பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகம் முற்றுகை! பதற்றத்தை கட்டுப்படுத்த களமிறக்கப்பட்டுள்ள பொலிஸார்

தெமட்டகொடவில் உள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தை பாரவூர்தி சாரதிகள் குழுவொன்று சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.   அவர்கள் பல லொரிகளை இடையில் நிறுத்தி  தலைமைச் செயலகத்தின் நுழைவாயிலை முற்றிலுமாகத் தடுத்து, யாரும் தலைமைச் செயலகத்திற்குள் நுழையவோ வெளியேறவோ முடியாத வகையில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.  சம்பவ இடத்தில் பதற்றமான சூழல் நிலவியதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  Source link

சிறுபோகத்திற்குத் தேவையான உரம் தற்போது விநியோகம்

சிறுபோகத்திற்குத் தேவையான உரம் தற்போது விநியோகிக்கப்பட்டு வருவதாக தேசிய உர செயலகம் அறிவித்துள்ளது. நாட்டில் சேதன மற்றும் உயிரியல் உர உற்பத்தியில் தற்சமயம் கணிசமான வளர்ச்சியை காண முடிவதாக செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே தெரிவித்துள்ளார். இம்முறை உற்பத்தி செய்யப்பட்ட திரவ உரத்தின் அளவு ஒரு கோடி 30 லட்சம் லீற்றர்களுக்கு அதிகமாகும்.விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அமைய, முறையான ஒழுங்குறுத்தலுக்கு அமைய, ஒருசில உர வகைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேயிலை உற்பத்திக்கென 33 ஆயிரம் மெற்றிக் … Read more

அடுத்த சில நாட்களில் பெரும்பாலான பிரதேசங்களில் மழை

இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் (08, 09 மற்றும் 10 ஆம் திகதி) அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று நண்பகல் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் … Read more

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கும் நியூசிலாந்து

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள் தொடர்வதால் இலங்கை எதிர்பாராத கொத்தளிப்பான ஒரு காலக்கட்டத்தை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தலைவர்களின் நடவடிக்கைகளை கண்டிக்குமாறு கோரி நியூசிலாந்திலுள்ள இலங்கையர்கள் நியூசிலாந்து அரசாங்கத்திடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். இதன்போதே நியூசிலாந்து பிரதமர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் தற்போதைய நிலைமைகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். இது தொடர்பில் மேலதிக விபரங்களை அறிய நாம் காத்திருக்கிறோம். இலங்கை … Read more

புத்தாண்டிற்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு சம்பளம்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் எந்தவிதமான சிக்கல்களும் இல்லை என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதியமைச்சர், மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இதுவரையிலும் நியமிக்கப்படாததன் காரணத்தினால், புத்தாண்டுக்கு முன்னர் சம்பளம் வழங்குவது சாத்தியமற்றது என்று சில தரப்பினர் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.   தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை முன்னைய வருடங்களைப் போன்றே குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் … Read more

இன்றைய (07.04.2022) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (07.04.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:     இலங்கை மத்திய வங்கியினால் 06.04.2022 அன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய முன்னாள் நிதி அமைச்சர்

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.   மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு   அரசாங்கமே பொறுப்பு, இதற்கும் தாம் மன்னிப்பு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.   போராட்டக்காரர்களின் தூண்டுதல்கள் எங்களுக்குத் தெரியும், இதற்குத் தீர்வு காண வேண்டும், ஐஎம்எப் போக வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறி வந்தேன். ரூபாய் மிதக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. கடனை மறுசீரமைக்க வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது. கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று வருகிறார். நாளை பொறுப்பேற்பார். இந்த … Read more

பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் இன்று, (07) முற்பகல் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டார். பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை, ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். ‘கூடுதல் வரி சட்டமூலம்’ (Surcharge Tax Bill) இரண்டாம் வாசிப்பின் போது, ​​பாராளுமன்ற அவைக்கு பிரவேசித்த ஜனாதிபதி  அவர்களை, பாராளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி அமோக வரவேற்பளித்தனர். சிறிது நேரம் சபையில் இருந்த ஜனாதிபதி அவர்கள், மக்கள் பிரதிநிதிகளின் உரைகளுக்கு தமது அவதானத்தைச் செலுத்தினார்.    ஜனாதிபதி … Read more

புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

தமிழ், சிங்கள புத்தாண்டை புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை (08) முதல் 15 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவைகள் இடம்பெறவுளவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு கட்டங்களாக செயல்படும் இந்த விசேட பஸ் சேவை, பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இரண்டாம் கட்டத்தின் கீழ் அவர்கள் மீண்டும் திரும்புவதற்கும் பஸ் சேவைக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கொழும்பு பஸ்தியன் மாவத்தை பிரதான பஸ் நிலையத்திற்கு மேலதிகமாக … Read more

இந்த வார இறுதி மற்றும் பண்டிகைக்காலத்தின் போதான மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியானது அறிவிப்பு

இந்த வார இறுதி மற்றும் எதிர்வரும் பண்டிகைக்காலத்தின் போதான மின்வெட்டு நேரம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மின்வெட்டு காலத்தை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், இந்த வார இறுதியிலும் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த டீசல் கப்பலுக்கு ஒரு தொகையை செலுத்துவதற்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. … Read more