மகிந்த ராஜபக்ச பதவி விலக மாட்டார்! – அரசாங்கம் அறிவிப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக மாட்டார் என்றும், அடுத்த தேர்தல் வரை பதவியில் இருப்பார் என்றும் அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் தொடர்ந்து பதவியில் இருப்பார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கத்தில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். Source link

பண்டிகைக் காலங்களில் மின்வெட்டு நேரத்தை குறைக்க தீர்மானம்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மின்வெட்டு நேரத்தை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க, இந்த வார இறுதியில் இருந்து மின்வெட்டு நேரத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒரு தொகை டீசல் கடந்த வாரம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் அதற்கான பணம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் ஜனக ரத்நாயக்க கூறியதோடு,வெள்ளிக்கிழமை (8) வரை திட்டமிடப்பட்டுள்ள ஆறரை மணி நேர மின்வெட்டு நேரத்தில் எவ்வித … Read more

உக்ரேனில் யுத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்ற ஆயுதங்கள்!!

உக்ரேன் யுத்தக்களங்களில் பாவிக்கப்படுகின்ற சில ஆயுதங்கள் யுத்தத்தின் முடிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒருசில ஆயுதங்கள் அந்த யுத்தத்தின் போக்கினையே முற்றாக மாற்றிவிடும் வகிபாகத்தை வகித்து வருகின்றன. அப்படி, உக்ரேன் சண்டைக் களங்களில் ரஷ;யாவினாலும், உன்ரேன் தரப்பினாலும் பாவிக்கப்பட்டுவருகின்ற ஒருசில முக்கியமான ஆயுதங்கள் பற்றிப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்: Source link

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விடுத்துள்ள கோரிக்கை

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது சிறுவர்களை ஈடுபடுத்துவதை சிறுவர்களை ஈடுபடுத்துவதை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல்கள் காரணமாக பல்வேறு தரப்பினர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சிறுவர்களை இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதனால், அவர்கள் காயங்கள் அல்லது உடல் மற்றும் உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 1991 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம், ஐக்கிய … Read more

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 07ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாகதிருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடலில் … Read more

மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் நியமனம் (Photo)

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவெளை, நிதி அமைச்சின் புதிய செயலாளராக மஹிந்த சிறிவர்தன ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.  Source link

பெண்களின் சுகாதாரத்தேவைகளுக்கு ஆதரவளிக்கும் சினிது திட்டத்தை மேம்படுத்தும் இந்திய-இலங்கை மன்றம்

இலங்கையில், வசதிகுறைந்த பெண்களின் சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்திய இலங்கை மன்றத்தினால் ஆதரவளிக்கப்பட்டு, சினிது அமைப்பினால் அமுல்படுத்தப்படும் திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்வதற்காக இந்திய இலங்கை மன்றம் (ISLF) 2022 ஏப்ரல் 05 ஆம் திகதி ஹோட்டல் தாஜ் சமுத்ராவில் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரும் இந்திய இலங்கை மன்றத்தின் இணைத்தலைவருமான மேன்மைதங்கிய திரு.கோபால் பாக்லே, இராஜதந்திரிகள், உலக வங்கி மற்றும் கொழும்பு திட்டம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், சினிது அமைப்பின் இணைத்தலைவர்களான  … Read more

இலங்கையிலிருந்து தப்பியோடிய சர்ச்சைக்குரிய நபரின் மகனின் ஆதங்கம்

இலங்கையில் தப்பியோடிய சர்ச்சைக்குரிய நபரான எவன்ட் கார்ட் நிறுவனத்தின் நிஸ்ஸங்க சேனாதிபதியின் குடும்பம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிஸ்ஸங்க சேனாதிபதியின் மகன் செனுர யாப்பா சேனாதிபதி, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  இலங்கைக்கு எதிராக தமது குடும்பத்தினர் எந்த தவறும் செய்யவில்லை எனவும், ஆனால் நாட்டு மக்கள் தம்மை பல்வேறு வகையில் இணையம் ஊடாக துன்புறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.  நம்மை துன்புறுத்திய அனைவருக்கும் தெரியும், நாம் நாட்டுக்கு எந்தத் தவறும் … Read more

மெழுகுவர்த்தியை நம்பியிருக்கும் வைத்தியசாலை! இலங்கை வைத்தியசாலையில் அவலம்

பொலன்னறுவை – மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலை,  தற்போது நடைமுறைப்படுத்தப்படும் மின் தடை காரணமாக பாரியளவில் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.   மெழுகுவர்த்தி ஏந்தி நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.  மருத்துவமனையில் இரண்டு ஜெனரேட்டர்கள் இருந்தாலும் அதில் ஒன்று பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.   டீசல் இல்லாததால் மற்ற ஜெனரேட்டரை இயக்க முடியவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  Source link

போதைப்பொருள் பாவனையினை தனி மனித முயற்சியினால் கட்டுப்படுத்த முடியாது – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

எமது சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சனையாக போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது இதனை தனி மனித முயற்சியினால் கட்டுப்படுத்த முடியாது அனைவரும் இணைந்தே கட்டுப்படுத்த முடியும் என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையும் மற்றும் அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த சிறுவர் மற்றும் இளையோர்களை பாதுகாப்பதில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய தடுப்பு முயற்சிகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார். … Read more