அவசரகாலச் சட்டம் நீக்கம் – ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவிப்பு

நேற்று நள்ளிரவு (05) முதல் அமுலுக்கு வரும் வகையில், அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நெருக்கடிக்கு மகிந்தவே முழு பொறுப்பு! – குமார வெல்கம

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு பிரதமர் மகுீந்த ராஜபக்ஷவே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குற்றம் சுமத்தியுள்ளார். நாடாமன்றில் இன்று உரையாற்றிய அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 2019ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சாபத்தை தற்போதைய அரசாங்கம் எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 2019ம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட்ட போது ‘கோட்டாபய … Read more

பிரதமரின் கொழும்பு உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்ட பெருந்திரளான மக்கள்

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோபூர்வ இல்லத்திற்கு அருகில் பெருந்திரளான மக்கள் ஒன்றுக்கூடியுள்ளனர். பிரதமரின் இல்லத்திற்கு எதிரில் ஒன்றுக் கூடியுள்ள மக்கள் அரசாங்கமும் ஜனாதிபதியும் பதவி விலகி செல்ல வேண்டும் என்று கோஷமிட்டு வருகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு எதிரில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கால்டன் இல்லம் அமைந்துள்ள … Read more

ஐ.எஸ் பயங்கரவாதிகளை போன்று கொடூர செயலில் ஈடுபட்ட ரஷ்ய படை!

உக்ரைனில் ரஷ்ய படையில் போர் தொடுத்திருந்த நிலையில், ரஷ்ய படையினர் மிகக் கொடூரமாக உக்ரைன் பொது மக்களை படுகொலை செய்துள்ள சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் கொடூரமாக முறையில் ரஷ்ய படையினர் உக்ரைன் பொது மக்களை படுகொலை செய்துள்ள நிலையில், ரஷ்ய படையினரின் செயற்பாடு ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயற்படுகளுக்கு ஒப்பானது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட … Read more

நாடாளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்பு – முக்கிய அரசியல்வாதி தகவல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இருந்தாலும் நாளைய தினம் அந்த நிலை மாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் தலைதூக்கியுள்ளன. இதன் காரணமாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலர் இன்றைய தினம் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளமையும் … Read more

எரிபொருள் விநியோக நடவடிக்கை தடையின்றித் தொடர உறுதி

எரிபொருள் விநியோக நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெறுவதாக தனியார் எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளார்கள். இலங்கை தனியார் பௌசர் வாகன உரிமையாளர்கள் சங்கத்திற்கும் – கொலன்னாவை மசகு எண்ணெய் முனைய நிறுவனத்தின் தலைவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கிறது. சகல கோரிக்கைகளுக்குமான தீர்வுகள் கிடைக்காவிட்டாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன்கருதி எரிபொருள் விநியோக நடவடிக்கை இடம்பெறுவதாக தனியார் பௌசர் வாகன உரிமையாளர் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பான பாராளுமன்ற விவாதம் மேலும் 2 தினங்களுக்கு தொடரும்….

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பான பாராளுமன்ற விவாதம் மேலும் இரண்டு தினங்களுக்கு நடைபெறவுள்ளது. .பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று பாராளுமன்றம் கூடியது. தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காணப்பதற்கான யோசனைகள் இதன் போது முன்வைக்கப்பட்டன. பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்குச் செல்லுமாறு யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் சில கட்சிகளின் பிரதிநிதிகள் இதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. இதேவேளை, இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் எந்தவித இணக்கப்பாடுமின்றி முடிவடைந்தது.  கட்சிகள் அல்லது குழுக்களாகப் பிரிந்து பல்வேறு கருத்துக்களுடன் மக்களை … Read more

மாத்தறையில் மாபெரும் மக்கள் போராட்டம் முன்னெடுப்பு (Photos)

மாத்தறையில் அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெருந்திரளான மக்கள் கைகளில் தீப்பந்தம் மற்றும் தேசிய கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் இவ்வாறு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். Source link

சஜித்தின் கோரிக்கையை புறக்கணித்த தினேஸ்! நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்ற எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கோரிக்கையை அரசாங்க கட்சி ஏற்றுக்கொள்ளாத நிலையில் நாடாளுமன்ற அமர்வு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது கருத்துக்களை வெளியிட்டனர். இந்தநிலையில் பிற்பகல் 2.30க்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்திருந்தார். இதனை கருத்திற்கொண்டு பிற்பகல் 2.10 அளவில் நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைப்பதாக அவையின் தலைவர் தினேஸ் … Read more

தொழில்நுட்ப ஒத்துழைப்பின் மூலம் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல்

விவசாயத் திணைக்களம் – பிலிப்பைன்ஸ் அரிசி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், வெளியுறவுத் திணைக்களம் – பிலிப்பைன்ஸின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு சபை, இலங்கை விவசாயத் திணைக்களத்தின் முப்பத்திரண்டு (32) விவசாய விரிவாக்கவாளர்கள் / தொழில்நுட்ப வல்லுநர்கள் / ஆராய்ச்சியாளர்களுக்கு ஒருங்கிணைந்த நெற்பயிர் முகாமைத்துவம் குறித்த பயிற்சியாளர்களுக்கு மெய்நிகர் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ஒருங்கிணைந்த நெற்பயிர் முகாமைத்துவ அமைப்பிலான பயிற்சியாளர்களின் பயிற்சி என்பது, பிலிப்பைன்ஸால் பயிர் முகாமைத்துவம், அரிசி உற்பத்தித் தொழில்நுட்பங்கள் … Read more