தென்கிழக்கு வங்காள விரிகுடா – குறைந்த அழுத்தப் பிரதேசம் ? 

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கானஇ நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 07ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலங்களில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இலங்கைக்கு தென்கிழக்காக மற்றும் கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் … Read more

பதவி விலகிய அமைச்சர்கள் அதிகாரபூர்வ வாகனங்களை ஒப்படைக்கவில்லை என தகவல்

பதவி விலகிய அமைச்சர்கள் இன்னமும் அதிகாரபூர்வ வாகனங்களை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர். எனினும் இந்த அமைச்சர்கள் அதிகாரபூர்வ வாகனங்களை தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி, 24 மணி நேரம் கூட புதிய பதவியில் நீடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. Source link

நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்க முழு ஆதரவு! – அரசுக்கு அதிர்ச்சி கொடுக்கும் மைத்திரி தரப்பு

 அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான எந்தவொரு பிரேரணைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு முழுமையாக ஆதரவளிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் பிரேரணை கொண்டு வரப்பட்டால் ஒரு கையை அல்ல இரண்டு கைகளையும் உயர்த்தி அதற்கு அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் … Read more

அரசின் நடவடிக்கை பேரழிவிற்கு வழிவகுக்கும்! – சுமந்திரன் எம்.பி கடும் எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சியில் இடதுசாரிக் கட்சிகள் தடைசெய்யப்பட்ட பாதையிலேயே அரசாங்கமும் பயணிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், அண்மையில் வெளியிடப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். “அரசாங்கத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு ஜே.வி.பி மீது குற்றம் சாட்டி நீங்கள் அதையே செய்கிறீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நடத்தை பேரழிவிற்கு வழிவகுக்கும், ”என்று அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் … Read more

இலங்கையின் நெருக்கடி நிலை குறித்து மூடிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது கொள்கை நிச்சயமற்ற தன்மையை, வெளிப்புற பணப்புழக்கம் மற்றும் நிதி சிக்கல்களை அதிகரிக்கிறது என்று மூடிஸ் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 3-4 திகதிகளில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவைத் தவிர, இலங்கையின் முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்திருந்தது. மத்திய வங்கியின் ஆளுநரும் இராஜினாமா செய்திருந்தார். உயர் பணவீக்கம் காரணமாக அதிகரித்து வரும் பொதுமக்களின் அதிருப்தி மற்றும் சமூக பதட்டங்களின் பிரதிபலிப்பாகவே இந்த இராஜினாமா இடம்பெற்றிருந்தது. இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை … Read more

புகழ்பெற்ற நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்

பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக புகழ்பெற்ற நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் நியமித்துள்ளார். 01- இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி. 02- ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திப் பயிற்சி தொடர்பான பேராசிரியர் மற்றும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர், பேராசிரியர் சாந்தா தேவராஜன். … Read more

கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் புதிய நீர் இணைப்பினை வழங்குவதற்கான நடமாடும் சேவை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு தெற்கு – 90 கிராம அலுவலகர் பிரிவில் புதிய நீர் இணைப்பினை வழங்குவதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் 08 ஆம் மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்போது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உத்தியோகத்தர்கள் வீடு வீடாக வருகை தந்து புதிய நீர் இணைப்பிற்கான விண்ணப்ப படிவங்களை பொதுமக்களுக்கு வழங்கவுள்ளனர். குறித்த விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் எதிர்வரும் … Read more

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பிக்கு மீது அரசியல்வாதி தாக்குதல்

கேகாலை மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய பௌத்த பிக்கு மீது நடத்தப்பட்ட குண்டர் தாக்குதலுக்கு காரணமானவர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உள்ளூர் அரசியல்வாதி ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிசாவளை பனாவல வீதியில் வெலங்கல்ல சந்தியில் இன்று பிரதேச மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, மாணியங்கம ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி அம்பன்வெல ஹேமலங்கர தேரர், தாக்குதலை நடத்திய தெஹியோவிட்ட பிரதேச சபையின் தலைவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார். … Read more

பாடசாலைகளுக்கு 3ஆம் தவணை விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2021 ஆம் கல்வியாண்டின் 3ஆம் தவணை நேற்றுடன் (06) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.. இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ.கே. பெரேரா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, 2021 கல்வி ஆண்டிற்கான 3ஆம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08) நிறைவு செய்யப்படவிருந்த நிலையில் தற்போது அதனை நேற்றுடன் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அனைத்து கத்தோலிக்க … Read more

கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலை ஏற்படக்கூடும் – சபாநாயகர்

எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின் துண்டிப்பு ஆகியவற்றிலும் பார்க்க கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலை ஏற்படக்கூடும் என்பதை யூகிக்கக்கூடியதாகயிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பாராளுமன்ற அலுவல்கள் இன்று (06) காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது விசேட உரையொன்றை நிகழ்த்தி பாநாயகர் இதனைத் குறிப்பிட்டார். அரசியல் நோக்கத்தை புறம்தள்ளி இந்த நெருக்கடியில் இருந்து மீழ்வதற்கு அரசியல் யாப்பு மற்றும் ஜனநாயகத்துக்கு உட்பட்ட வகையில் பொது வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து அதனை செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு … Read more