100 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை சாதனை

100ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. இலங்கை வீராங்கனை கயந்திகா அபேரத்னவினால் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. 800 மீற்றர் துாரத்தை 2 நிமிடம் 01.44 நொடிகளில் நிறைவு செய்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.  Source link

முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் 66 வீதமாக அதிகரிப்பு

கடந்த சில தினங்களாக பெய்த மழையைத் தொடர்ந்து முக்கிய நீர்த்தேக்கங்கள் பலவற்றில் நீர் மட்டம் 66 வீதமாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் டி. அபேசிரிவர்தன் இதுதொடர்பாக தெரிவிக்கையில் தற்போதைய நீர் எதிர்வரும் சிறுபோக விவசாய நடவடிக்கைகளுக்கு போதுமானது என்றார்.

மக்களின் போராட்டத்தை பிளவுப்படுத்த 10 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள நிஷ்சங்க சேனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு கோரி வரும் போராட்டததை இரண்டாக பிளவுப்படுத்த அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்சங்க சேனாதிபதி 10 கோடி ரூபாய் பணத்தை ஒதுக்கி இருப்பதாக பிரபல நடிகை யுரேனி நோஷிகா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நிஷ்சங்க சேனாதிபதி இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது ரோஹித்த ராஜபக்ச மற்றும் பாடகர் இராஜ் உள்ளிட்ட தரப்பினர் எனவும் அவர் கூறியுள்ளார். யுரேனி நோஷிகா தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். விசேட அறிவிப்பு. GotaGohome … Read more

தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை  

இந்த மாதத்திற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்காக, 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாதத்திற்காக இரண்டு இலட்சம் மெற்றிக் தொன் டீசலும், ஒரு லட்சத்து பத்தாயிரம் மெற்றிக் தொன் பெற்றோலும் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. எரிபொருளுடனான கப்பல்கள் பல அடுத்த வாரம் நாட்டிற்கு வரவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க மேலும் … Read more

போராட்டக் களத்தில் நோன்பு துறந்த முஸ்லிம் சகோதரர்கள் (Photos)

நாட்டில் தற்போது நெருக்கடி நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்றையதினம் கொழும்பு காலி முகத்திடலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற  இந்த பாரிய போராட்டத்தின் போது, போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் சகோதரர்கள் போராட்டக்களத்தில் நோன்பு துறந்துள்ளனர். இது  தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. Source link

நாணயக் கொள்கை மீளாய்வு: இல. 03 – 2022 ஏப்பிறல் (விபரமான பதிப்பு)

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 ஏப்பிறல் 08ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பவற்றினை 2022 ஏப்பிறல் 08 வியாபார முடிவிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் 700 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 13.50 சதவீதத்திற்கும் மற்றும் 14.50 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. கூட்டுக் கேள்வி கட்டியெழுப்பப்படுதல், உள்நாட்டு நிரம்பல் இடையூறுகள், செலாவணி வீத தேய்மானம் மற்றும் உலகளாவிய ரீதியில் பண்டங்களின் … Read more

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்லவுள்ள குழு

இலங்கை பொருளாதார சிக்கலிலிருந்து மீள்வதற்காக உதவி கோரும் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு நிதி அமைச்சர் அலி சப்ரியின் தலைமையிலான தூதுக்குழு ஒன்று இலங்கையிலிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அக்குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவும் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றும் அமெரிக்கா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். Source link