வெளிநாடுகளில் உள்ள சில இலங்கைத் தூதரகங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் சில  தற்காலிகமாக மூடப்படுகின்றன. அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.  இதன்படி, நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் ஈராக்கின் பாக்தாத் ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்களையும், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணை தூதரகத்தையும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   Source link

முல்லைத்தீவில் தேசிய கரையோர, கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு கரையோர தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சென்றாண்டுக்கான (2021) தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு கரையோர தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் நேற்று (04) நாயாறு கடற்கரையில் இடம்பெற்றது. 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரம் கொரோனா இடர் காரணமாக இடம்பெறவில்லை. சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினமானது வருடா வருடம் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் … Read more

மோசமடையும் இலங்கை நிலைமை! வெகுவிரைவில் வெடிக்கப்போகும் ஆயுத மோதல் – பேராசிரியர் எச்சரிக்கை

இலங்கையில் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படாவிட்டால் சிங்கள மக்களுக்கு இடையில் ஒரு சிவில் யுத்தம் வருவதற்கான ஒரு சாத்தியம் இருக்கும் என அமெரிக்காவின் சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் எச்சரிக்கை விடுத்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி போன்றவர்கள் இதேபோன்று சிந்திப்பார்களாக இருந்தால் அவர்கள் மக்களின் போராட்டத்திற்கு பயந்து அரசியலில் இருந்து விலகப் போவதில்லை. பதவியை விட்டு … Read more

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தொழில் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கியுள்ள கொரியா

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கொரியக் குடியரசின் அரச கொள்கை ஒருங்கிணைப்பு அமைச்சர் கூ யுன்-சியோல், 2022 ஏப்ரல் 01ஆந் திகதியாகிய இன்றைய தினம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை சந்தித்தார். சந்திப்பைத் தொடர்ந்து நடைபெற்ற மதிய போசன விருந்தின் போது, இருதரப்பு உறவுகளின் முழுமையான வரம்பு மற்றும் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நட்பு ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் கீழ் … Read more

ஜனாதிபதிக்கு சென்றது மற்றுமொரு இராஜினாமா கடிதம்! பதவி விலகும் அரச முக்கியஸ்தர்

திறைசேரி செயலாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக எஸ்.ஆர்.ஆடிகல அறிவித்துள்ளார். மேலும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை நேற்றைய தினம் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி இன்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்தை சேர்ந்த பலரும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வருகின்றனர். இதேவேளை நாட்டில் பொது மக்கள் தாம் … Read more

நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் – கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை  கேட்டுக்கொண்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து  மக்களின் நாளாந்த  தேவைக்கு ஏற்ற அளவில் நீரை சுத்திகரித்து விநியோகிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையினை கருத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிளிநொச்சி, முல்லைத்தீவு அலுவலகம் தெரிவித்துள்ளமை … Read more

127 பிறப்புச் சான்றிதழ்கள், 315 குடியுரிமைச் சான்றிதழ்கள் மற்றும் 34 ஆர்.ஆர்.பி. கடவுச்சீட்டுக்கள்

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் 127 பிறப்புச் சான்றிதழ்கள், 315 குடியுரிமைச் சான்றிதழ்கள் மற்றும் 34 ஆர்.ஆர்.பி. கடவுச்சீட்டுக்களை முறையே 2022 மார்ச் 11, 22 மற்றும் 29 ஆகிய திகதிகளில் சான்சரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று விஷேட கொன்சியூலர் முகாம்களில் வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி, கோவை மாவட்டம் பூலுவப்பட்டி, ஈரோடு மாவட்டம் பவானிசாகர், அறச்சலூர், சேலம் மாவட்டம் பவளத்தானூர், மதுரை மாவட்டம் ஆனையூர், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, புழல் ஆகிய இடங்களில் … Read more

நாடாளுமன்ற சுற்றுவட்டாரத்தில் வெடித்தது போராட்டம் (Live)

நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நாடாளுமன்றத்திற்கு எதிரே உள்ள ஒரு பாதை மூடப்பட்டுள்ளது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன. ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். Source link