மண்சரிவு அனர்த்த பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மண்சரிவு அனர்த்தம் பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. சிவப்பு எச்சரிக்கையை பின்பற்றுமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.  

மூன்றாவது இரவிலும் கொட்டும் மழையில் தொடரும் மக்கள் போராட்டம் (Video)

காலிமுகத்திடலில் மூன்றாவது நாள் இரவுப்பொழுதிலும் கொட்டும் மழையில் “கோட்டா வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் மக்களின் மாபெரும் போராட்டம் தொடர்கின்றது. ஏராளமான மக்களின் பங்குபற்றுதலுடன் மழைக்கு மத்தியிலும் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கோட்டாபய வீட்டுக்குப் போகும் வரை நாங்கள் வீட்டுக்குப் போகமாட்டோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ள நிலையில் இவ்வாறு போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக இரண்டு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு, குடிதண்ணீர் மற்றும் குடி பானங்களை வழங்கி வருகின்றனர். அரசின் … Read more

வர்த்தமானியில் அறிவிக்கப்படாத மருந்துப் பொருட்களின் விலை கூடுதலாக அதிகரிக்காது

வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படாத மருந்து வகைகளின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிக்க ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் இந்த விலை மட்டம் கூடுதலாக அதிகரிக்காது என அதிகார சபையின் தலைவர் டொக்டர் ரசித விஜேவந்த தெரிவித்துள்ளார். மருந்து வகைகளின் விலைக் கட்டுப்பாட்டை நீக்குமாறு மருந்து இறக்குமதியாளர்களும் விநியோகஸ்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன்படி வர்த்தமானி மூலம் விலை கட்டுப்படுத்தப்படாத மருந்துகளின் விலைகளை மாத்திரம் திருத்தியமைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. டொலரின் விலை … Read more

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக களத்தில் இறங்கிய வெளிநாட்டவர்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   இந்த நிலையில், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் இன்றையதினம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.  அம்பலாங்கொட  பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   இலங்கையில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.   எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என சுற்றுலாப் பயணிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.   … Read more

விமான நிலைய ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

புத்தாண்டு கொடுப்பனவு கோரி விமான நிலையம் மற்றும் விமான சேவை ஊழியர்கள் இன்று காலை ஆரம்பித்த தொழிற்சங்கப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 30,000 ரூபா புத்தாண்டுக் கொடுப்பனவு வழங்கக் கோரி விமான நிலைய வளாகத்துக்குள் போராட்டத்தை ஆரம்பித்தனர். தொழிற்சங்கங்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து புத்தாண்டுக் கொடுப்பனவாக ரூபா 25,000 வழங்க இணக்கம் காணப்பட்டது.  Source link

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அணிசேரா நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிப்பு

அணிசேரா இயக்கத்தில் உள்ள நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஏப்ரல் 07 ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கத்தின் பதில்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தூதுவர்களிடம் விளக்கினார். இதில் அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்கள் குறித்த கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்திலான சீர்திருத்தம், அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்கான தயார் … Read more

ஆவேசத்தில் போராட்டக்காரர்கள்; அரசியல்வாதிகளை விரட்டும் இளைஞர்கள் – செய்திகளின் தொகுப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகக் கொழும்பு காலிமுகத்திடலில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்திற்குத் தான் சென்றாலும் மக்கள் தன்னை அங்கிருந்து வெளியேற்றி விடுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். மக்களின் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அரசியல் தோற்றத்தை ஏற்படுத்தக் கூட என்பதால், தான் அதில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் … Read more