“எங்கள் வீட்டு இளவரசி” செல்ல மகளை ஹெலிகொப்டரில் அழைத்து வந்த தந்தை

பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விதமாக, மகாராஷ்டிராவில் ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ஷெல்காவோன் (Shelgaon) பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் விஷால் ஜரேகரின் மனைவிக்கு கடந்த ஜனவரி 22-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு விஷால் ஜரேகரின் மனைவி, Bhosari பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், தங்களது குடும்பத்தில் பல தலைமுறைகளாகப் பெண் குழந்தையே … Read more

கடற்றொழிலாளர்களுக்கு விசேட அறிவித்தல்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 06ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது ஏப்ரல் 07 ஆம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இலங்கைக்கு தென்கிழக்காக மற்றும் கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் … Read more

பாடசாலை நேரம் ஒரு மணித்தியாலயத்தால் அதிகரிக்கின்றது

அடுத்த தவணையிலிருந்து பாடசாலை நேரத்தை மேலும் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த வருடத்திற்கான (2022) பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு 139 நாட்கள் மட்டுமே இருப்பதனால் பாடசாலை நேரத்தை மேலதிகமாக ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு மணித்தியாலம் நீடிப்பதன் மூலம் சுமார் 20 நாட்கள் கற்பித்தல் காலத்தை கூடுதலாக மேற்கொள்ள முடியும் என்பது கல்வி அமைச்சின் எதிர்பார்ப்பாகும். கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட பின்னரும் பாடத்திட்டத்தை உள்வாங்க முடியாத பட்சத்தில் மூன்றாம் தவணையில் … Read more

இலங்கையை வந்தடைந்த பெருமளவு எரிபொருட்கள்

இலங்கைக்கு கடந்த 24 மணிநேரத்தில் 76,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டீசல் நேற்றும், இன்றும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தியக்கடன் எல்லை வசதியின் கீழ் இதுவரையில், 270,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் கூறியுள்ளது. Source link

ரயில்வே திணைக்களம் பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

மின் துண்டிப்பு இடம்பெறும் சந்தர்ப்பங்களில் ரயில் கடவை ஊடாக செல்லும் பொழுது கூடுதல் கவனத்துடன் செயற்படுமாறு ரயில்வே திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மின்சாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் ரயில் பாதைகளில் பொருத்தப்பட்டுள்ள மின் சமிக்ஞை கட்டமைப்பு செயற்படுவதற்கு மின்கலம் பயன்படுத்தப்பட்டிருந்த போதிலும் மின் துண்டிப்பு நீண்ட நேரம் இடம்பெறுமாயின் இந்த மின் சமிக்சை கட்டமைப்பு சிலவேளைகளில் செயற்படாது. இதன் காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறும் சநதர்ப்பங்களில் இவ்வாறான ரயில் கடவைகளின் ஊடாக செல்லும் பொழுது மிகவும் அவதானத்துடன் … Read more

தனிக்குழுவாக செயல்பட்டாலும் ,அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் செயல்படுவோம்

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு அமைவாக பாராளுமன்றத்தில் ஏற்படும் பிரச்சினைகளின் போது அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற  அரசியல் நிலைமை தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவு படுத்துவதற்காக இன்று (06) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஸ்ரீ பால டி சில்வா இந்த விடயத்தை குறிப்பிட்டார். இந்த ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவும் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஏதேனும் பிரச்சினை … Read more

அவசரமாக நாட்டை விட்டு வெளியேறிய மஹிந்தவின் நெருங்கிய உறவினர்! வெளியானது புகைப்படம்

புதிய இணைப்பு முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பான சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகின்றன.  நாட்டின் தற்போதை நெருக்கடியான நிலையில் பல முக்கியஸ்தர்கள் பதவி விலகுவதும், நாட்டை விட்டு வெளியேறுவதும் தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன.  இந்த நிலையில் பிரமர் மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினரான நிரூபமா ராஜபக்ச நேற்று இரவு நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.  இந்த நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது … Read more

இலங்கையில் ,இரண்டாவது அலை காலப்பகுதியில் 0% கொவிட் தொற்று இறப்பு

சுகாதார பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட ஏப்ரல் 4ஆம் திகதி அறிக்கையில், 2020 நவம்பரில் தொடங்கிய இரண்டாவது அலையின் பின்னர் ,கொவிட்-19 வைரசு தொற்று தொடர்பான இறப்புகள் முதல் தடவையாக எதுவும் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளது. ஏப்ரல் 4 ஆம் திகதி, சுகாதார அதிகாரிகளால் 112 கொவிட்-19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 61 ஆயிரத்து 991 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் ,வைரசு தொற்றால்  ஏற்பட்ட மொத்த … Read more

இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, பெற்றோர்கள் மற்றும்  அனைத்து தரப்பினரையும் கோரியுள்ளது. தற்போதைய நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய போராட்டங்களுக்கு சிலர் குழந்தைகளையும் தூக்கிச் செல்வதை அவதானிக்க முடிந்தது. இது பொருத்தமற்ற செயற்பாடாகும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை  எச்சரிக்கை விடுத்துள்ளது.  Source link

சம்பளம் தொடர்பில் அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் தொடர்பில் அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.  அதன்படி ஏப்ரல் மாதத்திற்குரிய சம்பளத்தை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அரச சேவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு கூறியுள்ளது. இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை, பொருட்களின் விலையேற்றம் என்வற்றை கண்டித்தும், அரசாங்கத்திற்கு எதிராகவும் இலங்கையில் பல பகுதிகளில் மக்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.  இதேவேளை கடந்த சில நாட்களாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் … Read more