இலங்கை நிலவரத்தை மிகப்படுத்தும் இந்திய ஊடகங்கள்! ஆதங்கம் வெளியிடும் இலங்கை மக்கள்

இலங்கையில் சமகால நெருக்கடி நிலமைகள் தொடர்பில் இந்திய ஊடகங்கள் பல பொய்யான தகவல்களை பரப்பி , உலகளவில் இலங்கைக்கு இருக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக இலங்கை மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர். உலகளாவிய ரீதியில் கல்வி அறிவுள்ள மக்களை கொண்டு நாடுகளில் பட்டியலில் இலங்கை முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான தமது போராட்டத்தினை தீவிரப்படுத்தியுள்ளன. இது குறித்து … Read more

சபைக்கு செல்லாத கோட்டாபய! பதவி விலகுமாறு கூச்சலிட்ட உறுப்பினர்கள் (Video)

பதவி விலக வேண்டியது 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்ல, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே என  தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் இன்று போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.  அத்துடன், ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் திடீரென வருகைத் தந்ததாகவும் எனினும் சபைக்குள் வரவில்லை எனவும் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஆர்ப்பாட்டத்தின்போதே சாணக்கியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  நாடாளுமன்றத்தினை கலைக்கும் நோக்குடனேயே ஆளும் தரப்பினர் நாடாளுமன்றத்தில் செயற்பட்டு … Read more

புத்தாண்டு காலத்தில் கொவிட் குறித்து அவதானமாக செயற்பட வேண்டும்

கடந்த வருடம் தமிழ் சிங்களப் புத்தாண்டு காலத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்பட்டதனால், இந்த புத்தாண்டு காலத்தில் அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புத்தாண்டு காலத்தில் இடம்பெறும் முக்கிய செயற்பாடுகளின்போது, பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி எந்த வகையிலும் தனது பதவியை இராஜினாமா செய்ய மாட்டார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எந்த வகையிலும் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய மாட்டார் என ஆளும் கட்சி பிரதம அமைப்பாளரும், அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்றைய தினம் (06) எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு பதிலளித்தார். ஜனாதிபதிக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். அவர் பதவி விலக மாட்டார் நாம் அவருடன் ஒன்றிணைந்துள்ளோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.     

நாடாளுமன்றத்திற்குள்ளும் போராட்டம்! சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது (Video)

நாடாளுமன்றில் இடம்பெற்றுவரும் விசேட விவாதத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உரையாற்ற தொடங்கிய வேளையில், ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைமையின் காரணமாக சபாநாயகரினால் சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Source link

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமாவை ஜனாதிபதி நிராகரித்தார்…

பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதற்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய சமர்ப்பித்த கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் நிராகரித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கும் அவர்கள் வகித்த பதவிகளை இராஜினாமா செய்வதற்கும் தீர்மானித்திருந்தனர். பாராளுமன்ற ஜனநாயகம் பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். எனவே, பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதற்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய சமர்ப்பித்த கடிதத்தை நிராகரிப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். நேற்று, (05) … Read more

தனிக்குழுவாக செயல்பட்டாலும் எதிர்க்கட்சிகளுடன் எந்த தொடர்பும் இல்லை – முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

தனிக்குழுவாக  செயற்பட்டாலும் எதிர்க்கட்சியில் இணையப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று (05) பாராளுமன்றத்தில் தனிக்குழுவாக செயற்படுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஊடகமொன்றுக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், தேர்தல் ஒன்றிற்கு செல்லாமல், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு காலத்தில் அவதானமாக இருங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடந்த வருடம் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருந்தது.  இதன் காரணமாக இம்முறை புத்தாண்டு காலத்தில் அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு  எச்சரிக்கை விடுத்துள்ளது.   புத்தாண்டு காலத்தில் இடம்பெறும் முக்கிய நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதற்கிடையில், நேற்று முதல் நாட்டில் கோவிட் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை … Read more

நாடாளுமன்றை அண்மித்த பகுதிகளில் ஆயுதங்களுடன் வந்த படையினர் குறித்து வெளியான தகவல்

நாடாளுமன்றை அண்மித்த பகுதிகளில் நேற்றைய தினம் பதிவு செய்யப்படாத மோட்டார்சைக்கிள்களில் சஞ்சரித்தவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றை அண்மித்த பகுதியில் இவ்வாறான நான்கு மோட்டார்சைக்கிள்களில் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். முகத்தை முழுமையாக மூடி ஆயுதங்களுடன் இலக்கத் தகடற்ற மோட்டார்சைக்கிள்களில் இந்த படைவீரர்கள் சஞ்சரித்தனர். இதன்போது குறித்த படையினரை பொலிஸ் அதிகாரிகள் வழிமறித்து விசாரணை செய்தனர். இது தொடர்பான காணொளிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. இவ்வாறான பின்னணியில் குறித்த … Read more

வீதியில் தொங்கவிடப்பட்ட கோட்டாபயவின் உருவ பொம்மை! (Photo)

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதியின் உருவப் பொம்மை ஒன்று நடு வீதியில் தொங்கவிடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருள், எரிவாயு, மருந்து … Read more