மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை : புதிய நிதி அமைச்சர் அறிவிப்பு

அரசாங்க நிதியை சரிசெய்வதற்காக வரிகளை அதிகரிக்கவேண்டியிருக்கும்  அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்கவேண்டியிருக்கும், இந்த நடவடிக்கைகளிற்கு மக்கள் ஆதரவளிக்கப்போவதில்லை ஆனால் நாடு தற்போதைய நிலையிலிருந்து மீள்வதற்கு இதனை செய்தே ஆகவேண்டும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.  நீங்கள் இதனை செய்யவேண்டும் அல்லது நிரந்தரமாக தோல்வியை தழுவவேண்டும் இது எங்கள் முன்னால் உள்ள தெரிவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   நிதி அமைச்சராக பதவி ஏற்றதன் பின்னர் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் … Read more

பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை சமூகம் மருத்துவ உபகரணங்களை நன்கொடை

ஜேர்மனியில் உள்ள பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை சமூகம் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் ஊடாக மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. 2022 மார்ச் 31ஆந் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் வைத்து பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை சமூகத்தின் நன்கொடை கையளிக்கப்பட்டது. இந்த நன்கொடையை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மருந்துகள் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவிடம் கையளித்தார். பிராங்பேர்ட்டில் உள்ள … Read more

IMF உடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளூநர் தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்து (IMF)டன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் புதிய ஆளூநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் முதல் சுற்றுபேச்சுவார்த்தையை நாளை முன்னெடுப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சிறிது காலம் செல்லலாம். பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரத்தன்மைக்கு கொண்டுவரும் வரையில் மக்கள் அமைதியான முறையில் செயற்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்;. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சில மாதங்கள் செல்லக்கூடும்  புதிய ஆளுநர் தனது பதவியை நேற்று (08) … Read more

இலங்கையில் தீவிரமடையும் போராட்டம்! தேவை ஏற்பட்டால் முப்படையினரும் களமிறக்கப்படலாம்

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு தேவையான போது பொலிஸாருக்கு உதவுவதற்கு முப்படையினரின் உதவியை பொது பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ளது. அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் தெரிவித்தார். இதேவேளை, போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக இன்று கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மேலதிக பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.  Source … Read more

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு .தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல் 09ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 09 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் … Read more

அடுத்த பாராளுமன்ற அமர்வு ஏப்ரல் 19 முதல் 22 வரை 

பாராளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூட்டுவதற்கு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார். பாராளுமன்றம் கூடும் அனைத்துத் தினங்களிலும் மு.ப 10.00 மணி முதல் 11.00 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த அனைத்துத் தினங்களிலும் பிற்பகல் 4.30 மணி முதல் … Read more

சொத்துக்களை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள்! சடுதியாக அதிகரித்த எண்ணிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டு தயாரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை 30-40 வீதத்தால் அதிகரித்துள்ளதாக  அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. சமீப நாட்களாக நாடு முழுவதும் வீடுகள் மற்றும் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது, பலர் வெளிநாட்டில் செல்வதற்காக தமது  சொத்துக்களை விற்னை  செய்து வருகின்றனர்.  சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு  வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு … Read more

கல்லடிப்பாலத்தில் 'சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும், விற்பனை சந்தையும் 2022'

பழைய கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் ,சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும்,விற்பனை சந்தையும் இன்று (09)  ஆரம்பமானது. விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் நாளைய தினமும் (2022.04.10) இடம்பெறும். மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன்,தலைமையில் கல்லடி பழைய பாலத்திற்கு அருகாமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட சந்தையினை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் திறந்துவைத்தார். தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் … Read more

2021 வருட சிறுபோகத்தில் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்காக இழப்பீடு

கட்டுப்படுத்த முடியாத இயற்கை அனர்த்தங்கள் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுவருவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி; சபையின் பணிப்பாளர் நாயகம் பண்டுக வீரசிங்க தெரிவித்தார். இந்த காப்புறுதி வேலைத்திட்டத்தின் கீழ் தவணைக் கொடுப்பனவை அறவிடாமல் ஏக்கருக்கு 40,000 ரூபாவிற்கு உட்பட்டதாக 8,678 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதுடன், இதற்கென 21 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் இந்த இழப்பீட்டுத் தொகை 2022 ஆம் ஆண்டு … Read more

காலி முகத்திடலில் குவிந்த இளைஞர், யுவதிகள் (Video)

காலி முகத்திடல் பகுதியில் தற்போது பெருந்திரளான இளைஞர், யுவதிகள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தேசியக்கொடிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  முதலாம் இணைப்பு காலி முகத்திடலில் இன்றைய தினம் மக்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அங்கு நிர்மாணப் பணிகளை முன்னிட்டு சில பகுதிகள் மூடப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.  ஒரு பகுதி மாத்திரம் மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.  இந்த நிலையில் போராட்டத்திற்காக மக்கள் பலர் … Read more