கொட்டும் மழையிலும் இரண்டாவது நாளாக ஜனாதிபதி செயலகம் முற்றுகை – தொடரும் போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான போராட்டம் 2வது நாளாக தொடர்ந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள பலர் அங்கிருந்து வெளியேறாத நிலையில் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் … Read more

எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கும்: புதிய நிதி அமைச்சர் அறிவிப்பு

அரசாங்க நிதியை சரிசெய்வதற்காக அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியிருக்கும், என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.  நிதி அமைச்சராக பதவி ஏற்றதன் பின்னர் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,  எரிபொருள் மருந்துகள் உட்பட அத்தியாவசியபொருட்களை பெறுவதற்கும் பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கும் இலங்கைக்கு 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி அடுத்த ஆறு மாதங்களிற்கு தேவைப்படும்.  இந்தியாவிடமிருந்து எரிபொருளிற்காக மேலும் 500 மில்லியன் … Read more

விடுதலைப் புலிகளுக்கு ஏவுகணை வழங்கிய ஜப்பானிய பாதாள உலகத் தலைவர் அமெரிக்காவில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தரையில் இருந்து தாக்க கூடிய ஏவுகணைகளை வழங்க முயற்சித்த ஜப்பானிய பாதாள உலகத் தலைவர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச  ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய யாகுசாவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர் மற்றும் மூன்று தாய்லாந்து ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. நியூயார்க்கில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் மற்றும் பணமோசடி … Read more

100 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை சாதனை

100ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. இலங்கை வீராங்கனை கயந்திகா அபேரத்னவினால் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. 800 மீற்றர் துாரத்தை 2 நிமிடம் 01.44 நொடிகளில் நிறைவு செய்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.  Source link

முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் 66 வீதமாக அதிகரிப்பு

கடந்த சில தினங்களாக பெய்த மழையைத் தொடர்ந்து முக்கிய நீர்த்தேக்கங்கள் பலவற்றில் நீர் மட்டம் 66 வீதமாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் டி. அபேசிரிவர்தன் இதுதொடர்பாக தெரிவிக்கையில் தற்போதைய நீர் எதிர்வரும் சிறுபோக விவசாய நடவடிக்கைகளுக்கு போதுமானது என்றார்.

மக்களின் போராட்டத்தை பிளவுப்படுத்த 10 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள நிஷ்சங்க சேனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு கோரி வரும் போராட்டததை இரண்டாக பிளவுப்படுத்த அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்சங்க சேனாதிபதி 10 கோடி ரூபாய் பணத்தை ஒதுக்கி இருப்பதாக பிரபல நடிகை யுரேனி நோஷிகா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நிஷ்சங்க சேனாதிபதி இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது ரோஹித்த ராஜபக்ச மற்றும் பாடகர் இராஜ் உள்ளிட்ட தரப்பினர் எனவும் அவர் கூறியுள்ளார். யுரேனி நோஷிகா தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். விசேட அறிவிப்பு. GotaGohome … Read more

தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை  

இந்த மாதத்திற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்காக, 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாதத்திற்காக இரண்டு இலட்சம் மெற்றிக் தொன் டீசலும், ஒரு லட்சத்து பத்தாயிரம் மெற்றிக் தொன் பெற்றோலும் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. எரிபொருளுடனான கப்பல்கள் பல அடுத்த வாரம் நாட்டிற்கு வரவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க மேலும் … Read more