வார இறுதியில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும்

இந்த வார இறுதியில் துண்டிப்பு அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை (09) இரண்டு மணித்தியாலங்களும், ஞாயிற்றுக்கிழமை (10) ஒரு மணித்தியாலமும் மின் துண்டிப்புஅமுல்படுத்தப்படும். அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு சனிக்கிழமை (09) பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை 2 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படும். மேலும், P, Q, R, S, … Read more

லண்டனில் மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட இந்திய வம்சாவளி பெண்! விசாரணையில் வெளியான தகவல்

லண்டனிலுள்ள வீடு ஒன்றில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி இளம் பெண் ஒருவரும் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இவர்களின் மரணம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த இந்திய வம்சாவளியினர் என்றும் பெயர் ஷிவாங்கி (Shiwangi Bagoan (25) என்றும், குழந்தை அவரது மகள் என்றும், சிறுமியின் பெயர் Ziana Bagoan (2) என்றும் தெரியவந்தது. மேற்கு லண்டனிலுள்ள, Hounslow என்ற பகுதியில் அமைந்திருக்கும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அந்தப் பெண்ணும் அவரது … Read more

08.04.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

08.04.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்  

மும்மொழிகளில் பதாகைகளுடன் கொழும்பின் முக்கிய பகுதியில் திரண்ட மக்கள் (Video)

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த போராட்டத்தில் கத்தோலிக்கர்கள் கலந்து கொண்டு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.  போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மும்மொழிகளில் கோட்டாபய அரசிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கி தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.  இதேவேளை கோட்டாபய அரசுக்கு எதிராகவும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு நீதி கோரியும் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி இன்று … Read more

அமைச்சரவை இராஜினாமாவை வர்த்தமானி உறுதிப்படுத்தியது! (Photo)

26 அமைச்சரவை அமைச்சர்கள் அந்தந்த இலாகாக்களில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் வியாழன் (7) வெளியிட்டுள்ளார். தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்களின் சீற்றத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முழு அமைச்சரவையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (3) அந்தந்த இலாகாக்களில் இருந்து விலகத் தீர்மானித்தது. இதன்படி, பின்வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகினர், நிமல் சிறிபால டி சில்வா தொழிலாளர் அமைச்சராகவும், எஸ்.பி. திஸாநாயக்க, கைத்தொழில் அமைச்சராக, … Read more

இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் அரசியல் கொந்தளிப்பும் – விளக்கப்படம் (Photo)

சுற்றுலாவை நம்பியிருக்கும் இலங்கை அதன் மோசமான நிதி மற்றும் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இலங்கை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் மார்ச் மாதத்தில் மட்டும் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. 22 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் அடிப்படைத் தேவைகளுக்கு இப்போது எவ்வளவு செலவாகிறது என்பது குறித்து பார்வையிடலாம். சுற்றுலாவை நம்பியிருக்கும் நாட்டில் வாழ்க்கைச் செலவு பலரால் தாங்க முடியாதளவு உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி தனது … Read more

பதவி விலகல் குறித்து ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும்! – நிமல் சிறிபால டி சில்வா

 பதவியில் இருக்கும் ஜனாதிபதியை பதவி நீக்கம் அல்லது பதவி விலகல் மூலம் மாத்திரமே பதவி நீக்க முடியும் என முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அரசியலமைப்புக்கு மாற்று எதுவும் இல்லை எனவும், மக்கள் எதிர்ப்பு காரணமாக ஒரு ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பதவி விலகுவதா இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் எனவும் … Read more

முனைவர். பி. நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார்

முனைவர் பி. நந்தலால் வீரசிங்க இலங்கை மத ;திய வங்கியின் 17ஆவது ஆளுநராக தனது கடமைகளைப்பொறுப்பேற்றார்.

வெகு விரைவில் லெபனானின் நிலை இலங்கையிலும் ஏற்படலாம்! – ஹர்சா டி சில்வா எச்சரிக்கை

இலங்கை எதிர்காலத்தில் லெபனானின் நிலைக்கு தள்ளப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா எச்சரித்துள்ளார். லெபனான் தற்போது எதிர்கொள்ளும் நிலையை இலங்கை எதிர்கொள்ளவேண்டிவரலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 50 வீத மருத்துவர்கள் ஏற்கனவே வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிவிட்டனர். சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் லெபான் அரசாங்கத்திற்கும் இடையில் கடும் கருத்துவேறுபாடு காணப்பட்டது என தெரிவித்துள்ளார். இலங்கையிலும் இதேநிலை காணப்படுகின்றது. ஒரு குழுவினர் சர்வதேச நாணயநிதியத்தை நாடவேண்டும் என்கின்றனர். … Read more

புத்தாண்டு காலப்பகுதியில் விசேட ரயில் சேவைகள்

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் வசதி கருதி விசேட ரயில் சேவைகளை நடத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த ரயில் சேவைகள் இன்று தொடக்கம் 18 ஆம் திகதி வரையில் தற்பொழுதுள்ள ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக முன்னெடுப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக கல்கிசையில் இருந்து காங்கேசந்துறை வரையிலாக கடுகதி ரயில்  ஒன்று இன்றும் எதிர்வரும் 12 ஆம் திகதியும் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்த ரயில் கல்கிசையில் இருந்து இரவு 10.00 மணிக்கு … Read more