நாட்டின் இன்றைய நிலை தொடர்பில் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்மானம்

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுடன் கூடி கலந்தாலோசித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சற்று முன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்த கட்சி தலைவர்களின் கூட்டம் ஏற்கனவே 12.00 மணிக்கு நடைபெறவிருந்ததாக குறிப்பிட்ட சபாநாயகர் தற்பொழுது 2.00 மணிக்கு கூட்டம் நடைபெற ஏற்பாடாகி இருப்பதாக தெரிவித்தார். இன்று காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் கூடியது. வழமையான அலுவல்களை தொடர்ந்து … Read more

குடும்பத்துடன் ஹெலிகொப்டர் மூலம் சென்ற அரசியல்வாதி…!

 கேகாலை நிதஹாஸ் மாவத்தையில் இன்று காலை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கேகாலை சுதந்திர மாவத்தையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடிக்கொண்டிருந்த போது தனியார் விமான சேவைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று கேகாலை மாநகர சபை மைதானத்தில் தரையிறங்கியுள்ளது. கேகாலையைச் சேர்ந்த பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரும் அவரது குடும்பத்தினரும் ஹெலிகொப்டரில் அப்பகுதியை விட்டு வெளியேறியதாக கேகாலை பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறித்த உலங்குவானூர்தி புறப்பட்டு கண்டி நோக்கி பயணித்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். கேகாலை மாவட்ட … Read more

சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகம்

ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, லாவ் காசை ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வந்திருப்பதாக லாவ் காஸ் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. அதனை இறக்குவதற்கு தேவையான வங்கி நடவடிக்கைகளை இலங்கை வங்கி மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாகவும் நிறுவன பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளிகள் தப்பிக்க முன்னர் விமான நிலையத்தை உடன் மூடுங்கள்! பகிரங்க கோரிக்கை

தற்போதைய சூழ்நிலையில் குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் விமான நிலையத்தை மூட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். Source link

இன்றும் சில இடங்களில் 100 மி.மீ பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்05ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022ஏப்ரல் 04ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் … Read more

வன்முறை ,குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்படுவோர் கைதுசெய்யப்படுவார்கள்

ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது வன்முறை மற்றும் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்படு நபர்கள், குழுக்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. எவருக்கும் அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொள்வதற்கு உரிமை உள்ளது. எனினும், குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்படுவதற்கு எவருக்கும் அனுமதியில்லை. அதேபோல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடுவோர் எதிர்காலத்திலும் கைது செய்யப்படுவர்! பொலிஸார் விசேட அறிவிப்பு

வன்முறை மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் குழுக்கள் கைது செய்யப்படுவது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. போராட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபட்ட  பலர்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலர் காணொளி ஆதாரங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எதிர்வரும் காலங்களிலும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அந்த பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைதியான முறையில் எவரேனும் போராட்டம் நடத்தலாம், எனினும் அது கலவரம் மற்றும் வன்முறையாக மாறினால்   கலவரம் மற்றும் வன்முறைச் … Read more

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

பாராளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. தொடர்ச்சியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08 ஆம் திகதி) வரை பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை மீதான விவாதம் எதிர்வரும் எட்டாம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.      

கொழும்பிலுள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் டொலர் ஒன்றின் பெறுமதி 410 ரூபா

கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள சூதாட்ட விடுதியொன்று ஊரடங்கு காலப்பகுதியிலும் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைய நாட்களில் மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் குறித்த சூதாட்ட விடுதி தொடர்ந்தும் இயங்கியுள்ளது. வெளியே பொருத்தப்பட்டுள்ள விளக்குகளை அணைத்துவிட்டு, சூதாட்ட விடுதியை வெற்றிக்காக நடத்தி சென்றுள்ளார்கள் என தெரியவந்துள்ளது. எனினும், அப்போது அங்கு அதிகளவான மக்கள் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. அன்றைய தினங்களில் … Read more

நாமல் ராஜபக்சவும் நாட்டைவிட்டு வெளியேறினார்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த நாமல் ராஜபக்ச, அன்றிரவே டுபாய் சென்றுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக நாமல் ராஜபக்சவின் குடும்பத்தினர் (மனைவி, மகன் மற்றும் மாமியார்) ஏப்ரல் 2ம் திகதி வெளிநாட்டிற்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. நாட்டில் ஏற்பட்டுள்ள … Read more