நாட்டை விட்டு வெளியேறினார் நிஸ்ஸங்க சேனாதிபதி!

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவருமான நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் மாலைதீவுக்கு சென்றுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அவர் விமான நிலையத்திற்கு வந்தபோது, விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தின் அனைத்து பாதுகாப்பு கமராக்கள் கொண்ட கமரா அமைப்பு செயலிழந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை 8.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் இருந்து புறப்பட்ட அவர் UL102 … Read more

சிரேஷ்ட பேராசிரியர் சோ.சந்திரசேகரம் காலமானார்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம் தமது 77ஆவது வயதில் காலமானார். மாரடைப்பு காரணமாக, காலி-பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று (04) காலை காலமானார். பேராசிரியர் சோ.சந்திரசேகரம் 1944, டிசம்பர் மாதம் பதுளையில் பிறந்தார். பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானின் ஹிரோசிமா பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்பை மேற்கொண்ட இவர், இலங்கையின் தமிழ் கல்வித்துறைக்கு பாரிய பங்களிப்புக்களை செய்திருந்தார். தேசிய கல்வி ஆணைக்குழுவின் முன்னாள் அங்கத்தவராக பேராசிரியர் சோ.சந்திரசேகரம் பணியாற்றியதுடன், கொழும்பு தமிழ் சங்கத்தின் முன்னாள் … Read more

கோட்டாபயவை வீட்டுக்கு அழைக்கும் ஸ்பைடர் மேன்! (Photo)

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், அவர் விரைவில் பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். நாடு முழுவதும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இலங்கையை தாண்டி வெளிநாடுகளில் வசிக்கும் … Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதிவெல வீடுகள் சுற்றிவளைப்பு! (Video)

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வலுத்துள்ள நிலையில், மாதிவெல பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ வீடுகள் தற்போது சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள், எரிவாயு, மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் பொருட்களை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் நீண்ட நேரம் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: இன்றைய நிலவரம்

தமிழகத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா வைரசு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய(04) கொரோனா வைரசு தொற்று குறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று புதிதாக 20 ஆயிரத்து 29 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 34 லட்சத்து 52 ஆயிரத்து 930 பேருக்கு … Read more

அரசாங்கத்திற்கு எதிராக போராட்ட களத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்! (Photo)

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்க எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் பொது மக்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான இந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவும் அரசாங்கத்திற்கு எதிரான கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.   Source link

பாதுகாப்பு படையினரின் வகிபாகம் தொடர்பில் பாதுகாப்பு ஆலோசகர்கள் / இணைப்பாளர்களுக்கு இராணுவ தளபதி விளக்கம்

தொழிற் தகைமை மிகுந்ததாக விளங்கும் இலங்கை இராணுவம் வேறு நோக்கங்களின்றி அரசியலமைப்புக்குச் இணங்கவே செயற்படும் என இலங்கையை தளமாக கொண்ட உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் தூதரகங்களின் பாதுகாப்பு இணைப்பாளர்கள் / ஆலோசகர்களுடன் இன்று (4) நடைபெற்ற சந்திப்பில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெளிவுபடுத்தினார். பாதுகாப்பு ஆலோசகர்கள்/இணைப்பாளர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் இங்கு தெளிவூட்டப்பட்டது. அஸ்திரேலியா பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் இயன் கீத் கெய்ன், … Read more

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு…

இன்று, (04) பிற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கோரிக்கைக்கு அமைவாக மலையகப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு திட்டமிடுதல், தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபா மற்றும் ஆசிரியர் உதவியாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் … Read more

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டின் முன்னால் பதற்றம் (Photos)

முன்னாள் அமைச்சர் காமினி  லொக்குகேவின் வீட்டின் முன்னால் தற்போது பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.   பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டின் முன்னால் பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதன்போது அங்கிருந்த பேனர் ஒன்றினை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து எரித்து தமது எதிர்ப்பினை வெளியிட்டுவருவதாக குறிப்பிடப்படுகின்றது.   Source link