கோட்டாபயவிற்கு எதிராக சூனியம் வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் (Video)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால்  பொது மக்கள் கடும் இக்கட்டான சூழ்நிலைக்கு முகம்கொடுத்துள்ள  நிலையில், நாடளாவிய ரீதியில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.  இந்த நிலையில்  கொழும்பு – காலி முகத்திடலில் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட அரசுக்கெதிரான போராட்டம் தற்போது வரை முடிவின்றி தொடர்ந்துவருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து  கொண்ட சிலர் கோட்டாபய அரசு பதவி விலகவேண்டும் என கோரி சூனியம் வைக்கும் விதமாக சில செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான … Read more

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களுக்கு நாளை பகல் 1.30 வரை மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. பதுளை, களுத்துறை, கொழும்பு, கண்டி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மௌசாக்கலை மற்றும் காசல்ரீ ஆகிய நீரேந்து பிரதேசங்களில் நேற்றிரவு முதல் இன்று வரை கடும் மழை பெய்துள்ளது.கடும் மழை காரணமாக காசல்ரீ, கென்னியோன் மற்றும் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் … Read more

எரிவாயு சிலிண்டர் விற்பனையில் மோசடி – பொலிசாரிடம் முறையிட முடியும்

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் அவற்றின் விலைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என நுகர்வோர் அதிகார சபை உத்தரவிட்டுள்ளது. சில விற்பனை நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு ,லிற்றோ காஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதாக  தெரியவந்துள்ளது. இதனால் இதனை கட்டுப்படுத்தி உரிய விலைக்கு சமையல் எரிவாயு நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்யும்வகையில் நுகர்வோர் அதிகார சபை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது விடயம் தொடர்பாக பொலிஸாருக்கும் முறைப்பாடு தெரிவிக்கலாம் என்று நுகர்வோர் அதிகார சபை … Read more

கொழும்பில் உள்ள மருத்துவர் ஒருவரின் அவசர வேண்டுகோள் (Photo)

Courtesy: தினக்குரல் மருத்துவமனைகளில் பல பொருட்கள் இல்லாதநிலை அல்லது போதியளவு இல்லாத நிலை காணப்படுகின்றது. முக்கியமாக நான் எதிர்கொள்கின்ற, நான் மட்டுமல்ல அனைத்து குழந்தை நல மருத்துவர்களும் முக்கிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளோம்.  எங்களிடம் பிறந்த குழந்தைகள் சுவாசிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற ஈடிடியுப்கள் இல்லை(ETtubes) கொழும்பு வைத்தியசாலை ஒன்றின்  மருத்துவர் சமன் குமார தெரிவித்துள்ளார்.  விரைவில் இந்த டியுப்கள் முடிந்துவிடும். ஆனால் ஏற்கனவே பயன்படுத்திய டியுப்களை பயன்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.  இது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம். இது எனக்கு மிகவும் விருப்பமில்லாத … Read more

குருத்தோலை ஞாயிறு புனித வாரம்

தவக் காலத்தின் முக்கிய பகுதியான பரிசுத்த வாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிறது. குருத்தோலை ஞாயிறுடன் ஆரம்பமாகும் பரிசுத்த வாரம் தவக்காலத்தின் மிக முக்கியமான ஏழு தினங்களைக் கொண்டுள்ளது. குருத்தோலை ஞாயிறு, புனித வியாழன், பெரிய வெள்ளி, அல்லேலலூயா சனி, மற்றும் ஈஸ்டர் ஞாயிறு ஆகியதினங்கள் இந்த பரிசுத்த வாரத்தில் உள்ளடங்குகின்றன. குருத்தோலை ஞாயிறு முதல் ஈஸ்டர் பெருவிழா வரையான ஏழுநாட்களையும் புனிதவாரம் என்றழைக்கினறோம் வருடத்தின் 52வாரங்களில் இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்றழைக்கவேண்டும்.இயேசு இவ்வுலகில் வாழ்ந்த … Read more

கொரோனா வைரஸ் மீண்டும் தலை தூக்குகிறது- இந்தியப்பிரதமர் எச்சரிக்கை

கொரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிரான போரில் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று, இந்தியப்  பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். ராம நவமி கொண்டாட்டத்தையொட்டி, இந்தியாவின் குஜராத் மாநிலம் கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோவில் நிறுவன தின விழாவில் காணொலி முலம் பிரதமர் மோடி உரையாற்றினார். கொரோனா தொற்று நாட்டை விட்டு முற்றிலும் நீங்கவில்லை, கொரோனா நெருக்கடி முடிந்து விட்டது என்று நாங்கள் கூறவில்லை. வடிவங்களை மாற்றி மீண்டும் அது பரவுகிறது. இதனால் … Read more

ஜனாதிபதி செயலக வளாகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்! இணைய வசதி துண்டிப்பு (Video)

புதிய இணைப்பு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் முடிவுறாது தற்போது வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  தற்போதும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பெருந்திரளானவர்கள் திரண்டு அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.  எனினும் நேற்றைய தினத்தைப் போலவே குறித்த பகுதியில் இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளதாக களத்தில் இருக்கும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.   இரண்டாம் இணைப்பு ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட  அரசுக்கெதிரான போராட்டம் தற்போது வரை நடைபெற்று … Read more

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவும் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

பண்டிகைக் காலத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார். தேவையான அளவு எரிபொருள் நாட்டிற்கு கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 2 லட்சத்து 65 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை இந்த மாதத்தில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேவையற்ற வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடிநிற்க வேண்டாம் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் கொள்கலன்களில் எரிபொருள் விநியோகிப்பது பற்றி எதிர்காலத்தில் ஒழுங்கு விதி ஒன்று ஏற்படுத்தப்படும் … Read more

சதொசவில் பொருட்கள் இல்லை: பொதுமக்கள் எதிர்நோக்கப்போகும் சிக்கல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரசியல் போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் உண்மையான பிரச்சினைகளை மறக்கின்றனர் என மக்கள் உரிமை பாதுகாப்பு மன்றத்தின் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மக்களின் போராட்டங்கள் எரிபொருள் மருந்து எரிவாயு பற்றாக்குறை பிரச்சினைகளை மறக்கச்செய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   சதொசவில் ஏற்கனவே பொருட்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது அரசாங்கம் கண்மூடித்தனமாக பொருளாதாரத்தை கையாண்டதால் பொதுமக்கள் அதிகரித்துள்ள பணவீக்கத்தின் சுமைகளை சுமக்கவேண்டியுள்ளது என அசேல சம்பத் … Read more