ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு…

  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார அவர்கள், சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்தல், நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழிநுட்பம், கமத்தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவர் நேற்று, (11) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். … Read more

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு – பல நகரங்களில் பொலிஸார் குவிப்பு

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அனைத்து முக்கிய நகரங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மக்கள் நகரத்திற்கு வந்தால் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை தடுக்கும் வகையில் விசேட பொலிஸ் குழுக்களை வீதி கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிக வேகமாக மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கு … Read more

புதிய பிரதமர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும் – உதய கம்மன்பில

நாட்டின் புதிய பிரதமர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் நபராக இருக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்வை வழங்க முடியாத இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் முழு நாடும் ஒன்றிணைந்துள்ளது எனவும் கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போதைய நிலை நீடித்தால் நாம் வாழ்வதற்கு ஒரு நாடு இருக்காது என்றார். மதகுருமார்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சி … Read more

அரசுக்கு எதிராக கட்சிகளை அணிதிரட்டும் சந்திரிக்கா!

கடந்த தேசிய அரசாங்கத்தை ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய அரசியல் நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து ஆலோசிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் இன்று சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் … Read more

பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை! (Photo)

உரிய அதிகாரியின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உன பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் தேவையில்லாமல் எரிபொருளை சேகரித்து அதனை மோசடியாக பயன்படுத்துவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் 68 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு 8,025 லீற்றர் பெற்றோல் மற்றும் 726 லீற்றர் டீசல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அனுமதியின்றி மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள் விற்பனை நிலையங்களை சோதனையிட்டதன் பின்னர் … Read more

மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க கூடாது – குமார் சங்கக்கார

இலங்கையில் மீண்டும் ஊழல், உறவுமுறை மற்றும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்கக் கூடாது என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “அதிக விழிப்புணர்வோடும் துணிச்சலோடும் ஒரு தலைமுறையினரால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இத்தருணத்தில், இலங்கையர்கள் ஒன்றிணைந்து இந்த நெருக்கடியிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள். இனவாத அல்லது மதப் பிளவுகள் சமூகத்திலோ அல்லது அரசியலிலோ மீண்டும் பிரவேசிக்க இடமளிக்காது என நான் நம்புகிறேன். அத்துடன் ஊழல், உறவுமுறை அல்லது … Read more

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கௌரவ பிரதமர் அவர்களின் விசேட உரை

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கௌரவ பிரதமர் அவர்களின் விசேட உரை நண்பர்களே! எங்கள் நாடு மிகவும் இக்காட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த தருணத்தில் உங்கள் மத்தியில் உரையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு காலத்துக்கும் மேலான எனது அரசியல் வாழக்கையில் மிகவும் தீர்மானம் மிக்க அரசியல் மைல்கற்களை கடந்து வந்துள்ளேன் என்பதை குறிப்பிட வேண்டும். கொரோனா தொற்றுநோய்க்கு பின்னர் நாம் எதிர்கொள்ள வேண்டி நேரிட்ட பொருளாதார பிரச்சினைகளை நம் நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் … Read more

ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வாழ முடியாத நிலைமை ஏற்படும்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் வாழ கூட முடியாத நிலைமை ஏற்படும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர், யுவதிகளின் பிரச்சினைகள் சிலவற்றுக்கு பதிலளித்து ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு ரணில் விக்ரமசிங்கவின் உரை அடங்கிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. இளைஞர்களின் போராட்டமானது இலங்கையின் தற்போதைய அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய அரசியல் புரட்சி. கூடிய கூட்டத்தை பாருங்கள் பாரியளவில் கூடியுள்ளனர். அரசியல் கட்சிகள் அதிகளவில் மக்களை அழைத்து … Read more

பாதுகாப்பு அமைச்சினால் 2022 ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, சட்டபூர்வமான சேவை நீடிப்பின்றி அந்த நியமனத்தில் சேவையாற்றுவதக சமூக ஊடக தளங்களில் பொது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் போலியாக புனையப்பட்டு பரப்பப்பட்டு வரும் தகவலை பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கான சேவை நீடிப்பு 2021ஆம் டிசம்பர் மாதம் 31 முதல் அமுலுக்கு வந்தது. வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்னும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.