ராஜபக்சக்சர்களின் ஆட்சி பறிபோகலாம்! அபாய கட்டத்தில் இலங்கை (Video)

ரஷ்யா – உக்ரைன் மோதலுக்குப் பின்னராக சர்வதேச நாடுகளின் பார்வை இலங்கை மீது திரும்பி விட்டது. பொருளாதார நெருக்கடியின் – அரசியல் குழப்பங்கள் – மக்கள் போராட்டம் என்பவற்றினால் நாடு திணறிக்கொண்டிருக்கின்றது. இதனால் இலங்கை ரூபாவின் பெறுமதி செல்லாக்காசாக மாறிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இலங்கை தற்போதைய அபாய நிலை தொடர்பில் ஆராய்கிறது இன்றைய உண்மையின் அலசல் நிகழ்ச்சி,  Source link

புத்தாண்டுக்கு சதோச மூலம் நிவாரண பொதி

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதி ஒன்றை இலங்கை சதொச விற்பனை வலைப்பின்னல் ஊடாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. அரிசி, பால்மா, சீனி, தேயிலை உள்ளிட்டவை அடங்கிய இந்த பொதி ஒன்றின் விலை 1950.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. பொதுவாக சந்தையில் நிலவும் விலையுடன் ஒப்பிடுகையில் இந்த 5 வகை பொருட்களுகளை 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட … Read more

மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் வாரத்தில் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும், மாலை 5.30 மணி முதல் இரவு 10.45 மணி வரை 1 மணித்தியாலமும் 45 நிமிடங்களும் மின்துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு … Read more

பொருளாதாரத்தினை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை கணிசமானளவு இறுக்கமடையச் செய்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 ஏப்பிறல் 08ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பவற்றினை 2022 ஏப்பிறல் 08 வியாபார முடிவிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் 700 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 13.50 சதவீதத்திற்கும் மற்றும் 14.50 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. கூட்டுக் கேள்வி கட்டியெழுப்பப்படுதல், உள்நாட்டு நிரம்பல் இடையூறுகள், செலாவணி வீத தேய்மானம் மற்றும் உலகளாவிய ரீதியில் பண்டங்களின் … Read more

நிலையான வைப்பு தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு(Photo)

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரித்துள்ளது. நிலையான வைப்பு வசதி வீதத்தை 13.50% ஆகவும், நிலையான கடன் வசதி வீதத்தை 14.50% ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட் டதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.  Source link

இலங்கையின் நெருக்கடி நிலையை பயன்படுத்தி கச்சத்தீவை மீட்குமாறு இந்திய மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்ட யோசனை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீா்க்கும் வகையில் இந்தியா உதவி வருவதை சாதகமாகப் பயன்படுத்தி, கச்சத்தீவு மற்றும் மீனவா்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தரத் தீா்வுகாண வேண்டும் என, திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து  கொள்ள சென்றிருந்தபோது நிகழ்வுக்கு முன்னதாக ஊடகவியலாளர்களிடம் பேசும்போது  அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு உதவி வருகிறது. உதவுவதை குறை கூறமுடியாது. அதே நேரத்தில், தமிழக … Read more

10 – 15 நாட்களில் நிலைமை மிக மோசமடையும்! கோட்டாபய இருக்கும் இடம் தெரியாது மறைந்து விட்டார்

இன்னும் 10 – 15 நாட்களில் நிலைமை மோசமடையுமென தான் நினைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒருவாரமாக ஜனாதிபதி எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அப்படியொரு நிலைமை தான் நாட்டில் இருக்கிறது. இந்த நிலையில் நாங்கள் யாரும் நாடாளுமன்றத்தில் இல்லை என்பது தெரிந்து தான் அவர் நேற்று நாடாளுமன்றம் வந்திருந்தார் என … Read more

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்தது

வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 321 ரூபா 49 சதம் வரை அதிகரித்துள்ளது. அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310 ரூபா 88 சதமாக பதிவாகியுள்ளது. மேலும், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 407 ரூபா 08 சதமாகவும், விற்பனை பெறுமதி 421 ரூபா 89 … Read more

புதிய வகை ஒமைக்ரோன் கொரோனா வைரஸ் குறித்து பயப்படத்தேவையில்லை

எக்ஸ்இ என்ற புதிய வகை ஒமைக்ரோன் கொரோனா வைரஸ் பற்றி பயப்படத்தேவை இல்லை என்று பிரபல மருத்துவ நிபுணர் ககன் தீப் கூறி உள்ளார். இந்த வைரசு இங்கிலாந்தில் மிகவேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இது இந்தியாவில் பரவி 4-வது அலையை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் சிலரது மனதில் எழுந்துள்ளது. ஒமைக்ரோன் வைரஸ் பிரிவுகளின் பிஏ1 மற்றும் பிஏ2 ஆகிய 2 வைரஸ்களின் கலவையாக எக்ஸ்இ வைரஸ் உருவாகி இருக்கிறது. இது வேகமாக பரவும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக … Read more

புத்தாண்டு தினங்களில் மின் துண்டிப்பை தவிர்க்க நடவடிக்கை

தமிழ், சிங்களப் புத்தாண்டு தினங்களான ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின் துண்டிப்பை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகள் விடுமுறை தினங்கள் என்பதனால் அந்த இரண்டு தினங்களிலும் மின்சாரப் பயன்பாடு குறைவாகவே காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின் உற்பத்தி நிலையங்களில் போதுமான அளவு எரிபொருள் இருந்தால், மின் துண்டிப்பை தவிர்ப்பதற்கான … Read more