எரிபொருளுக்காக காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு

தங்கொடுவையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று இரவு டீசல் எடுப்பதற்காக வரிசையில் நின்றிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் 47 வயதுடைய பன்னல, கோனவில பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடைய சடலம் மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. Source link

கோட்டாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்: பிரபல நடிகை ஒருவரின் செயற்பாட்டால் ஆத்திரமடைந்த இலங்கையர்கள்

அரசுக்கெதிரான போராட்டங்கள் இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகளாவிய ரீதியில் இலங்கையர்கள் வாழும் பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட சிங்கள பாடகி  ஒருவர் பொதுமக்களின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார்.  பிரபல சிங்கள பாடகியான  சஞ்சீவனி வீரசிங்க என்பவர் பொதுமக்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு  போராட்டத்தை கைவிடுமாறு கோரியுள்ளார்.  இதன்போது  ஆத்திரமடைந்த இலங்கையர்கள் அவருக்கு  கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.   இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியை … Read more

அடைமழையால் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பின் பல நகரங்கள்

கொழும்பில் பெய்து வரும் அடைமழை காரணமாக பல வீதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கொழும்பு, ஆர்மர் வீதி உட்பட பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நேற்று முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக இவ்வாறு பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை … Read more

நாடாளுமன்றம் ஊடாக அடுத்த காய்நகர்தலை மேற்கொள்ளும் ரணில்

சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெறுவது தொடர்பில் நாடாளுமன்றம் ஊடாக அதிகாரம் வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு முழு நிதி அதிகாரம் உள்ளதால் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் மூன்று பிரதிநிதிகளுக்கும் முழு அதிகாரங்களும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரமும் வழங்குவோம் என ரணில் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்களுக்கு ஆதரவளிப்பதற்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கும் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் கூடுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச … Read more

நாமல் தொடர்பில் முக்கிய ஆதாரத்தை அம்பலப்படுத்திய சிங்கள ஊடகம்

இலங்கை வங்குரோத்தடைந்துள்ள நிலையில் கட்டாரில் உள்ள முன்னணி நிதி நிறுவனத்தின் நிதி இயக்குநராக நாமல் செயற்படுவதாக தெரிய வந்துள்ளது. கட்டாரின் முன்னணி நிறுவனம் ஒன்றில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ முக்கிய பதவியில் செயற்படுவதாக லங்காஈநியூஸ் ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை நிதி ரீதியாக வங்குரோத்து நிலையில் இருந்தாலும், கட்டாரில் நிதி உதவி மற்றும் ஆலோசனை சேவைகளில் முன்னணி பங்காளியான ALBG எனப்படும் நிதி நிறுவனத்தின் நிதிப் பணிப்பாளராக நாமல் ராஜபக்ச செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை வங்குரோத்து … Read more

அரச விடுமுறை அத்தியாவசிய சேவைகளை கொண்டு நடத்துவதற்கு தடையாக அமையக்கூடாது

நாளை (11) யும் நாளை மறுதின(12) மும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள் , மாகாண சபைகள் ,மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே,ஜே. ரத்னசிரி அறிவித்துள்ளார். இதேவேளை ,வங்கிச் சேவைகள் நாளையும் நாளைமறுதினமும் இடம்பெறும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு 11ம், 12ம் திகதிகள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், மக்களின் வசதி கருதி குறித்த தினங்களில் வங்கிகள் வழமை போன்று செயற்படும் என்றும் மத்திய வங்கி … Read more

கொட்டும் மழையிலும் இரண்டாவது நாளாக ஜனாதிபதி செயலகம் முற்றுகை – தொடரும் போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான போராட்டம் 2வது நாளாக தொடர்ந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள பலர் அங்கிருந்து வெளியேறாத நிலையில் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் … Read more

எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கும்: புதிய நிதி அமைச்சர் அறிவிப்பு

அரசாங்க நிதியை சரிசெய்வதற்காக அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியிருக்கும், என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.  நிதி அமைச்சராக பதவி ஏற்றதன் பின்னர் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,  எரிபொருள் மருந்துகள் உட்பட அத்தியாவசியபொருட்களை பெறுவதற்கும் பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கும் இலங்கைக்கு 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி அடுத்த ஆறு மாதங்களிற்கு தேவைப்படும்.  இந்தியாவிடமிருந்து எரிபொருளிற்காக மேலும் 500 மில்லியன் … Read more