டொலர் நெருக்கடிக்கு முறையற்ற கொடுக்கல் வாங்கல் முறைகளும் தாக்கம் செலுத்தியுள்ளன

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு முறையற்ற கொடுக்கல் வாங்கல் முறைகள் தாக்கம் செலுத்தியிருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ தெரிவித்துள்ளார். முறையான வழிகளில் மாத்திரம் அந்நியச் செலாவணியை அனுப்புமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ அறிவுறுத்தியுள்ளார். வங்கிகளின் ஊடாக மாத்திரம் டொலர்களை கொள்வனவு செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  

அலரிமாளிகையில் ராஜபக்ச, சுமந்திரன் சந்திப்பு : நாட்டின் தீர்வு குறித்து ஆலோசனை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைக் குறுகிய காலத்தில் ஒழிப்பதாகக் காலவரையறை குறிப்பிட்டு அறிவித்து, அதைச் செய்து, அதன் முடிவில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆளும் தரப்பு இப்போதே உடனடியாக முன்வந்து செய்யதால்தான் இப்போதைய அரசியல் நெருக்கடிகளைச் சுமுகமாகத் தீர்த்து நாடு மீண்டெழுவதற்கு ஒரே வாய்ப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேரடியாகச் சந்தித்து அவருக்கு ஆலோசனை வழங்கினார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்.  பிரதமர் மஹிந்த ராஜபக்ச தரப்பின் அழைப்புக்கிணங்க நேற்று(12) … Read more

மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிப்பு

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. ஆபத்தான பிரதேசங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அடைமழை நிலவுமாயின் ஆபத்தான பிரதேசங்களில் உள்ள மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென்று நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது..

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் இருந்து விலகிய சுதந்திரக் கட்சி

கமத்தொழில் ராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்க அந்த கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார். இதனடிப்படையில், சாந்த பண்டார கட்சியில் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்து நீக்க மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். அத்துடன் சாந்த பண்டாரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை ஜனாதிபதியுடன் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. … Read more

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ,கொழும்பு கோட்டையிலிருந்து சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நலன்கருதி விசேட ரெயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக கல்கிசையில் இருந்து காங்கேசந்துறை வரையிலாக கடுகதி ரயில் ஒன்று இன்றும் எதிர்வரும் 12 ஆம் திகதி மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்த ரயில் கல்கிசையில் இருந்து இரவு 10.00 மணிக்கு காங்கேசன்துறையை நோக்கி பயணிக்கும் இது காலை 5.54 க்கு காங்கேசன்துறையை சென்றடையும். இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரையில் 17 ஆம் … Read more

இந்திய உதவி திட்டத்தின் கீழ் ,இலங்கைக்கு 11,000 மெட்ரிக் தொன் அரிசி

இந்திய உதவி திட்டத்தின் கீழ் ,இலங்கைக்கு வழங்கப்பட்ட 11,000 மெட்ரிக் தொன் அரிசி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதனை, கொழும்பு துறைமுகத்தில்வைத்து இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளால் ,இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. Supply of 11,000 MT of rice to Sri Lanka           A consignment of 11,000 MT rice, which arrived in Sri Lanka today under the concessional Indian Credit Facility of USD … Read more

ஆடையை களைந்து பெண்களை சித்திரவதைக்கும் ரஷ்ய துருப்புகள்! துணை பிரதமர் வேதனை

 ரஷ்ய துருப்புகள், பொதுமக்கள் மற்றும் உக்ரேனிய வீரர்கள் என சுமார் 1700 பேரை சிறைப்பிடித்துள்ளதாக உக்ரைன் துணை பிரதமர் Iryna Vereshchuk தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து 48வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்ய, இனி பேச்சுவார்ததைக்காக படையெடுப்பை நிறுத்தப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனில் 1700 பேரை ரஷ்ய துருப்புகள் சிறைப்பிடித்துள்ளதாகவும், அவர்களில் 500 பேர் பெண்கள் என துணை பிரதமர் Iryna Vereshchuk தகவல் தெரிவித்துள்ளார். சிறைபிடித்துள்ள உக்ரேனியர்களை உட்கார விடாமல் நிற்க … Read more