கொழும்பில் இன்றைய தினம் மாற்று வழிகளை பயன்படுத்தவும்

பண்டிகைக் காலங்களில் பல்வேறு தேவைகளுக்காக பெருமளவிலான மக்கள் கொழும்புக்கு வருகைதருவதனால் பாரிய வாகன நெரிசல் ஏற்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக காலிமுகத்திடல், கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் வாகன நெரிசல் அதிகரிக்கக்கூடும் என்று  பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.   இதன் காரணமாக இன்று (08) பிற்பகல் அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல்  ஏற்படக் கூடும் என்பதனால், வாகனங்களில் பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.    

எனக்கு ஆங்கிலம் தெரியாது நாட்டையும் கட்டியெழுப்ப முடியாது! நாடாளுமன்ற உறுப்பினரின் ஆவேச பேச்சு (video)

பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தாம் மூன்று மாதங்களுக்கு நாடாளுமன்றத்தில் இருக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். எனக்கு ஆங்கிலம் தெரியாது, என்னால் நாட்டை கட்டியெழுப்பவும் முடியாது என குறிப்பிட்டுள்ளார்.   இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றிய சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். Source link

சிறுபோக பயிர்ச்செய்கை ஊடாக நமக்குத் தேவையான அரிசியை நாமே பெற்றுக்கொள்ள வேண்டும்

நாட்டில் தற்போது நிலவக் கூடிய நிலைமையை கருத்தில் கொண்டு சிறுபோக பயிர்ச்செய்கையை மேற்கொள்வதன் மூலம் தமக்குத் தேவையான அரிசியை தாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட அல்லை வியாபார சிறுபோக பயிர்ச்செய்கை கூட்டம் நேற்று சேருவில பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது சிறுபோக விவசாய செய்கையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பி;டார் அரசாங்கம் தற்போது சேதன … Read more

நாட்டில் இன்று முதல் மக்களுக்காக விசேட திட்டம்! பேருந்து, புகையிரத பயணிகளுக்கு முக்கிய தகவல்

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாட்டில் தமது சொந்த ஊர்களுக்கு திரும்பவுள்ள மக்களுக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி தூரப்பிரதேசங்களுக்கான விசேட பேருந்து சேவை இன்று ஆரம்பிக்கப்படுவதாக போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க அறிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது வழமையாக சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு மேலதிகமாக இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபட உள்ளதாக … Read more

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் ஊடக அறிக்கை

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் ஊடக அறிக்கை மரியாதைக்குரிய மகா சங்கத்தினர், உட்பட அனைத்து மதத் தலைவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து இலங்கை பிரஜைகளே! வன்முறையை தவிர்க்குமாறு உங்கள் அனைவரிடமும் முதலில் கேட்டுக்கொள்கின்றேன். நாட்டில் நிலவும் பரபரப்பான சூழ்நிலை காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் திரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். “அமைதியான போராட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக பிரதிநிதித்துவப்படுத்துவதாக இந்தப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட … Read more

பரபரப்பான நிலையிலும் இலங்கை மக்களின் கவனத்தை ஈர்த்த சம்பவம்

இலங்கை முழுவதும் மக்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் இணையத்தில் புகைப்படம் ஒன்ற பிரபல்யமடைந்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது தேரர் ஒருவரை மழையில் நனைய விடாமல் முஸ்லிம் மாணவி ஒருவர் புத்தகத்தினால் அவரை மறைத்துக் கொண்டுள்ளார். கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டக்களத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிய நிலையில் பலரும் அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இலங்கையில் இன மத பேதமின்றி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதனை இந்த புகைப்படம் உணர்த்துவதாக பலரும் … Read more

அரச ஊழியர்களுக்கு ஏப்பிரல் மாத சம்பளம் இன்று

ஏப்பிரல் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளம் இன்றைய தினம் செலுத்தப்படும் என நிதியமைச்சின் பிரதிச் செயலாளர் பிறியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏப்பிரல் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளத்தையும் பண்டிகை முற்கொடுப்பனவையும் செலுத்துவதற்காக 9 ஆயிரத்து 750 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பிரதிச் செயலாளர் கூறினார். ஏப்பிரல் மாத ஓய்வூதியத்தைச் செலுத்துவதற்காக திறைசேரி 2 ஆயிரத்து 500 கோடி ரூபா ஒதுக்கியுள்ளது. சமுர்த்திக் கொடுப்பனவை வழங்குவதற்குத் தேவையான 550 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதிச் செயலாளர் பிறியந்த … Read more

தைரியம் எங்களின் அடையாளம்! – உக்ரைன் ஜனாதிபதி பெருமிதம்

உக்ரைன் நாட்டு மக்களின் தைரியத்தை பாராட்டுவதாக தெரிவித்த அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இது உலகம் முழுவதும் பரவ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு நேற்றிரவு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். “உக்ரைனியர்களாகிய எங்களிடம் உள்ள தைரியத்தில் உலகில் உள்ள அனைவருக்கும் குறைந்தது 10 வீதம் இருந்தால், சர்வதேச சட்டத்திற்கு எந்த ஆபத்தும் இருக்காது. நாடுகளின் சுதந்திரத்திற்கு எந்த ஆபத்தும் இருக்காது. நாங்கள் எங்கள் தைரியத்தை உலக நாடுகளுக்கு பரப்புவோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார். “தைரியமாக … Read more

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி பீ. நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் புதிய செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி பீ. நந்தலால் வீரசிங்கவும், நிதி அமைச்சின் புதிய செயலாளராக கே.எம்.எம். சிறிவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று (07) பிற்பகல் கையளிக்கப்பட்டன.

இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்ட இளைஞர்!

வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் இலங்கைக்குள் பிரவேசித்து பிரான்சுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஈராக் இளைஞர் ஒருவரை குடிவரவு குடியகல்வு திணைக்களம் கைது செய்து நாடு கடத்தியுள்ளது. 26 வயதான அவர் ஈராக்கில் உயர் கல்வி பயிலும் மாணவர். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து துருக்கி விமான சேவைக்கு சொந்தமான TK-731 என்ற விமானத்தில் 6ஆம் திகதி இரவு 07.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவர் தனது விசா அனுமதியைப் பெற குடிவரவு பகுதிக்குச் சென்றதுடன், … Read more