலையில், நாடளாவிய ரீதியில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.  இந்த நிலையில்  கொழும்பு – காலி முகத்திடலில் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட அரசுக்கெதிரான போராட்டம் தற்போது வரை முடிவின்றி தொடர்ந்துவருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து  கொண்ட சிலர் கோட்டாபய அரசு பதவி விலகவேண்டும் என கோரி சூனியம் வைக்கும் விதமாக சில செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான … Read more